சேலம் ஸ்ரீ வேனுகோபாலசாமி தேவஸ்தானத்தில் திருக்கல்யாண உற்சவம்

 


சேலம் டவுன் சின்னக்கடை வீதி அருகே அமைந்துள்ள ஸ்ரீ வேனுகோபாலசாமி தேவஸ்தானத்தில் வேனுகோபாலசாமிக்கும் துளசி தாயாருக்கும் திருக் கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

கார்த்திகை மாத ஏகாதசி முன்னிட்டு பிருந்தாவன லட்சுமி ‌ துளசி தாயாருக்கு வருடத்துக்கு ஒருமுறை திருக்கல்யாணம் நடைபெறும் இந்த ஆண்டும் அதே போல் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

தெய்வங்களுக்கு புது பட்டாடை நறுமண மலர் மாலைகள் கற்கள் பதித்த நகை ஆபரணங்கள் கிரீடம் அணிவிக்கப்பட்டு சிறப்பாக அலங்காரம் செய்திருந்தனர் இதனை தொடர்ந்து மகா யாகம் வளர்க்கப்பட்டு மாங்கல்யத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு துளசி தாயாருக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது 

இதை தொடர்ந்து மாலை மாற்றுதல் வைபோம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து கோபுர ஆரத்தி நட்சத்திர ஆரத்தி பல்வேறு விதமான தீபாராதனை காட்டப்பட்டு ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பாக அனைவரும் அன்னதானம் வழங்கப்பட்டது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி