நெல்லை மண்டல அதிமுக ஐடிவிங் இணைச் செயலாளர் அதிமுகவில் இருந்து விலகல் -தவெகவில் இணைகிறார்.!

நெல்லை மண்டல அதிமுக ஐடிவிங் இணைச் செயலாளரும், தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சி கொறடாவுமான வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, அதிமுகவில் இருந்து விலகுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது விலகல் கடிதம் அனுப்பியுள்ளார். 

இது குறித்து அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் :-கழக நிர்வாக பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களையும் இதய தெய்வம், புரட்சித் தலைவி, அம்மா அவர்களையும் வணங்கி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 2008 முதல் ஒரு சாதாரண தொண்டனாக அரசியல் பயணத்தை தொடங்கி, பின்பு கழகத்தின் சட்டக் கல்லூரி மாணவர் அணியில் செயலாளராக தொடங்கிய நாள் முதல் இன்று வரை கழகத்திற்காக தொடர்ந்து உழைத்து வந்து கொண்டிருக்கிறேன்.

இன்று எதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணைச் செயலாளராக இருந்து அதன் பின்பு திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவின் இணை செயலாளராக கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களால் நியமிக்கப்பட்டேன். மிக்கப்பட்டேன். அன்று முதல் தற்போது வரை தொடர்ந்து கழகப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வந்துள்ளேன்.

கழக பணிகளை ஆற்றி வருகின்றேன். பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காகவும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு வாழ்வதுதான் அரசியல் பாடம் என்பதை உணர்ந்து இன்றுமுதல் கழகத்தின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் என்னை விடுவித்துக்கொள்கிறேன் இத்தனை நாளும் என்னோடு பயணித்து கழகப் பணிகளில் தோளோடு தோள் நின்று அனைத்து நிலை நிர்வாகப் பெருமக்களுக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நாளைய ( 7.05.2026 ) தினம் வழக்கறிஞர் மந்திரமூர்த்தி தவெகவில் அதிகாரபூர்வமாக இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி