அதிரி புதிரியாக 50 உலக சாதனைகள்... சொல்லி அடித்த ஃப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்களுக்கு குவியும் பாராட்டு

திருப்பூர் ஃப்ரண்ட்லைன் மில்லினியம் பள்ளியில் , 50 உலக சாதனைகளை செய்து அசத்திய மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிகிறது. திருப்பூர் ஃப்ரண்ட்லைன் மில்லினியம் பள்ளியின் 25 ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு , 50 உலக சாதனைகளை செய்து அந்த பள்ளி மாணவ - மாணவிகள் அசத்தியுள்ளனர் . திருப்பூர் ஃபிரண்ட்லைன் கல்விக்குழுமத்தன் சார்பில் 25 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது . இதில் 50 உலக சாதனைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு அதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது . எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் , ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி , இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகளின் பிரதி...