நெல்லை தச்சநல்லூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் –மனைவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை

நெல்லை தச்சநல்லூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் –மனைவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .


 நெல்லை தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் . இவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார் . இவரது மனைவி வடிவு, இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. வடிவு கருவுற்று மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது 4-வது முறையாக கருவுற்று ஐந்து மாதம் ஆன நிலையில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்டள்ளது.


இதனால் கணவன் –மனைவி இருவரும் கடும் மனவேதனையில் இருந்துள்ளனர் . குழந்தையில்லை என்ற ஏக்கத்தில் இருந்த இருவரும் நேற்று இரவு இருவரும் படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர் இந்நிலையில் காலையில் அவர்களது உறவினர் வீட்டிற்கு வந்த போது இருவரும் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார் . உடனடியாக தச்சநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு பேரின் உடலையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் –மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்