Posts

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா அவர்களின் சேவையை பாராட்டி அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

Image
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா மிக சிறப்பாக மக்கள் நலப் பணிகளை செய்து வருகிறார் அவர் பேரன்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறார் கூடலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு அரசு பணிகளை மிகவும் செம்மையாக செய்து வருகிறார் சாலை பணிகள் தடுப்பு சுவர்கள் குடிநீர் பணிகள் என மக்களுக்கு தேவையான அத்தியாயத்தை அனைத்து தேவைகளை அறிந்து செய்து வருகிறார் இதனால் இவரின் மக்கள் நல பணியினை பாராட்டி கடநாடு ஊராட்சி சொக்கநல்லி பழங்குடியினர் கிராமத்தில் நடைபெற்ற மக்களுக்காக அறக்கட்டளையின் நிறுவனர் நலத்திட்ட வழங்கும் விழாவில் அறக்கட்டளை நிறுவனர் தமிழ் வெங்கடேசன் தலைமையில் ஜே.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரி துணை முதல்வரும் முனைவர் கே.பி அருண் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா அவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருதை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் இதனை அடுத்து அவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் அமைப்பினர் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

பவானிசாகர் அணையிலிருந்து, நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.

Image
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக் கிணங்க,ஈரோடு  மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா,  நீர்வளத் துறை தலைமை பொறியாாளர் சிவலிங்கம் கோவை முன்னிிலை யில்,ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, 15.08.2023 கீழ் பவானி திட்ட பிரதான கால்வாயில், நன்செய் பாசனத்திற்காக நீரை திற ந்து விட்டார்.கீழ்பவானித் திட்ட பிர தான கால்வாயில், திறக்கப்படும் தண்ணீர் மூலம், ஈரோடு மாவட்டத் தில், சத்தியமங்கலம், நம்பியூர். கோபி செட்டிபாளையம், பவானி, ஈரோடு. பெருந்துறை, மொடக்குறி ச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களில் 1.82,566,75ஏக்கர்பாசன நிலங்களும் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டத்தில் உள்ள, 20.456.31 ஏக்கர் மற்றும் கரூர் மாவட்டத்தில் புகளூர் வட்டத்தில் உள்ள 3,976.94 ஏக்கர் மொத்தம் 2,07,000 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இதில், முதல் போகத்திற்கு 1,03,500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறு ம். கீழ்பவானித் திட்ட பிரதான கால் வாயில் திறக்கப்படும் தண்ணீர் திற ப்பு ஆகஸ்ட்15முதல்டிசம்பர் 13 வரை 120 நாட்களுக்கு நன்செய் பாசனத்  திற்காக, தண்ணீர்விடப்படுகிறது. .எனவே விவசாயிகள் தண்ணீரை, சிக்கனமாக, பயன்படுத்த வேண்டு மெ...

கோவை சூலூர் மைக்கேல் ஜோப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை ஒழிப்பு தினம்

Image
கோவை சூலூர் மைக்கேல் ஜோப் மகளிர்  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  போதை ஒழிப்பு தினம் கல்லூரி முதல்வர் முனைவர் செ.ஷாலினி பாக்கியம் கமலா  தலைமையில் கொண்டாடப்பட்டது போதைப் பொருட்கள் குறித்தும் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்தும் மாணவியர்க்கு தெளிவாக எடுத்துரைத்தார் மாணவியர்கள் அனைவரும் நாங்கள் போதைப் பழக்கம் உள்ளவர்களைக் கண்டால் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறி அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்போம் என்ற வாக்குறுதியை  அளித்தார்கள் இன்று முதல் தங்கள் வீட்டிற்கு அருகில் இருப்பவர்களுக்கும் போதைப் பொருளின் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றும் கூறினார்கள் அதன் பிறகு பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்டார்கள் இவ்வாறு போதை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற 77வது இந்திய சுதந்திர தின விழா

