காங்கயம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலி...30 பேர் படுகாயம்

 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த நான்கு பேர் உயிரிழப்பு  -  முப்பதுக்கு மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஓலப்பாளையத்தை சேர்ந்தவர்கள் கொடுமுடி கோவிலுக்கு திதி கொடுக்க இன்று அதிகாலை சென்றுள்ளனர். திதி கொடுத்துவிட்டு மீண்டும் காங்கேயம் அருகே ஓலப்பாளையம் பகுதியிணை  நோக்கி வந்து கொண்டிருந்தபோது முத்தூர் செல்லும் வழியில் உள்ள வாலிபனங்காடு என்ற இடத்தில் திதி கொடுக்க சென்றவர்கள் வந்த சரக்கு வேன் மீது எதிரே வந்த லாரி மோதி உள்ளது.  இதில் சரக்குவேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சரக்கு வேனில் பயணித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கிட்டுசாமி ,  பூங்கொடி , தமிழரசி , சரோஜா ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர் மேலும் சரக்கு வேணி பயணித்துக் கொண்டிருந்த 30க்கும் மேற்பட்டார் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் . இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்



Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி