அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுடன் எம் எல் ஏ நேரில் சென்று ஆய்வு....

 ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம்  சின்னத்தம்பி பாளையம் ஊராட்சி பிச்சைப்பாளிமேடு பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனு வந்ததன் அடிப்படையில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் 



சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது பொதுமக்களுக்கு  சுத்திகரிக்கப்பட்ட ஆற்று குடிநீர் சரிவர வருவதில்லை என்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தால் தங்கள் வசிக்கும் பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.


இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம்  பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட ஆற்றுக் குடிநீர் மற்றும் போதிய அடிப்படை வசதிகளை விரைவில் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.



தமிழ் அஞ்சல் செய்தியாளர் என். நரசிம்மமூர்த்தி.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி