வேலூர் மாவட்டம் குடியாத்தம் அல்லது கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் விருப்ப மனு.!

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அல்லது கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரி வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் நேற்று (29.12.2025) திங்கட்கிழமை பிற்பகல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகையிடம் விருப்ப மனு அளித்தார். 

நிகழ்வின் போது வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், மாவட்ட துணைத் தலைவர் நீலகண்டன், கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஜெகந்நாத ரெட்டி, கே.வி.குப்பம் கிழக்கு வட்டார தலைவர் லோகிதாஸ், கே.வி.குப்பம் கிழக்கு வட்டார முன்னாள் தலைவர் விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி