குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கோவை மை கராத்தே இன்டர்நேஷனல் கராத்தே பள்ளியைச் சேர்ந்த 25 மாணவ மாணவிகள் பதக்கங்களை வென்று அசத்தல்

குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கோவை மை கராத்தே இன்டர்நேஷனல் கராத்தே பள்ளியைச் சேர்ந்த 25 மாணவ மாணவிகள் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

அண்மையில் நிகான் சோட்டாகான் கராத்தே அசோசியேசன் சார்பில் 13 வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது.மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழ்நாடு,கேரளா, மகாராஷ்டிரா,மேற்கு வங்காளம்,கோவா,குஜராத் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டனர்.கட்டா,குமித்தே என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற கராத்தே போட்டியில்
சப் ஜூனியர், ஜூனியர்,கேடட்,சீனியர்  அடிப்படையில் நடைபெற்றது. 
இதில் தமிழ்நாடு அணி சார்பாக நிகான் சோட்டாகான் கராத்தே அசோசியேஷனின் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தின் செயலாளர் தியாகு நாகராஜ் தலைமையில் கோவை மை கராத்தே இன்டர்நேஷனல்  கராத்தே பள்ளியை சேர்ந்த 25 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மூன்று தங்கம், 5 வெள்ளி,17 வெண்கல பதக்கம்  வென்று அசத்தினர்.வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்த நிகழ்வில் மை கராத்த இன்டர்நேஷனல் நிர்வாகிகள் சிவமுருகன்,அரவிந்த் பயிற்சியாளர்கள் விமல் பிரசாத்,பவிலேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி