திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே மொப்பட் மீது கார் மோதி விபத்து - இருவர் பலி.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


பொங்கலூர் அருகே உள்ள    கோயில்பாளையம்புதூரை சேர்ந்த விவசாயி சின்னராமசாமி(65). இவருக்கு அவினாசிபாளையத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் இன்று வழக்கம்போல் தோட்ட வேலைக்காக கோவில்பாளையத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளியான மனோகரன்(60) என்பவருடன் மொப்பட்டில் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

 பின்னர் வேலையை முடித்துவிட்டு இருவரும் மொப்பட்டில் திரும்பிக்கொண்டிருந்தனர். மொப்பட் திருப்பூர் தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது திருப்பூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த சொகுசுக்கார் மொபெட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மொப்பட்டில் வந்த  இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அவினாசிபாளையம் காவல்துறையினர் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலேன்ஸ் மூலம் அனுபி வைத்தனர். பின்னர் மருத்துவமனையில் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சின்னராமசாமி மற்றும் மனோகரன் ஆகிய இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் சொகுசு கார் ஓட்டுநர் அழகு என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி