கராத்தே பிரீமியர் லீக் போட்டியில் தூத்துக்குடி ஸ்பிக் நகர் மாணவர்கள் சாதனை.!

 

மதுரை காமராஜர் பல்கலைக்கழக உள் அரங்கத்தில்  நடைபெற்ற 2வது பிரீமியர் லீக் கராத்தே   போட்டியில் தமிழகத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.   இப்போட்டியின் தலைமை நடுவராக சோபுக்காய் கோஜுரியு கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி.   சுரேஷ்குமார் செயல்பட்டார் .இதில் ஸ்பிக்நகரை சேர்ந்த மாணவர்கள்  மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா தலைமையில்  கட்டா மற்றும் சண்டை பிரிவில் பங்கேற்று 8 தங்கப்பதக்கம் 8 வெள்ளிப் பதக்கம் 6 வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர் .வெற்றி பெற்ற  மாணவர்களை தூத்துக்குடி மாவட்ட  சோபுக்காய் கோஜுரியு கராத்தே சங்கத்தின் கராத்தே தலைவர்  சென்சாய் செந்தில் மாவட்டத் துணைத் தலைவர் பாலாஜி, மற்றும் பெற்றோர் பாராட்டினர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி