இலவச கண் சிகிச்சை முகாமினை தொடங்கி வைத்தார் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. டாக்டர்.சி.சரஸ்வதி

  

இலவச கண் சிகிச்சை முகாமினை தொடங்கி வைத்தார் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. டாக்டர்.சி.சரஸ்வதி 

ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் காசிபாளையம் கிழக்கு மண்டல் சார்பில் கருங்கல்பாளையம் பகுதியில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளினை நல்லாட்சி தினமாக கடைபிடிக்கும் விதமாக நமது கட்சியும் அரசன் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் அறுவை சிகிச்சை முகாம், இலவச கண்ணாடி வழங்கும் விழா கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் வீதி டிவைன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  நிகழ்வில் நமது  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி மற்றும் மாவட்ட தலைவர் வி.சி.வேதானந்தம் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர்.

இதில் மண்டல் தலைவர் ஸ்ரீதர், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் செல்வமணி, மாவட்ட செயலாளர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஜி. தேவபிரகாஷ், வைதேகி, மண்டல் துணைத் தலைவர் தனுஷ், மண்டல் செயலாளர் பரணி, பொதுச் செயலாளர்கள் நேதாஜி, சண்முகசுந்தரம், மண்டல் பொருளாளர் சந்திரன் மற்றும் மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி