இந்திரா சுந்தரம் அறக்கட்டளை சார்பில் திருப்பூரில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!

திருப்பூரில் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி! 

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் தொண்டு நிறுவனம் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு நேரில் சென்று வழங்கி வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்களின் உன்னதமான மாதங்களில் ஒன்றான ரமலான் மாதத்தில் மும்மதத்தைச் சேர்ந்த குருமார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தனியார் தொண்டு நிறுவனத்தின் தலைவர் இந்திரா சுந்தரத்தின் தலைமையில் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர்.பாரூக் இந்தாதி நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் நோய் நொடியின்றி வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு குளிர் பானம் பல வகைகள் மற்றும் உணவு உள்ளிட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மும்மதத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர்.சபாபதி, பெலிக்ஸ் மற்றும் தொண்டு நிறுவனத்தின் பொதுச்செயலாளர் ராஜா முகமது மற்றும் பல்வேறு அறக்கட்டளையின் நிர்வாகிகளும் பொதுமக்களும் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி