திருப்பூரில் 70 வயது மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை...பணம் நகைக்காக வீட்டில் குடியிருந்த நபரே கொலை செய்ததால் பரபரப்பு

 திருப்பூரில் 70 வயது மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை...பணம் நகைக்காக வீட்டில் குடியிருந்த நபரே கொலை செய்ததால் பரபரப்பு 

திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மண்ணரை பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணியம்மாள்.  70  வயதான இவர் கணவனை இழந்தநிலையில்  வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். மேலும் மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் வருமானம் மூலம் தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். 

இவரது வீட்டில் செந்தில்குமார் (40) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் மணியம்மாவிடம் அதிகமான பணம் இருப்பதாகவும், அதனை கொள்ளை அடிக்கலாம் என்று செந்தில்குமார் திட்டமிட்டுள்ளார். இதற்காக தன்னுடன் பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மதுரையைச் சேர்ந்த போத்திராஜன், சதீஷ், ஆகியோரை அழைத்து வந்துள்ளார். மூவரும் சேர்ந்து நேற்று இரவு மூதாட்டி மணியம்மாளை கழுத்தை  நெரித்து கொலை செய்து உள்ளனர். மேலும் அவரது வீட்டில் இருந்த ரூ. 2000 பணம், 3 கிராம் நகை மற்றும் செல்போனை திருடி சென்றுள்ளனர்.

சிசிடிவி கட்சியில் பதிவான ஆதாரங்களை வைத்து திருப்பூர் வடக்கு போலீசார் மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி