காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் யார்? ராகுல் காந்தி பெயரை தவிர்த்த கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் குறித்து கேள்விக்கு ராகுல்காந்தியின் பெயரை சொல்லாமல், கட்சியின் நாடாளுமன்ற குழு முடிவெடுக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். காங்கிரசில் பிரதமர் வேட்பாளரே அறிவிப்பது கிடையாது. காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் கூடி பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் கூறினார். முன்பு கூட சோனியா காந்தி தான் பிரதமர் என்று ஊரெல்லாம் சொன்னார்கள். ஆனால் மன்மோகன்சிங் தான் பிரதமரானார். சென்ற தேர்தலில் கூட ஸ்டாலின் அவர்கள் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறினார். ஆனால் காங்கிரஸ் aதை தீர்மானமாக நிறைவேற்றவில்லை. ஒரு ஜனநாயக கட்சியாக கூட்டத்தில் தான் அதை தேர்ந்தெடுப்போம் என்றார். இந்தியா கூட்டணியின் பணிகள் 5 மாநில தேர்தலுக்காக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். மேலும் அவர் பேசுகையில், மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் திருப்பூர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் வங்கதேசத்தில் இருந்து 4000 கோடி துணி வந்தடைந்திருக்கிறது இது வணிகர்களை கடுமையாக பாதித்த...