Image
நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற 77 வது இந்திய சுதந்திர தின விழாவில் பங்கேற்று சுதந்திர தின கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின வாழ்த்துக்களை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதில் பங்கேற்ற பெற்றோர்களுக்கும் தெரிவித்த இனிமையான தருணம் இந்த சுதந்திர தின கொடியேற்று நிகழ்வினை நம் புளியம்பாறை நகராட்சி துவக்க பள்ளியினுடைய தலைமை ஆசிரியர் மறியாதைகுரிய  சுனில்குமார் ஒருங்கிணைத்து தலையேற்றிருந்தார் அவரோடு இணைந்து இருபால் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கான மாறுவேடம் இனிப்பு வழங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள் இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அருமை தம்பி தியாகமணி பள்ளி மேலாண்மை குழுவினுடைய தலைவி நற்குணசெல்வி அவர்களும் மற்றும் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களும் பொறுப்பாளர்களும் பெற்றோர்களும் திரளாக பங்கேற்று இருந்தார்கள் இந்த நிகழ்வில் நான் பங்கேற்றது பெருமையாக இருந்தது என சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு   துரை. புவனேசுவரன் நகர்மன்ற உறுப்பினர் நெல்லியாளம் நகராட்சி  (வார்டு எண்-14...

அகம் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் மேட்டுப்பாளையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Image
மேட்டுப்பாளையத்தில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டது அகம் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் மேட்டுப்பாளையம்  கிளை சார்பாக  76 ஆவது சுதந்திர தினம் தமிழ் தாய் வாழ்த்து பாட மேட்டுப்பாளையம் நகர காவல் துணை ஆய்வாளர் தனபால்  தேசியக்கொடி ஏற்றி வைத்தார் போக்குவரத்து துறை துணை ஆய்வாளர் கோபால்  தேசத்தின் விடுதலைக்கு பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தார் அதைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது சங்கத்தின் மாநில துணைத்தலைவர் வெள்ளிங்கிரி மேட்டுப்பாளையம் நகரத் தலைவர் சாமிநாதன் இனிப்புகள் வழங்கியும் பள்ளி மாணவிகளுக்கு நோட்புக், எழுது பொருட்கள் வழங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக காவல்துறை வழிகாட்டுதலின்படி சங்கத்தின் சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்கள் நலன் கருதி பெற்றோர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடு விஜயகுமார், சுலைமான், சசிகுமார், கோபால் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

கோவையில் அகம் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் நான்காம் ஆண்டு விழா மற்றும் சுதந்திர தின விழா

Image
*நான்காம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி* அகம் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் ஆரம்பித்து 4ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக சங்கத்தின் சார்பாக  76 ஆவது சுதந்திர தினம் இன்று காலை 9:00 மணிக்கு காந்தி பார்க் அருகில் செயல் அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் தமிழ் தாய் வாழ்த்து பாட சங்கத் தலைவர் திருக்குமார் தேசியக்கொடி ஏற்றி இந்திய விடுதலைக்கு பாடுபட்ட தேச தலைவர்களை நினைவு கூர்ந்தார் அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது சங்கத்தின் செயலாளர் கார்த்திகேயன் பொருளாளர் மணிகண்டன் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு  இனிப்புகளுடன் நோட்புக் எழுது பொருட்கள் வழங்கினார்கள் சிறப்பு அழைப்பாளர்களாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரவிச்சந்திரன், மரு. சிவ சக்திவேல், தியாகு மெடிக்கல்ஸ் மணிகண்டன், கலந்து கொண்டனர்., அதைத் தொடர்ந்து   சங்கத்தின்  ஆலோசனை கூட்டம் செயல் அலுவலகத்தில் நடைபெற்றது இணைச் செயலாளர் காளிமுத்து, சதீஷ்குமார், விஜயகுமார், துணைச் செயலாளர் கார்த்திக், ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்பாபு, வீரப்பன், ராமநாதன் கஜேந்திரன் கிளை நிர்வாகிகள் சண்முகராஜா சாந்தகுமார் மகளிர் அணியினர் சித்ரா மகாராஜன், ரே...

பெற்றோர்களுக்கு மரக்கன்றுகள் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் என்று விமர்சையாக நடைபெற்ற சுதந்திர தின விழா

Image
பாரதத்தின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் ராஜீவ் காந்தி நகரில் அமைந்திருக்கும் டி.என்.எஸ்.எல்  மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு இந்து சேவாசங் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு இந்து சேவா சங்க மாநில தலைவர் ஆவடி.ஸ்டாலின் மற்றும் பள்ளியின் தலைவர் கே.செந்தில்நாதன் தேசியக் கொடியேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார் மேலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குதல் பெற்றோர்களுக்கு மரக்கன்று வழங்குதல் மற்றும் குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சிகள்  சீரும் சிறப்புமாக நடைபெற்றது