கோவில்பட்டியில் தமிழ்நாடு ஸ்கூல் ஹாக்கி லீக் தொடக்கம்.!

 


தமிழ்நாடு ஸ்கூல் ஹாக்கி லீக் தூத்துக்குடி மண்டல ஹாக்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ஹாக்கி மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,  தென்காசி, சிவகங்கை,  மாவட்ட அணி மற்றும் திருநெல்வேலி விளையாட்டு விடுதி அணி பங்கு பெற்றுள்ளன .நேற்று  காலை நடைபெற்ற துவக்க விழாவில்  தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமையில் நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ரத்தின ராஜா   மற்றும் தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் போட்டியை துவக்கி வைத்தனர். போட்டியின் ஒருங்கிணைப்பாளர் திருச்செல்வம் வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார் உடன் நிர்வாக குழு உறுப்பினர் சாமி ராஜன் தலைமை ஆசிரியர் அண்ணாமலை மற்றும் நாடார் மேல்நிலைப்பள்ளி உடற் கல்வி ஆசிரியர்கள் சசிகுமார் ராம்குமார் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் 

முதல் போட்டியில் திருநெல்வேலி விளையாட்டு விடுதி  3-0 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி எம்.என் அப்துல் ரகுமான் மேல்நிலைப்பள்ளி அணியை  வீழ்த்தி வெற்றி பெற்றது இரண்டாவது போட்டியில் சிவகங்கை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி அணி 8-0 கோல் கணக்கில் தென்காசி ஸ்ரீ மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது வேல்ஸ் வித்யாலயா  பள்ளி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளி அணி 3-1 கோல் கணக்கில் திருநெல்வேலி எம்.என் அப்துல் ரகுமான் மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது திருநெல்வேலி விளையாட்டு விடுதி அணி  6-0 என்ற கோல்  கணக்கில் கன்னியாகுமரி கார்மல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அருப்புக்கோட்டை எஸ் பி கே மேல்நிலைப்பள்ளி சிவகங்கை புனித ஜோசப் பள்ளி விளையாடிய போட்டியில்  1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் அஸ்வின் , முன்னாள் தேசிய வீரர் காளிமுத்து பாண்டியராஜா ஆகியோர்   ஒருங்கிணைந்த அணி தேர்வு குழு உறுப்பினர்களாக செயல்படுகின்றனர்  நடுவர் மேலாளரா காளிதாஸ், நடுவர்களாக கார்த்திக் ராஜா, மதன்குமார், சதீஷ்குமார், சேவியர், அழகுராஜா, ராம் கார்த்தி, சிவானந்த, ஆகியோர் செயல்படுகின்றனர். இப் போட்டியில் முதலிடம் பெறும் அணி  சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறும்.  மேலும்  சிறப்பாக விளையாடும் வீரர்களை தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைந்த ஹாக்கி அணி தேர்வு பெற்று மாநில போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர்.  துவக்க விழாவில்  ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி உறுப்பினர்கள் சுரேஷ்குமார், முருகன் , கிருஷ்ணமூர்த்தி, மனோஜ் குமார், தனசேகரன், மாயாண்டி, அன்ன ராஜ் ,ஆகியோர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி