Posts

மாட்டுவண்டியில் அமர்ந்துவந்து, நூதனமுறையில்,பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த, திமுகவேட்பாளர் ஆ.ராசா.

Image
தமிழகத்தில், வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ள, நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ள நிலையில், கொளுத்தும் கோடை வெப்பத்தை பொருட்படுத்தாத அரசியல் கட்சி வேட் பாளர்கள், மக்களிடம் நூதன முறை யில் வாக்குகளை சேகரித்து வருகின் றனர். அதன் ஒரு பகுதியாக, நீலகிரி நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ஆ.ராசா எம்.பி, மத்தி யில் ஆளும் மோடி தலைமையிலான, பிஜேபி அரசின் தவறான ஆட்சியின் விளைவாக, அனு தினமும்,ஏறி வரும் விலைவாசி உயர்வை கண்டித்தும், மோடி அரசின் பொய்யான வாக்குறு திகளை சுட்டிக்காட்டும் விதமாக, மோடி அரசு குடும்பத்துக்கு 15 லட்சம் ரூபாய் வழங்குவதான போலி காசோ லை மற்றும் ஏறி வரும் எரிவாயு சிலி ண்டர் விலையை கண்டித்து சிலிண் டருக்கு மாலை அணிவித்தும், படித்த இளைஞர்கள் பக்கோடா சுட்டு பிழை க்கலாம் என்ற மோடியின் வார்த்தை யை விளக்கியும் நூதன முறையில் வாக்காளிடம் வாக்கு சேகரித்து வந்த நிலையில், சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய பகுதிகளான அரசூர், உக்கரம், செண்பக புதூர்,கோண மூலை,அரியப்பம்பாளையம், புளியம் பட்டி பிரிவு பகுதிகளில், தேர்தல் பரப் புரை மேற்கொண்டு, வாக்கு சேகரித...

நூதன முறையில், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன். முந்தைய அதிமுக அரசின் சாதனை களை கூறி, தீவிர வாக்கு சேகரிப்பு..

Image
தமிழகத்தில், வருகிற ஏப்ரல்19-ஆம் தேதி நடைபெற உள்ள, நாடாளுமன்ற தேர்தலைஒட்டி,அரசியல்தேர்தல்களம் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில் ,கொளுத்தும் கோடைவெப்பத்தையும் பொருட்படுத்தாத அரசியல் கட்சி வேட் பாளர்கள்,மக்களிடம் நூதன முறை யில்,வாக்குகளை சேகரித்து வருகின் றனர்.அதன் ஒருபகுதியாக, சத்திய மங்கலம் பகுதியில்,நீலகிரி நாடாளு மன்ற தொகுதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் த.லோகேஷ் தமிழ்ச் செல்வன் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தமி ழக மக்களுக்கு வழங்கிய சாதனை களை,எடுத்துரைத்தும், திமுக அரசு பொறுப்பேற்ற வுடன்,தமிழக மக்களு க்கு அதிமுக அரசு வழங்கிய, அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கை விட்டதை சுட்டிக் காட்டியும், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான, பிஜேபி அரசின் தவறான, பொருளா தாரக் கொள்கையின் விளைவாக, அனுதினமும், ஏறி வரும் விலைவாசி உயர்வை சுட்டிக் காட்டியும், வாக்கு சேகரித்தும், விவசாயிகளிடம் ஏர் பூட்டி உழுதும்,கரும்பு வெட்டியும், மல் லிகை பூப்பறித்தும்,நெசவாளர்களி டம், கைத்தறி நெசவு மூலம் பட்டு புடவை நெய்து தந்தும், தனக்க...

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக சிறப்பு தொழுகை

Image
ஈகை திருநாளான புனித ரமலான் பண்டிகை தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சா ர்பாக சிறப்பு தொழுகை மதுரை அரசரடி பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹீம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் முகமது கௌஸ், இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட செயலாளர் அர்சத் புகாரி, தமுமுக மாவட்ட செயலாளர் ஆம்புலன்ஸ் ஷேக், மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது உள்பட கட்சி நிர்வாகிகள் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் இந்த சிறப்பு தொழுகையில் கலந்துக் கொண்டு ஒருவரையொருவர் கட்டி தழுவி தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.  

யுகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளித்த சேலம் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்

Image
  சேலம் பொன்னம்மா பேட்டையில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் யுகாதி பண்டிகை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கும் உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது தொடர்ந்து சக்தி அழைப்பு உற்சவர் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் பக்தர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விபூதி குங்கும பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் அம்மன் அலங்காரங்களை அலங்கார பூசன் சீனிவாசன் அர்ச்சகர் சிறப்பாக செய்திருந்தார்.

மீண்டும் வெள்ளக்காடாக போகும் தென் மாவட்டங்கள் - தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று இரவு முதல் 3 நாட்கள் கனமழை எச்சரிக்கை.!!

Image
 மீண்டும் வெள்ளக்காடாக போகும் தென் மாவட்டங்கள் -  தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி  மாவட்டங்களுக்கு இன்று இரவு முதல் 3 நாட்கள் கனமழை எச்சரிக்கை.!!  இலங்கை அருகே உருவாகியுள்ள புதிய காற்று சுழற்சியால், நெல்லை மற்றும் துாத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில், 3 நாட்கள் கனமழை பெய்யும் என்று, வானிலை ஆராய்ச்சி ளார் ராஜா தெரிவித் துள்ளார். இதுகுறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ள தாவது: இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகு தியில், புதிய காற்று சுழற்சி உருவாகியுள் ளதால் தென் தமிழக மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 3 புதிய காற்று சுழற்சி காரணமாக துாத்துக் குடி, நெல்லை, ராம நாதபுரம் ஆகிய தென் கடலோர மாவட்டங் களில் இன்று (11ம் தேதி) இரவு முதல் கனமழை பெய்யும். தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட் டங்களில் நாளை (12ம் தேதி) கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. துாத் துக்குடி, திருச்செந் துார், காயல்பட்டினம், உவரி, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய இடங்க ளில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும். காயல் பட்டினம் பகுதியில் நாட்களுக்கு மழை தொடரும் என தெரிவித்துள்ள...

நம்பியூரில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் தீவிர பிரச்சாரம்

Image
  இந்தியா கூட்டணியின்திருப்பூர் பாராளுமன்றவேட்பாளர் சுப்பராயன் அவர்களை ஆதரித்து நம்பியூர் பேரூராட்சியில் கதிர் அரிவாள் சின்னத்தில் பூத்எண் 212, 211,ல்  மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் என். சி.சண்முகம்,பேரூர் கழக 8-வது வார்டு செயலாளர் ஆனந்தகுமார், மனோகரன், எஸ்.பி. வரதராஜ் உட்பட கழகத்தினர் தீவிரவாக்குகள் சேகரித்தனர்.

மனிதநேய நண்பர்கள் குழு சார்பாக சமுதாய நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

Image
கோவையில் மனிதநேய நண்பர்கள் குழு சார்பாக சமுதாய நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. கோவையில் அனைத்து மத நண்பர்கள் இணைந்து  மனிதநேய நண்பர்கள் குழு எனும் அமைப்பை நடத்தி வருகின்றனர்..இந்த நண்பர்கள் குழு சார்பாக சமுதாயம் சார்ந்த பல்வேறு சமூக நலப்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.. இந்நிலையில் தொடர்ந்து பதினைந்தாவது ஆண்டாக  மனிதநேய நண்பர்கள் குழு சார்பாக சமுதாய நல்லிணக்க நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்றது.அமைப்பின் தலைவர் இமயம் ரஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, சிக்கந்தர் பாஷா,ஆர்.எம்.ஓட்டல் மொய்தீன்,அன்வர்,யாசுதீன்,சாகுல்,ரபீக்,லயன் செரீப்,ரின்லி,சிக்கந்தர்,கோட்டை இஸ்மாயில்,அப்பா என்கிற அப்துல் ரகுமான், முகமது முத்து,சுலைமாப்,ஜான்சன்,விஷ்ணு,கனி,சம்சு,சதாம்,சண்முகம்,ஆசிம்,மற்றும் நண்பர்கள் இணைந்து ஒருங்கிணைத்தனர்..நிகழ்ச்சியில்,பல.சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி, கோட்டை இதாயத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் தலைவர் இனாயத்துல்லா,யு.கே.உமர்,சிங்கை மதன்,சாதிக்,கோட்டை செல்லப்பா,கோவை பைசல்...