கார்-லாரி மோதல்... 2 வயது குழந்தை உள்பட 3 பேர் பலி

கார்- லாரி மோதிய விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட மூன்று பேர்  பரிதாபமாக பலியானார்கள்.

சிவகங்கை, வாக்குடியை சேர்ந்த கணேசன்காரில் கரூருக்கு சென்று விட்டு தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, காரைக்குடி அருகே  அமராவதிபுதூரில் அவர் வந்து கொண்டு இருந்த போது, காரைக்குடி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எதிரில் வந்த லாரியின் மீது கார் மோதியது. இந்த விபத்தில் கணேசன் அவருடன் வந்த பெண் மற்றும் 2 வயது பெண் குழந்தை ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

கார் ஓட்டி வந்த டிரைவர் படுகாயத்துடன் காரைக்குடி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  மூன்று  உடலை கைப்பற்றிய சோமநாதபுரம் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி