தூத்துக்குடி மாநில அளவிலான மூத்தோர்களுக்கான தடகளப் போட்டிக்கு செல்லும் வீரா் வீராங்கனைகளை கொடியசைத்து வழி அனுப்பி வைத்தனா்.
தூத்துக்குடி மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பாக காரைக்குடியில் நடைபெறும் மாநில அளவிலான மூத்தோர்களுக்கான தடகளப் போட்டிக்கு தூத்துக்குடி மாவட்ட மூத்தோர் தடகள வீரர் மற்றும் வீராங்கனைகளை வெற்றி வாய்ப்பை பெற்று வருமாறு வாழ்த்துக்களை கூறி மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் நிறுவனத் தலைவர் அசோகன் கொடி அசைத்து வீரர்களை வழி அனுப்பி வைத்தார். மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் செயலாளர் குப்புசாமி பாராட்டினார்.
மாநில அளவிலான தடகளப் போட்டிற்கு 110க்கும் மேல் அதிகமான வீரர் வீராங்கனைகளை கொண்ட மாவட்டம் நமது தூத்துக்குடி மாவட்டம் என்ற சிறப்பை பெற்றதற்கு, மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் பாயஸ் பாய், செயலாளர் குப்புசாமி, பொருளாளர் மெர்சி பத்மாவதி, உப தலைவர்கள் முனியசாமி முரளி, ராகவனந்தம், ஸ்டீபன் தியாகராஜன், ரங்கநாதன், இணைச் செயலாளர் ஏஞ்சலின் கோயில் ராஜ், ஆனந்தராஜ், மாரிச்சாமி, லாரன்ஸ், ராபர்ட் சன் கென்னடி மற்றும் உறுப்பினர்கள் வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
