Posts

ஜாலியாக உலாவிய புலி...கேமராவில் சுட்ட புகைப்படக்காரர்

Image
காட்டுயிர் காப்பக பகுதிகளில் என்ன நடக்கிறது என்று பார்க்க அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். ஆனால் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் கானக புகைப்படக் கலைஞர்கள் அந்த வாய்ப்பை வரமாக பெற்றவர்கள். நாள் கணக்கில் வாரக்கணக்கில் காத்திருந்து கானக உயிரினங்களை படமெடுத்து அவற்றின் நடவடிக்கைகளை உலகத்துக்கு சொல்வார்கள். அந்த வகையில் செப்டம்பர் 30-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் கபினி வனப்பகுதியில், உற்சாகமாக நடை போட்ட புலி ஒன்று, கானுயிர் புகைப்படக்காரர் பிரசன்ன கவுடாவின் கேமரா கண்களில் சிக்கியது. அடர் வனத்தில் ஒய்யார நடை நடக்கும் புலியின் கம்பீரத்தை நீங்களும் கண்டு மகிழுங்கள்.. #TamilAnjal #Prasannagowda #Muruganandhan    

நாங்குநேரியில் இரு பெண்கள் தலை துண்டித்து கொலை: மாஸ்க் அணிந்த 12 பேர் கும்பல் வெறிச்செயல்

Image
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இரு பெண்கள் தலை துண்டித்து கொலை. ஊர் முழுவதும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி 12 பேர் கொண்ட முகக் கவசம் அணிந்த கும்பல் வெறிச்செயல்.   2019 நவம்பர் மாதம் மறுகால்குறிச்சியை சேர்ந்த நம்பிராஜன் என்பவர் அதே ஊரை சேர்ந்த வாண்மதி என்பவரைவ காதல் திருமணம் செய்த 10 நாட்களில் மனைவியின் சகோதரர் மற்றும் உறவினர்களால் டவுண் வயல்தெருவில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2020 மார்ச் மாதம் நம்பிராஜன் மனைவி வாண்மதி உறவினர்கள் நாங்குநேரி ஹோட்டலில் வைத்து ஆறுமுகம், சுரேஷ் ஆகியோரை நம்பிராஜன் தரப்பினர் கொலை செய்தனர். இதற்கு பழியாக இன்று பிற்பகல் மறுகால்குறிச்சியில் நம்பிராஜன் தாயார் சண்முகதாய் மற்றும் சகோதரி சாந்தி ஆகியோரை தலை துண்டித்து கொலை செய்துள்ளனர். 12 பேர் கொண்ட மர்ம கும்பல் முக்கவசம் அணிந்து ஊர் முழுவதும் பெட்ரோல் குண்டு மற்றும் நாட்டு வெடி குண்டுகளை வீசி கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர். சண்முகத்தாய் தலையை வெட்டி ஊர் மத்தியில் வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்க...

நெல்லை தச்சநல்லூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் –மனைவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை

Image
நெல்லை தச்சநல்லூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் –மனைவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .  நெல்லை தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் . இவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார் . இவரது மனைவி வடிவு, இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. வடிவு கருவுற்று மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது 4-வது முறையாக கருவுற்று ஐந்து மாதம் ஆன நிலையில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்டள்ளது. இதனால் கணவன் –மனைவி இருவரும் கடும் மனவேதனையில் இருந்துள்ளனர் . குழந்தையில்லை என்ற ஏக்கத்தில் இருந்த இருவரும் நேற்று இரவு இருவரும் படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர் இந்நிலையில் காலையில் அவர்களது உறவினர் வீட்டிற்கு வந்த போது இருவரும் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார் . உடனடியாக தச்சநல்லூர் காவல்துறையினர் சம்பவ இ...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக உயர் மட்ட ஆக்சிஜன் சிகிச்சை கருவி: அமைச்சர் கடம்பூர்  ராஜூ

Image
  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏழு லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன நீராவி சலவை இயந்திரம் மற்றும் கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலமாக அனுப்பும் வசதியையும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்கள் 170 பேருக்கு தலா இரண்டு சிறப்பு சீருடைகளையும்  வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.     இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு நவீன நீராவி சலவை இயந்திரம், கொரோனா பரிசோதனை முடிவு குறுஞ்செய்தியும், தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த அவர், வேறு எந்த மாவட்டங்களில் இல்லாத வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்வதற்காக மூன்று  ஆர்.டி. பி. சி. ஆர் பரிசோதனைகள் அமைக்கப்பட்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று பாதிக்கப்பட்ட 12,000 பேருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்...

திட்டக்குடி அருகே லக்கூர் கிராமத்த்தில் தீ விபத்து... கூரை வீடு சேதம்

Image
  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே லக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி தனலட்சுமி 32 இவரது கூரை வீட்டில் நேற்று  மாலை 5 மணி அளவில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது.     அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க  முற்பட்டனர் தகவலறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் கட்டில், பீரோ ,டிவி, உள்ளிட்ட அனைத்து பொருட்களும் உட்பட சுமார் 2 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

பாலூர் ஊராட்சியில் பொதுமக்கள் அனைவருக்கும் வீதி வீதியாக கபசுர குடிநீர்

Image
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஒன்றியம் பாலூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலமாக பொதுமக்கள் அனைவருக்கும் வீதி வீதியாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டன. பெரியவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கபசுர குடிநீர் வாங்கி அருந்தினர்.துப்புரவு பணியாளர் திரு. விஜயகுமார் அவர்கள் கபசுர குடிநீரின் முக்கியத்துவத்தை மக்களிடத்தில் எடுத்துரைத்தார்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் சேர்க்கை

Image
  வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டமும், உறுப்பினர் படிவம் மற்றும் உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (23.09.2020) மாலை 6 மணியளவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில் மாநில மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் திருமதி கிருஷ்ணவேணி ஜலந்தர் மற்றும் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் திருமதி. தேவகிராணி ராஜேந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைப்பெற்றது.   நிகழ்வில் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு உறுப்பினர் படிவங்களும், உறுப்பினர் அட்டைகளும் வழங்கப்பட்டன.