அதிமுகவிலிருந்து விலகியது ஏன்?"எம்ஜிஆரின் மறு உருவம் தமிழகத்தின் பொற்கால முதல்வர் விஜய்" - முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ விளக்கம்.!
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ வெளியிட்டுள்ள அறிக்கையில்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் தொடர் தோல்வி சகஜமாகிவிட்டது. கட்சியில் பிளவும் அதிகரித்துவிட்டது. பிளவுகளும் சரிவுகளும் சரி செய்யப்படும் என்பது கானல் நீராக தான் முடியும்.
கட்சியின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் துணை போகி விடக்கூடாது என்ற மனக்குமுறலோடு அதிமுகவில் இருந்து விலகுகிறேன்
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா கனவை நினைவாக்கி ஆட்சி அதிகாரத்திலிருந்து தீய சக்தி திமுகவை வீழ்த்தி, தூய சக்தியாக எம்ஜிஆர் வழியில் பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகனாக புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் மறு உருவமாக விளங்கும் புரட்சித் தளபதி மாண்புமிகு தமிழகத்தின் பொற்கால முதல்வர் விஜய் தலைமையில் மக்கள் பணியாற்றிட தமிழக வெற்றி கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
