ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழக பொன்விழா, மற்றும் புத்தக வெளியீட்டு விழா - அமைச்சர் மேயர் பங்கேற்பு.!


தூத்துக்குடி மாநகரில் ஐம்பது ஆண்டுகள் வெற்றிகரமாக பயணித்து சாதனைகள் பல படைத்துள்ள ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழக பொன்விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியானது தூத்துக்குடியில் நேற்று பாஸ்கரா திருமண மஹாலில் வைத்து நடைபெற்றது.


பொன்விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ஐம்பது ஆண்டுகள் வெற்றிகரமாக பயணித்து சாதனைகள் பல படைத்துள்ள ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழக பொன்விழா மலர் புத்தகத்தை வெளியிட்டார்.  மேயர் ஜெகன் பெரியசாமி அதை பெற்றுக் கொண்டார்.


இறுதியில் கால்பந்து வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் கோப்பை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கால் பந்தாட்ட வீரர்களுக்கு கௌரவிக்கப்பட்டது

 


நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனீட்டா செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி