தூத்துக்குடியில் தேவர் ஜெயந்திவிழா -அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.!

தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115வது ஜெயந்தி விழாவையொட்டி 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதனையொட்டி வஉசி பேரவை சார்பில் கீதா செல்வமாரியப்பன் தலைமையில் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் பேராசிரியர் வேலம்மாள், மகளிர் அணி செயலாளர் கோமதி, நிர்வாகிகள் சுப்பிரமணிசிவா, சண்முகப்பிரியா, மீனா, சாந்தி, இசக்கிமுத்து பிள்ளை, உள்பட பலர் கலந்து கொண்டனர். ஐஜேகே கட்சி தென்மண்டல பொறுப்பாளர் அருணாதேவி மாலை அணிவித்தார். 

மாப்பிள்ளையூரணயில் முத்துராமலிங்க தேவர் 115வது பிறந்தநாளையொட்டி டேவிஸ்புரத்தில் அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவுகடன் சங்க தலைவருமான கிழக்கு பகுதி திமுக ஓன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர்.

விழாவில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம்,

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, சக்திவேல், திமுக கிளைச்செயலாளர்கள் காமராஜ், வெற்றிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஒன்றிய துணைச்செயலாளர் ராமசந்திரன், மற்றும் கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!