இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காத திமுகவால் த.வெ.க, நா. த.க, நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள் - நேர்காணல் கண்துடைப்பு என்று திமுகவினர் குற்றச்சாட்டு.!

 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு மார்ச் 18-ஆம் தேதி (புதன்கிழமை) நேர்காணல் நடைபெறும் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில், தூத்துக்குடி தெற்கு மற்றும் தூத்துக்குடி வடக்கு ஆகிய இரு மாவட்டப் பிரிவுகளுக்கான நேர்காணலும் ஒரே நேரத்தில் தொடங்குகிறது. தூத்துக்குடியுடன் இணைந்து அன்றைய காலை அமர்வில் திருநெல்வேலி (கிழக்கு, மத்திய, மேற்கு), தென்காசி (வடக்கு, தெற்கு) மற்றும் கன்னியாகுமரி (கிழக்கு, மேற்கு) ஆகிய மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடத்தப்பட உள்ளது.

முன்னதாக, நேர்காணலின் முதல் நாளான மார்ச் 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான நேர்காணல் நடைபெறும். மார்ச் 18-ஆம் தேதி மாலை 4.00 மணி அமர்வில் மதுரை, தேனி, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் கண்துடைப்பு என்று திமுகவினர் குற்றச்சாட்டு.

நேர்காணல் பற்றிய எதிர்பார்ப்பு  திமுகவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரியவில்லை. ஒவ்வொரு தொகுதிக்குள்ளும் ஆல் ரெடி திமுகவுக்குள் நிரந்தர வேட்பாளர்கள் இருக்கிறார்கள், இவர்களை தாண்டி புதியவர்களுக்கான வாய்ப்பு என்பது நடக்காத ஒன்றாகி பல ஆண்டுகள் கடந்துவிட்டது. உழைப்பவர்களுக்கான அடையாளத்தை திமுகவுக்குள் கேட்டும் பெறமுடியாத நிலையே தொடர்கிறது. ஆகவே நடக்கவிருக்கும் நேர் காணல் என்பது ஓர் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தொகுதிக்குள்ளும் யார் வேட்பாளர் என்பதை ஓட்டு போடுற திமுக காரனால் சொல்ல முடியும் என்கின்றனர் உடன்பிறப்புக்கள். 

2.O ஆட்சி அமைக்க ஆசைப்படும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2.O ஸ்டைலில் வேட்பாளரையும் அறிமுகபடுத்திட வேண்டும். இன்றைய அரசியலில் இளையதலைமுறைக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கொள்கை முழக்கம் மாநில திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் மட்டும் அல்ல ஒவ்வொரு மாவட்டத்திற்குள்ளும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் அதை செயல்படுத்த திமுக தலைமை மூத்த நிர்வாகிகள்  இடையே விருப்பம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். இதன்காரணமாக தான் நாதக மற்றும் தவெக வில் இளைய தலைமுறையினரின்  படையெடுப்பு பெருகிவருவதாகவும் திமுகவினரே வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர். இந்நிலைப்பாடு திமுகவுக்குள் தொடருமே ஆனால் வரும் காலங்களில் இளைஞர்கள் இல்லாத இயக்கமாக திமுக வின் அரசியல் நிலைமை மாறும் என்கின்றனர் கட்சியில் ஒதுங்கி இருக்கும் மூத்த நிர்வாகிகள்...

இது உண்மையா? பொய்யா? என்ற விசாரணையை திமுகவினரிடமே விட்டுவிடுவோம். அவர்களது முடிவு கட்சிக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தட்டும் என்று உள்கட்சி பிரச்சனையை அவர்களிடமே ஒப்படைத்துவிடுவோம். இந்த பிரச்சனையை நாம் நாட்டாமை செய்யமுடியாது என்று எதிர் கட்சியினரும் கூறி வருகின்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி