ஆட்டோ ஓட்டுநர் போட்ட வாட்ஸ்அப் பதிவு : ஒரு மணி நேரத்தில் களத்திற்கு வந்த தூத்துக்குடி மேயர்.!-

 

தூத்துக்குடி குரூஸ்புரம் ஆட்டோ ஓட்டுநர்  "தாய் கணேசன்" என்பவர் வாட்சப் மூலமாக மேயர் அவர்களுக்கு ஓர் வேண்டுகோளை பனிவுடன் முன்வைத்தார்...

வேண்டுகோளாவது..

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட குரூஸ்புரம் பக்கிள் ஓடை 4ம் பாலம் அருகில் உள்ள *"5 வழிச்சாலை சங்கமிக்கும்  மைய பகுதியில்  உயர் மின் கோபுர ஹைமாஸ்க் விளக்கு"* ஒன்றை அமைத்து தரக்கோரி பொதுமக்களின் சார்பாக அன்புடன் ஓர் வேண்டுகோளை முன் வைத்திருந்தார். 

இந்த கோரிக்கை வைக்கப்பட்ட 1 மணி நேரத்தில் அந்த பகுதி வார்டு திமுக பிரமுகர் திரு. டேனியல் அவர்களுடன்  களத்திற்கு நேரடியாக வந்தார் மாண்புமிகு தூத்துக்குடி  மேயர் ஜெகன் பெரியசாமி. கோரிக்கை வைக்கப்பட்ட இடத்தை இரவு நேரம் என்று கூட பாராமல் அதை முழுமையாக  பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதன் பின்பு கோரிக்கை வைத்த ஆட்டோ ஓட்டுநரிடம் உங்களால் முன் மொழியப்பட்ட  மக்கள் கோரிக்கை உடணடியாக நிறைவேற்றப்படும், உங்களது வேண்டுகோளின் படி  உயர் மின் கோபுர ஹைமாஸ்க் விளக்கு நீங்கள் கேட்டுக் கொண்ட இடத்தில் அமைத்து தருவதாக உத்தரவாதம் வழங்கினார்.

அவரது உத்திரவாதமும், வாக்குறுதியும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய  வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட நெடுநாளாக இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்பட்ட இடத்தில் விடியல் பிறக்கிறது என்பதை மேயரின் வாய்மொழியாக உறுதியளிக்கபட்டதால் வாகன ஓட்டிகள் முதற்கொண்டு ஆரவாரம் செய்யத் தொடங்கி விட்டனர். மேலும் கிடைக்கப்பெற்ற தகவலின் படி மேயருடன் வருகை தந்து பொதுமக்களின் கோரிக்கையை அதிரடியாக நிறைவேற்றிய அந்த பகுதி திமுக பிரமுகர் திரு.டேணியல் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொண்டனர்‌.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி