வேலூர் மாவட்டம்: பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி.!
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, மற்றும் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட பொறியாளர்,மாநகர நல அலுவலர் அறிவுறுத்தல் பேரிலும் வார்டு 14, 15 மெயின் ரோடுகளில் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில்
"பிளாஸ்டிக்கை ஒழிப்போம்,மஞ்சப்பையை கையில் எடுப்போம்" என பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் வரக்கூடிய நோய்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் பொதுமக்களும் மாநகராட்சி பணியாளர்களும் கலந்து கொண்டனர். இப்பேரணியில் துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் அனிமேட்டர்கள் என பலர் உடன் இருந்தனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் வெங்கடேசன்

