தூத்துக்குடியில் வடமாநில வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு : 2 பேர் கைது!

 

தூத்துக்குடியில் வடமாநில வாலிபரை தாக்கி செல்போன் பறித்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்  மசியன் மகன்  ராஜேந்திரன் (33), ராம் கோபிசந்த் மகன் ஹேமந்த் (20) ஆகிய இருவரும் தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 1வது தெருவில் தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். 

நேற்று வேலை முடிந்து இரவு 7 மணி அளவில் அதே தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது பைக்கில் வந்த 2 பேர் அவர்களை வழிமறித்துள்ளனர். அதில் ஒருவரை கல்லால் தாக்கி  அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த ராஜேந்திரன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தூத்துக்குடி வடக்கு சங்கரபேரியைச் சேர்ந்த  கோட்டை கருப்பசாமி மகன் தண்டேஸ்வரன் (26),  தேவர் காலனி 4வது தெருவைச் சேர்ந்த  செல்லத்துரை மகன் மாணிக்கராஜா (24) ஆகிய 2பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி