தமிழ் பாரம்பரிய கலைகள் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து 8 மணி நேரம் பதினைந்து நிமிடம் 44 மாணவ மாணவிகள் இணைந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை

தமிழ் பாரம்பரிய கலைகள் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து 8 மணி நேரம் பதினைந்து நிமிடம் 44 மாணவ மாணவிகள் இணைந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை…

கோவை இடையர்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அவனி சிலம்ப கலை பயிற்சி மையத்தி்ல்   தமிழக பாரம்பரிய கலையான சிலம்பம்  உள்ளிட்ட கலைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்..இந்நிலையில் இதில் பயிற்சி பெற்று வரும் பள்ளி,கல்லூரி மற்றும் சிலம்பம் விளையாட்டு ஆர்வலர்கள் இணைந்து புதிய நோபல் உலக சாதனையை நடத்தி உள்ளனர்.அதன் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் சுமார் நான்கு வயது முதல் முப்பது வயதிலான மாணவ,மாணவிகள்,ஆண்கள் பெண்கள் என 44 பேர் இணைந்து தொடர்ந்து எட்டு மணி நேரம் பதினைந்து நிமிடம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.பயிற்சியாளர் சுந்தரபாண்டி,. தலைமை ஆசான் கருப்புசாமி ,மற்றும்  பயிற்சியாளர் அறிவானந்தம், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இதில் நோபல் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ், தீர்ப்பாளர் சிவ முருகன் ஆகியோர்  சாதனை சான்றிதழ்களை அனைவருக்கும் வழங்கினர் தமிழ் பாரம்பரிய கலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் கலந்து கொண்டோர் எந்த இடை நிறுத்தம் இல்லாது தொடர்ந்து காலை ஏழு மணி முதல்,மூன்று மணி வரை தொடர்ந்து சிலம்பத்தை லாவகமாக சுற்றியது குறிப்பிடதக்கது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி