கோவில்பட்டி அருகே பெண் உள்பட 2 பேர் வெட்டி படுகொலை


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள பூதலாபுரத்தில்  இருவர் வெட்டி படுகொலை பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி வயது 50. அதே பகுதியை சேர்ந்தவர் பிச்சையா மனைவி ராஜாமணி வயது 68 

நேற்று நள்ளிரவு இருவரும் தங்களது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். அதிகாலை அவ்வழியாகச் சென்ற கிராம மக்கள் இதனை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காடல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி