மகளிர் உரிமைத்தொகையில் திமுக ஒரு கோடி குடும்பங்களை ஏமாற்றி விட்டது... திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு

திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம், திருப்பூர் ஒன்றிய கழகத்துக்குட்பட்ட தட்டான்குட்டையில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் நடந்தது. முன்னாள் அமைச்சரும், திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.


 இந்தக்கூட்டத்துக்கு ஒன்றிய கழக செயலாளரும், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ.,வுமான கே.என்.விஜயகுமார் தலைமை தாங்கினார். கழக அவைத்தலைவர் பழனிசாமி, பாஜக நிர்வாகி சின்னசாமி, கொங்குநாடு விவசாயிகள் கட்சி நிர்வாகி கொங்கு ராஜாமணி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது கூறியதாவது:அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்ற இயலாத போது, மத்திய நிதி வர தாமதமானது. அதற்காக மாநில அரசின் நிதியிலேயே இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இதற்கு ஆய்வு செய்து 1600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்ற வழிவகை செய்தவர் எடப்பாடியார்.


 இந்த திட்டத்தை நிறைவேற்ற அதிக இடம் எடுக்க வேண்டி வரும் என்ற நிலையில் இந்த திட்டத்தை குழாய் மூலம் கொண்டு வரப்பட்டது. அப்படி கொண்டு வரும்போதும், பாறைகள் எல்லாம் இருந்ததால் திட்டம் தொய்வு ஏற்பட்ட போதும், கூடுதல் நிதியை ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்ர செய்தவர் எடப்பாடியார். விடுபட்ட குளங்களையும் அந்த திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தி தொடங்கியது திமுக அரசு. விவசாயிகள் நலன்கருதி அவிநாசி அத்திக்கடவு இரண்டாவது கட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று எடப்பாடியார் அறிவித்துள்ளார்.  நூறாண்டு கால கனவுத்திட்டமான இந்த திட்டத்தை நிறைவேற்ற எடப்பாடியார் உறுதி அளித்துள்ளார். நான் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட உடன் இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தினை நிறைவேற்ற எடப்பாடியார் அவர்களிடம் பேசி திட்டம் நிறைவேற்றப்படும். மத்திய அரசு பற்றி எதிர்க்கட்சிகள் எல்லாம் தேவை இல்லாமல் விமர்சன செய்கிறார்கள். அதிமுக கொடுக்கும் தேர்தல் வாக்குறுதிகளுக்கான நிதியை மத்திய அரசு வழங்குவதாக தெரிவித்துள்ளது. 100 நாள் வேலைத்திட்டமானது அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 150 நாட்களாக உயர்த்தப்படும். இன்றைக்கு பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகையை 28 மாதம் கழித்து தான் வழங்குகிறார்கள். தமிழகத்தின் அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும் என்று கூறி விட்டு, 70 லட்சம் பேருக்கு மட்டும் தான் கொடுத்தார்கள். இரண்டாவதாக நாங்கள் எல்லாம் குரல் கொடுத்ததால் 1.30 கோடி பேருக்கு கொடுக்கிறார்கள். இன்னும் ஒரு கோடி பேரை ஏமாற்றி விட்டார்கள். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 2.30 கோடி குடும்பத்தலைவிகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடியார் அறிவித்துள்ளார். கணவனும், மனைவியும் இன்று பஸ்சில் ஒன்றாக செல்ல முடியாது. பெண்களுக்கு மட்டும்தான் கட்டணமில்லை. ஆனால் இதைப்பார்த்த எடப்பாடியார் கணவன் - மனைவி இருவருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அம்மா அவர்கள் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மின்விசிறி வழங்கினார். அதேபோல, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாமல் ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்.இன்றைக்கு தமிழ்நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது.கட்டுமான பொருட்கள் விலை மிக அதிகமாகி விட்டது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் கடந்த 5 ஆண்டு காலத்தில்  செலவு 3 மடங்காக உயர்ந்து விட்டது. மக்கள் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்.  வழங்கப்படும். மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் உங்கள் பணத்தை திமுக அரசு எடுத்துக்கொண்டு விட்டது. இந்த கஷ்டத்தை அறிந்துதான் 2.30 கோடி குடும்பத்துக்கும் பாதுகாப்பு தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் எடப்பாடியார் அறிவித்துள்ளார். வருடம் 3 கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளார். இந்த பகுதியில் மட்டும் 510 வீடுகள் ஏற்கனவே நமது ஆட்சியில் தரப்பட்டு உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு தேவையான அனைத்தும் வழங்கப்படும். பெண்கள் வாழ்வாதாரம் உயர்த்த வழிவகை செய்யப்படும், அதற்காக விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள் திட்டம் எல்லாம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இதையெல்லாம் திமுகவினர் நிறுத்தி விட்டார்கள். இதுபோன்ற திட்ட்ங்கள் அதிமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும். இந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அயராது உழைத்து மக்களை இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க செய்ய வேண்டும். அதிமுக வெற்றி பெறுவது, ஆட்சி அமைப்பது உறுதி என்று முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார். இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் சங்கீதா சந்திரசேகர், பட்டுலிங்கம், பூலுவபட்டி பாலு,  சாமிநாதன், வேல்குமார் சாமிநாதன்,  எஸ்.எம்.பழனிசாமி, கலைமகள் கோபால்சாமி, தங்கராஜ், சுந்தராம்பாள்,சாமிகணேஷ், பானுரேகா, வித்யா, ஜெஜெபி.ஜெகநாதன், பழனிவேலு, நீதிராஜன், ஐஸ்வர்ய மகாராஜ், யுவராஜ் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி