Posts

Showing posts from April, 2023

சித்திரைத் திருவிழாவின் 6ம் நாள்...மீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷப வாகன ஊர்வலம்

Image
சித்திரைத் திருவிழாவின் 6ம் ளான வெள்ளிக்கிழமை சுந்தரேஸ்வரரும், மீனாட்சியம்மனும் ரிஷப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருஞானசம்பந்தர் மூன்று வயது பாலகனாக இருந்த போது, அவரது தந்தை சிவபாத இருதயர் சீர்காழி தோணியப்பர் கோவிலுக்கு அழைத்து சென்றார். குளக்கரையில் அமர வைத்து விட்டு நீராட கிளம்பினார். நீண்ட நேரமானதால் பசியால் வாடிய சம்பந்தர் அழுதார். அவருக்கு பாலூட்ட அம்பிகையோடு சிவன் அங்கு வந்தார். சம்பந்தரை தூக்கிய அம்பிகை பொற் கிண்ணத்தில் ஞானப்பால் கொடுத்து விட்டு அங்கிருந்து மறைந்தனர்.  கரையேறிய சிவபாத இருதயர், பால் சிந்திய வாயோடு நின்ற சம்பந்தரிடம், உனக்கு பாலூட்டி யது யார்? என கோபித்தார். அப்போது சம்பந்தர், தோடுடைய செவியன், என்ற முதல் தேவாரப் பாடலை பாட, அம்மையப்பராக ரிஷப வாகனத்தில் காட்சியளித்தனர். அதனை இன்று நாம் தரிசிப்பதாக ஐதீகம். ஞானசம்பந்தரின் தந்தைக்கு காட்சியளித்தது போல், இன்று அம்மனும்  சுவாமியும், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர்.

தாய்லாந்தில் 12 பேரை விஷம் கொடுத்து கொன்ற கர்ப்பிணி பெண் கைது.

கர்ப்பிணி பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்கள் 12 பேரை சயனைடு கொடுத்து கொன்ற சம்பவம் தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது. தாய்லாந்து நாட்டைச்சேர்ந்த சரத் ரங்சிவுதாபோர்ன், 32 என்ற பெண், கடந்த 14-ம் தேதியன்று தனது ஆண் நண்பர் சிரிபோர்ன் கான்வோங்க் என்பவருடன் ரட்சபுரி மாகாணத்தில் புத்த தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது உடன் வந்த ஆண் நண்பர் சிரிபோர்ன் கான்வோங்க் திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் திடீர் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால், பிரேத பரிசோதனை நடத்தியதில் உடலில் கொடிய விஷமான சயனைடு கலந்திருப்பது தெரியவந்து. இது தொடர்பாக சரத் ரங்சிவுதாபோர்ன், 32 என்பவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் கடந்த 2020 முதல் சரத் ரங்சிவுதாபோர்னுடன் தொடர்பில் இருந்த 12 ஆண் நண்பர்கள் இதே போன்று விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருப்பதும் , தற்போது அப்பெண் கர்ப்பிணியாக இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதி கேரக்டருக்கு வேலை இல்ல.. கதையையே மாத்திட்டீங்களே மணி சார்... - பொன்னியின் செல்வன் - 2 விமர்சனம்

Image
 ’பொன்னியின் செல்வன்’  இந்த பேரைக்கேட்டாலே ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஒரு கூஸ்பம்ப்ஸ் இருக்கும். அதிலும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படிச்சவங்களுக்கு, சொல்லவே வேண்டாம். மனசுலயே கோட்டை கட்டி அதில ராஜ ராஜ சோழனின் சாம்ராஜ்யத்தை ரசிச்சுக்கிட்டு இருப்பாங்க.  அதுலயும் அந்த ஆதித்த கரிகாலன் கேரக்டர்., வேற லெவல்.. வரிக்கு வரி வரணனையால்  தூள் கிளப்பி இருப்பார் கல்கி. அப்படி  கொஞ்சம் கற்பனையும், கொஞ்சம் வரலாறும் கலந்த கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவ எடுக்க பலபேரும் ஆசைப்பட்டு, களத்துலயும் இறங்கினாங்க. நம்ம எம்.ஜி.ஆர்., கூட  பொன்னியின் செல்வன் படத்துல நடிச்சாரு. அப்புறம் அவருக்கு ஏக்சிடெண்ட் ஆனதால கிடப்புல போட்டுட்டாங்க. கடைசில ஒரு வழியா மணிரத்னம் இந்த படத்தை இயக்கி முடிச்சுருக்கார். முதல் பாகத்துக்கு பலதரப்பட்ட விமரசங்கள் வந்துச்சு. இன்னிக்கு ரெண்டாம் பாகத்தை ரிலீஸ் பண்ணிருக்காங்க.  படத்தை பார்க்கலாம்னு போனவங்க பலருக்கும் இந்த டிக்கெட் கட்டண வசூல்ல ஒரு பெரிய அலும்பல் ப...

பெரும் பனிப்பொழிவுக்கு மத்தியில் பத்ரிநாத் கோவில் தரிசனத்துக்காக திறப்பு... நான்கு புண்ணியதல யாத்திரை முழுமையாக ஆரம்பம்

Image
இந்துக்களின் புண்ணிய தலங்களான நான்கு புண்ணிய தல யாத்திரை இன்று பத்ரிநாத் கதவுகள் திறக்கப்பட்டதன் மூலம் முழுமையாக தொடங்கி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை தொடரில், கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு புண்ணிய தலங்கள் உள்ளன. இந்த கோவில்கள் சார்தாம் என்று இந்தியில் அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, தீபாவளி வரை இந்த கோவில்களில் பக்தர்கள் புனித யாத்திரை சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் கடந்த 22 ஆம் தேதி கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி தரிசனத்துக்காக திறக்கப்பட்டது.  25 ஆம் தேதி கேதர்நாத் திறக்கப்பட்டது. 27 ஆம் தேதியான இன்று பத்ரிநாத்தின் கதவுகளும் தரிசனத்துக்காக திறக்கப்பட்டு உள்ளது.  கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்கள் உள்ள பகுதிகள் இமயமலையின் உச்சிப்பகுதியில் இருப்பதால் பெரும் பனி பொழிகிறது. பனித்தூவலுக்கும், குளிருக்கும் மத்தியில் இந்த கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளன. பல்லாயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்து வருகிறார்கள்.  பத்ரிநாத் கோவில் 108 திவ்யதேசங்களில் 99 வது திவ்யதேசமாகும். இங்கு சாளக்கிரம...

திருப்பூரில் இரண்டாவது சம்பவம்... அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்

Image
  திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 3 நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டது. உதவி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் லட்சக்கணக்கான வடமாநிலம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். தொழிலாளர்கள் அதிகளவு வசித்து வருவதால் தங்களுக்கு உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தான் செல்வார்கள். இதனால் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளியாகவும், புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் அதிகளவு வசித்து வருவதால் மகப்பேறு சிகிச்சைக்கு ஏராளமானவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள். இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (26). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கமலினி (24). இவர்கள் பல்லடம் ...

ஆணையாளரை தாக்கியதாக புகார்... புளியம்பட்டி நகராட்சி தலைவர் மீது நடவடிக்கை கோரி நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Image
சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சை புளியம்பட்டி, நகராட்சியில் உள்ள சந்தையில், சுமார் 70, 80 ஆண்டுகளுக்கு மேலாக, மாட்டு இறைச்சி கடை செயல்பட்டு வந்தது. இந்த கடைகளை எந்தவித முன்னறிவிப்புமின்றி,  திடீரென நகராட்சி நிர்வாகத்தால், இரவோடு இரவாக ஆறு கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதனை கண்டித்து, மாட்டு இறைச்சி வியாபாரிகள் மற்றும் சிபிஎம் உள்ளிட்ட அமைப்புகள், அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.  இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணையாளர் அறைக்கு சென்ற திமுக நகராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் ஆணையாளர் சையது உசேனை முற்றுகையிட்டு, ஒருமையில் பேசி, அவரை தள்ளியதாக கூறப்படுகிறது.   ஆணையாளரை தாக்கிய நகர்மன்ற தலைவர் ஜனார்த்தனன், நகர் மன்ற துணைத் தலைவர் சிதம்பரம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி  நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக, தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர் சங்க,மாநிலத் த...

ரம்ஜானை முன்னிட்டு திருப்பூரில் அமமுக சார்பில் 500 பேருக்கு குக்கர், அரிசி... முன்னாள் மேயர் அ.விசாலாட்சி வழங்கினார்

Image
 திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 500க்கும் மேற்பட்டோருக்கு குக்கர், அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முன்னாள் மேயர் விசாலாட்சி வழங்கினார். திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூர் சிடிசி கார்னரில் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அமமுக தேர்தல் பிரிவு துணை செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி 500க்கும் மேற்ப்பட்டோருக்கு குக்கர், அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.  இந்த விழாவில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி பேசும்போது,  மதம் பாராமல், ஜாதி பாராமல் இருந்த அம்மா அவர்களின் வழியில் தான் மக்கள் செல்வர் டிடிவி.தினகரன் செல்கிறார். பாஜக செய்கிற தவறுகளை என்றைக்கும் சுட்டிக்காட்டுகிற தலைவராக இருப்பேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் என்று எந்த விழா வந்தாலும் அந்த விழாவில் மக்களை சந்தித்து மக்களோடு கொண்ட...

பூமலூர் அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு "மை இந்தியா மை ஸ்கூல்" சார்பில் உதவி

Image
பூமலூர் அரசுப்பள்ளி மாணாக்கர்கள் கடந்த பல ஆண்டுகளாக டேபிள் டென்னிஸ் விளையாட்டில் குறுமையம், கல்வி மாவட்டம் மற்றும் மாநில அளவில் பங்கேற்று விளையாடி தொடர்ந்து பரிசுகள் பெற்று வருகின்றனர். இவர்கள் பயிற்சிபெற ஏதுவாக டேபிள் டென்னிஸ் போர்டு, வாலிபால் & விளையாட்டு பயிற்சி ஷூக்களை காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் மை இந்தியா மை ஸ்கூல் ட்ரஸ்ட் அமைப்பாளர் மோகனகிருஷ்ணா ஆகியோர், அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியரும், டேபிள் டென்னிஸ் பயிற்சியாளருமான செல்வக்குமாரரிடம் நேரில் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சாதனை படைத்த வீரர்கள் பலர் உடனிருந்தனர்.  இதுகுறித்து "ஃபைவ் ரிங்க்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின்" பயிற்சியாளர் செல்வக்குமார் கூறியதாவது... நான் அரசுப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக கடந்த 2014 முதல் பணியாற்றி வருகிறேன். விளையாட்டில் ஈடுபாடு உள்ள காரணத்தால் ஓய்வு மற்றும் பள்ளி நேரத்திற்குப்பிறகு மாணாக்கர்களுக்கு டேபிள் டென்னிஸ் விளையாட்டை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். நான் அந்த விளையாட்டின் வீரர் அல்ல. ஆனால் எனக்கு அந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும். இலவசமாக சொல்லிக்கொட...

மாநிலம் முழுவதும் நடத்திய சோதனையில் 51 போலி மருத்துவர்கள் கைது!

Image
  தமிழ்நாட்டில் போலி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து காவல்துறையினரும், மருத்துவ துறையினரும் இணைந்து கடந்த 3 நாட்கள் நடத்திய சோதனையில் மாநிலம் முழுவதும் 51 போலி மருத்துவர்கள் கைது! அதிகபட்சமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் 15 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்! கேரளா, ஆந்திராவில் மருத்துவராக பயில்வதற்கான விதிகள் வேறாக இருப்பதால், சிலர் தமிழ்நாட்டு விதிகளுக்கு உட்படாமல் தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சட்ட விரோதமாக மருத்துவர்களாக பணியாற்றுவதாக அதிகாரிகள் விசாரணையில் தகவல்! மேலும் இது போன்ற போலி மருத்துவர்களை கண்டறியும் பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை செயலர் உத்தரவு!

காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு!

Image
  டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்த நிலையில், ஒன்றிய அரசு தற்போது இத்திட்டத்தினை ரத்து செய்துள்ளது! நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததை அடுத்து திட்டத்தை கைவிட்டது ஒன்றிய அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு! தமிழ்நாடு அரசு விரைந்து எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்தாகி உள்ளது என டெல்டா விவசாயிகள் நன்றி!

வேகம் எடுத்த கோவை - சென்னை வந்தே பாரத் டிக்கெட் முன்பதிவு.

Image
கோவை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோதி நாளை தொடங்கி வைக்கிறார்.  ஏப்ரல் 9-ம் தேதி முதல் இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது. வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.  8 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ள இந்த ரயிலில் மொத்தம் 530 இருக்கைகள் உள்ளது இதில் 180 டிகிரி வளையக்கூடிய 52 எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் இருக்கைகளும், 478 சேர் கார் இருக்கைகளும் உள்ளது.  இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்ட நிலையில் பயணிகள் மிகவும் ஆர்வம் காட்டியதை அடுத்து சில நிமிடங்களிலேயே வெயிட்டிங் லிஸ்ட் எட்டியது. எக்ஸிக்யூட்டிவ் சேர் காரை பொதுமக்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸிக்யூடிவ் சேர் ரூபாய் 2325, சேர் கார் ரூபாய் 1280 என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் ரூ.32.68 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் : மூன்று அதிகாரிகள் மீது வழக்கு பதிவு - லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை.!

Image
  இராமநாதபுரம் பொதுப்பணித் துறை  செயற் பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில்  வாகனம் மற்றும் ஓய்வு அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.32.68 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக  மூன்று அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பத்திரிக்கையாளர் நல வாரியம் : 90 சதவீத பத்திரிக்கையாளர்கள் உறுப்பினராக சேர முடியாத நிலை - முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக எம்எல்ஏ கோரிக்கை.!

Image
  பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் 90 சதவீத பத்திரிக்கையாளர்கள் உறுப்பினராக சேர முடியாத நிலை இருப்பதாகவும் இதில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கேட்டுக்கொண்டு உள்ளார். பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வரியை ரத்து செய்வதுடன் அவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த மேட்டூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சதாசிவம் சட்டபேரவையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அரசு வழங்கிய அங்கீகார அட்டை உள்ளவர்கள் மட்டுமே பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர முடியும் என்ற விதி வகுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஏறக்குறைய 90 சதவீத பத்திரிகையாளர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற உறுப்பி...

கேதர்நாத் ஹெலிசேவை எப்போது தொடங்கும்? மலைப்பாதையில் பனிப்படலம் அகற்றும் வேலையும் தீவிரம்!

Image
இமயமலையில் 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது கேதர்நாத் கோவில். ஜோதிர்லிங்க கோவிலாக இருக்கும் இந்த கோவில் ஒவ்வொரு ஆண்டிலும் உறைபனியால் மூடப்பட்டு விடுவதால் மே மாதம் முதல், நவம்பர் மாதம் வரை பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுக்கிறார்கள். இமயமலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கிற கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்களும் நான்கு புண்ணியதல யாத்திரை (சார்தாம் யாத்ரா)  என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.  இந்த நிலையில் 2023ம் ஆண்டு இந்த நான்கு புண்ணிய தல யாத்திரைக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வருகிற ஏப்.25 ஆம் தேதி கேதர்நாத் கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது. ஏப்.27ல் பத்ரிநாத் கோவில் திறக்கப்படுகிறது. இது தவிர கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரியும் இந்த மாத இறுதியில் திறக்கப்படுகிறது. கேதர்நாத் கோவில் 13 ஆயிரம் அடி உயர பனிமலையில் அமைந்துள்ளதால், அந்த கோவிலில் சாமிதரிசனம் செய்ய சுமார் 19 கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டி இருக்கும். இங்கு குதிரைகளிலும், பாணி எ...

நிலக்கரி இறக்குமதியில் ரூ.564 கோடி மோசடி வழக்கு - தனியார் நிறுவன இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி

Image
  நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத் தில் 564.48 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜி மற்றும் அதன் இயக்குநரான அகமது ஏ.ஆர்.புகாரி ஆகியோர் மீது கடந்த 2018ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த மோசடி மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அகமது புகாரி சட்டவிரோதமாக தனது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி மீண்டும் இந்திய நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்ததாக கடந்த 2022 மார்ச் மாதம் சட்ட விரோத பண பரிமாற்றச்ட் டத்தின் கீழ் அகமது புகாரியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில் அவர், ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஏ.கே.மெகபூப் அலிகான் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அகமது புகாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய் யப்பட்டுள்ளார். ஓராண்டு ஆகியும் விசாரணை முடி யாததால் சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க வேண்டுமென்று வாதிட்டார். அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, அகமது புகாரி மீதான விசாரணை முடிந்துவிட்டாலும், அவருடன் தொடர்ப...

சென்னை- கோயில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழப்பு - தீர்த்தவாரி பூஜையின்போது விபரீதம் !

Image
  சென்னை பழவந்தாங்கல் அருகே கோயில் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி பூஜையின்போது நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர். பழவந்தாங்கல் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலின் பங்குனி மாத தீர்த்தவாரி பூஜை, இன்று காலை மூவரசம்பேட்டை கோயில் குளத்தில் நடைபெற்றது. மொத்தம் 25 தன்னார்வலர்கள் கோயில் குளத்தில் வைத்து சுவாமி சிலையை பூஜித்தபோது ஒருவர் நீரில் மூழ்க அவரை மீட்க முயன்று அடுத்தடுத்து 10 பேர் மூழ்கியதாக கூறப்படுகிறது. அவர்களில் 5 பேரை உடனிருந்தவர்கள் மீட்க மற்ற 5 பேரை சடலமாக தீயணைப்புத்துறையினர் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மீட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்தில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்க்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா இரண்டு லட்சம் உதவித் தொகையை அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது கோயில் குளத்தில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த 5 பேர...

பல் புடுங்கி பல்பீர்சிங் விவகாரம் - 3 இன்ஸ்பெக்டர்கள் ஒரு எஸ்ஐ உட்பட 6 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.!

Image
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களை பல் பிடுங்கிய விவகாரத்தில்,  அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, விகேபுரம் காவல் ஆய்வாளர் பெருமாள், சிறப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன், தலைமை காவலர் சந்தானகுமார், காவலர் மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

'Media One' க்கு ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மறுத்த மத்திய அரசின் உத்தரவு ரத்து - தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவு

Image
  தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி மலையாள செய்தி சேனல் 'Media One' க்கு ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மறுத்த மத்திய அரசின் உத்தரவை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு ரத்து செய்தது "வலுவான ஜனநாயகத்திற்கு பத்திரிகை சுதந்திரம் அவசியம்; பத்திரிகைகள் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கங்கள் கொண்டிருக்க முடியாது; அதே போல், ஒரு செய்தி நிறுவனத்தை முடக்குவதற்கு, அவர்கள் அரசாங்கத்தை விமர்சித்தார்கள் என்ற காரணம் மட்டுமே போதுமானது கிடையாது; தேசப்பாதுகாப்பு என்று கூறி குடிமக்களின் உரிமையை மறுக்க கூடாது" என்று தலைமை நீதிபதி அறிவுறுத்தல் தேசிய பாதுகாப்பு குறித்த கேள்விகளை காற்றில் இருந்து உருவாக்க முடியாது என கருத்து

கொரோனா பரவல் எதிரொலி -காணொலி மூலம் ஆஜராக வழக்கறிஞர்களுக்கு அனுமதி.!

Image
  உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் காணொலி மூலம் விசாரணையில் ஆஜராகலாம் என தலைமை நீதிபதி அறிவிப்பு. கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி தலைமை நீதிபதி சந்திரசூட் அனுமதி

பல் புடுங்கி பல்பீர்சிங் விவகாரம் - சிசிடிவி பதிவுகளை சமர்பிக்க உத்தரவு.!

Image
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் சேரன்மகாதேவி சார்ஆட்சியர் ஆய்வு விசாரணைக்கு வந்தவர்களை பல் பிடுங்கிய விவகாரத்தில் சிசிடிவி பதிவுகளை சமர்ப்பிக்க உத்தரவு

அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை..!

Image
  தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில்  தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 7ஆம் தேதி வரை மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது, அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழ்நாட்ட்டில் உள்ள வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதாவது, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை, மதுரை, சிவங்கங்கை,  விருதுநகர், புதுக்கோட்டை, தொன்காசி , கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மொத்தம் 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  

கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வெள்ளகோவிலை சேர்ந்த முதியவர் பலி... தூத்துக்குடியிலும் ஒருவர் இறப்பு

Image
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த வெள்ளக்கோவிலை சேர்ந்து முதியவர் பலி. அவரது மனைவி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா தொற்று,  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கட்டுக்குள் வந்தது.  இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.  இந்தியா மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் திருப்பூர் மாவட்டதில் இது வரை 18பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து  அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளக்கோவில் கே.பி.சி.நகர் பகுதியைச் சேர்ந்த  82 வயதான நபர் கடந்த சில தினங்களாக காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் இருந்த...

தூத்துக்குடியில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு.!

Image
  இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மருத்துவமனைகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். நேற்று புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த மாதம் 23-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பார்த்திபன் (54) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பார்த்திபனுக்கு கொரோனா பாதிப்புடன் இணை நோய் பாதிப்பு இருந்ததாகவும் மருத்துவமணை தரப்பில் கூறப்படுகிறது.

அக்கினி தனலை அள்ளி வீசி பரவசம்... 60 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்த குண்டம் திருவிழா... பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் கோலாகலம்!

Image
 அக்கினி தனலை அள்ளி வீசி பரவசம்... 60 ஆயிரம் பக்தர்கள் குண்டம் இறங்கி  தீ மிதித்த பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.  திருப்பூர் , பெருமாநல்லூர் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில்  மிகப் பிரசித்தி பெற்றது .. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பௌர்ணமி அன்று  குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது  திருவிழாவின் முக்கிய நிகழ்வான  குண்டம் இறங்கும் நிகழ்ச்சி  இன்று விடியற்காலையில் 4 மணிக்கு தொடங்கியது.  கோவில் பூசாரிகள் அக்கினி குண்டத்திலிருந்து அக்கினி தனலை அள்ளி வீசி ’கை குண்டம்’ செலுத்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினார்கள்.  தொடர்ந்து பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்று  பக்தி  கோஷம்  முழங்க  குண்டம் இறங்கி  தீ மிதித்து நேர்த்திக்கடன்  செலுத்தினர். 60 அடி நீள குண்டத்தில் சிறுவர் சிறுமியர், கைக்குழந்தையுடன் வந்த தாய்மார்கள், வயதானவர்கள் என 60 ஆயிரம் பேருக்கு மேல்...

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து பரவசம்!

Image
 சத்தியமங்கலம் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இன்று அதிகாலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தீமிதித்தனர். இதில் பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரி குண்டம் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டார். ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம், பண்ணாரியில் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகுவிமரிசை யாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து, பண்ணாரி மாரியம்மன்., சருகு மாரியம்மன்  சப்பர திருவீதி உலா, கடந்த 21-ந் தேதி இரவு முதல் பண்ணாரி மற்றும் சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்றது. கடந்த 28-ந்தேதி இரவு கோவிலை சென்றடைந்தது. இதையடுத்து கோவில் வளாகத்தில் கம்பம் சாட்டப்பட்டது. செவ்வாய்கிழமை குண்டம் இறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 நாட்களுக்கு முன்னரே வந்திருந்து குண்டம் இறங்க காத்திருந்தனர். இந்த நிலையில் திங்கட்கிழமை குண்டம் பூப்போடுதல் நிகழ்ச்சி நடந்தத...

திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் மனுகொடுக்கும் போராட்டம்

Image
பணிநிரந்தரத்தை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினார்கள். தமிழ்நாடு முழுவதும் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16,549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்திருந்த பகுதி நேர ஆசிரியர்கள் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடர் வரை எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாததால் ஏமாற்றமடைந்துள்ளனர். தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்வரும் புதன்கிழமை முதல் சென்னையிலுள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு, தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன் முன்னோட்டமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.பணிநிரந்தரம் கேட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பகுதி நேர ஆசிரியர்கள் திங்கட்கிழ...

திருநெல்வேலி எஸ்.பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் : தூத்துக்குடி மாவட்ட எஸ்பிபாலாஜி சரவணனுக்கு, திருநெல்வேலி மாவட்ட எஸ்பியாக கூடுதல் பொறுப்பு - அரசு உத்தரவு.!

Image
  திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏஎஸ்பி பல்வீர் சிங், விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவில், தூத்துக்குடி மாவட்ட எஸ்பியான பாலாஜி சரவணனுக்கு, திருநெல்வேலி மாவட்ட எஸ்பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. அதேசமயம், திருநெல்வேலி மாவட்ட எஸ்பியாக இருந்துவரும் சரவணன் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்படுகிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளரான பல்வீர் சிங், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. 10-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை அளித்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்தி அற...

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் இப்தார் நிகழ்ச்சி : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

Image
  தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் நடைபெற்ற (இப்தார்) நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார்.  தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார்.  நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "மத வேறுபாடுகளற்ற மத உணர்வை நாம் அனைவரும் மதிக்க வேண்டும், இந்நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்த பிரஸ் கிளப்பிற்கு எனது நன்றியை கூறிக்கொள்கிறேன். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் இணைந்து வாழ வேண்டும். அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.  இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பது ஏன் என்பது குறித்து,  ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் மாவட்ட தலைவர் அப்பாஸ், மற்றும் பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினர் அகமது ஜான் ஆகியோர் விளக்கி பேசினார். இந்நிகழ்வில், பிரஸ் கிளப் தலைவர் காதர் மைதீன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் மாரிமுத்து ராஜ்,  துணைத் தலைவர் லட்சுமணன், இணைச் ச...

சத்தியமங்கலம் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திரு விழா-பாதுகாப்பு பணியில் 1,650 போலீசார்

Image
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பண்ணாரியில்,பிரசித்திபெற்ற, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா செவ்வாய் கிழமை  நடைபெற உள்ள நிலையில், விழாவையொட்டி, பண்ணாரி மாரியம்மன் கோவிலில் 1,650 போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தபட வுள்ளனர். குண்டம் திரு விழா கடந்த 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து, அம்மன் சப்பரத் தில் எழுந்தருளி, சப்பர திருவீதி உலா, கடந்த 21-ந் தேதி இரவு முதல் பண்ணாரி மற் றும் சத்தியமங் கலத்தை சுற்றி யுள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங் களில்நடைபெற்று கடந்த 28-ந்தேதி இரவு கோவிலை சென்றடைந்தது. இதையடுத்து கோவில் வளாகத் தில் குழி கம்பம் சாட்டப்பட்டது. குண்டம் திருவிழா வின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நாளை செவ்வாய்க் கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்த, ஞாயிற்றுகிழமை அதிகாலை முதலே, குண்டம் இறங்க வரிசை யில் காத்திருக்கி ன்றனர்.  மேலும் பாதயாத்திரையாக, ஆண்களும், பெண்களும், விரதமிருந்து நடைபயணமாக குண்டம் இறங்க வந்தவண்ணம் உள்ளனர். லட்சக் கணக்கான ப...

தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாத திமுக... பகுதிநேர ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

பகுதி நேர ஆசிரியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் பழ.கெளதமன் வெளியிட்டுள்ள அறிக்கை: 2012 முதல் அரசுப்பள்ளிகளில் தற்காலிக  ஆசிரியர்களாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. திமுக ஆட்சி அமைந்த உடன் நாங்கள் விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவோம் என சந்தோசப்பட்டோம்.கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் எங்களுக்கான பணிநிரந்தர அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்தோம்.இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையிலாவது எங்களுக்கான நல்லதொரு அறிவிப்பு வரும் என்று ஆவலோடு 12,000 ஆசிரியர்களும் காத்திருந்தோம்.ஆனால் இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் எங்களைப் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாதது கண்டு மனம் வேதனை அடைகிறோம்.  வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டும் வேலைக்கு செல்வதால் எங்களுக்கு பள்ளியிலும்,சமூகத்திலும் ஏன் வீட்டிலும் கூட மரியாதை இல்லை.எனவே உடனடியாக பணிநிரந்தரம் செய்ய இயலாத பட்சத்தில் தற்காலிக தீர்வாக ஊதியத்தை உயர்த்தி அனைத்து வேலை நாட்களிலும் முழுநேர வேலையாவது வழங்குங்கள் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.அமைச்சரும்...

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத அறப்போராட்டம்!

Image
 தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பாக 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய  ஒரு நாள் கவன  ஈர்ப்பு உண்ணாவிரத அறப்போராட்டம் வருகின்ற 3 ந்தேதி  (திங்கள்) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.  இதுகுறித்து, இந்த சங்கத்தின், மாநில செயற்குழு உறுப்பினர் இரா.ரகு, ஈரோடு மாவட்ட தலைவர் லோ.சங்கர், ஈரோடு மாவட்ட செயலாளர்  ந.ஜீவானந்தம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து கூறியதாவது: 1. தற்பொழுது  நடைமுறையில் இருந்து வரும் 1002 தனித்திட்ட சுகாதார ஆய்வாளர்கள் நிலை-1 காலிப்பணியிடங்களை தொடர்ந்து நிரப்பிக்கொள்ள  ஒப்புதல் கேட்டு அரசுக்கு  இயக்குநர் அவர்களால் வைக்கப்பட்ட  கருத்துருவிற்கு (R.No.80083/MP.1/S1/2020 Dt. 11.12.2020) ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட வேண்டும் 2. இளைய சுகாதார ஆய்வாளர்கள் கட்டமைப்பை விரிவுபடுத்திட  இரண்டு சுகாதார நிலையத்திற்கு ஒரு சுகாதார ஆய்வாளர்கள் நிலை-2  வீதம் 2715 சுகாதார ஆய்வாளர்கள் நிலை-2 பணியிடங்களை உருவாக்கி இயக்குநர் அவர்களால் அரசுக்கு வைக்கப்பட்ட கருத்து...