விளாத்திகுளம் மாணவி படுகொலை: டிஜிட்டல் & அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஒருவர் கைது என்று எஸ்பி மதன் விளக்கம்.

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மதன் தெரிவித்துள்ளார்.

கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் தமிழகத்தையும் நாட்டையும் அதிர்ச்சியடையச் செய்தது. குற்றவாளி கைது செய்ய தாமதமாகியுள்ளது குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கேள்விகள் எழுந்த நிலையில், இன்று (19.03.2026) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எஸ்பி விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில்...

குளத்தூர் காவல் நிலைய குற்ற எண் 118 இன் 11ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக வழக்கு புலன் விசாரணையில் உள்ளது பாதிக்கப்பட்ட சிறுமி வயது 18 வயதுக்கு குறைவாக உள்ளது சிறுமி என்பதால் அது குறித்து விசாரணை செய்ய பத்து தனி படைகள் அமைக்கப்பட்டது.மேலும் நாலு டிஎஸ்பி, ஆறு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 150 காவலர்கள் இந்த பணியில் முழுவிச்சில் ஈடுபட்டனர். புலனாய்வு பிரிவு, மோப்பநாய் பிரிவு என வெவ்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்ற போதிலும் அந்த பகுதியை சுற்றி பல பகுதிகளில் உள்ள 98 இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் சேகரிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் 2514 தொலைபேசி தகவலும் சேகரிக்கப்பட்டன. வேறு குற்ற பின்னணி உள்ள நபர்கள் பார்த்து கண்காணித்து, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள பல குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். 461 தகவல்கள் நேரடியாக மற்றும் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. 

சம்பவம் தொடர்பாக அனைத்து விசாரணைகளும் அறிவியல் பூர்வமாக மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவத்தில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கிராம மக்கள் கூடிய விசாரணை அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் டிஜிட்டல் ஆவணம் நேரடி விசாரணை செய்வது அனைத்தையும் அடிப்படையில் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நபரை கைது செய்துள்ளோம். 

பாதிக்கப்பட்ட சிறுமியின் படத்தையும் பெயரையும் பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும். இதுவரை அதை பயன்படுத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனில் பயன்படுத்தினால் அந்த நபர்கள் ஒரு பின்னணியில் உள்ளவர்கள் 23 படி FIR பதிவு செய்யப்படும் 

இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து கிராமங்களில்10 சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு கிராமத்திலும் பெண் போலீசின் மூலமாக ரோந்து பணிகள் தீவிரபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் இந்த வழக்கு விசாரணை முறையாக நடத்தப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது என்றார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி