த.வெ.கவில் இணைந்த முன்னாள் அமைச்சரை கண்டித்து கோவில்பட்டியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,முன்னாள் அமைச்சர், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் செ. ராஜீ இன்று அதிமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார்.
இந்நிலையில் த. வெ. கவில் இணைந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீவை கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசு தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
