Posts

மயிலாடுதுறை பெரிய கோவில் அருகில் ஐயன்குளம் காவிரி நீரால் நிரப்புவது எப்போது? சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கேள்வி

Image
*மயிலாடுதுறை பெரிய கோவில் அருகில் ஐயன்குளம் காவிரி நீர் நிரப்புவது எப்போது? சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கேள்வி!.*  காவிரியில் தண்ணீர் வந்து பதினைந்து நாட்களுக்கு மேலாகியும் மயிலாடுதுறை பெரியகோவில் அருகில் உள்ள நகராட்சியின் 23 வது வார்டுக்கு உட்பட்ட ஐயன்குளம் இதுவரை தண்ணீரால் நிரப்பப்படாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கின்றது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குளம் சிறப்பாக மேம்படுத்தப்பட்ட பிறகு நடை பாதைகள் அமைக்கப்பட்டு சிறப்புடன் மக்கள் பயன்படுத்தும் நிலையில் தற்போது வரை குளத்தில் தண்ணீர் நிரப்பாமல் இருப்பது மக்களிடம் மிகவும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மயிலாடுதுறை நகரத்தில் உள்ள பல குளங்கள் தண்ணீர் நிரப்பப்படாமல் இருப்பதும் அப்பகுதி மக்களின் தேவைக்கு உரிய நிலத்தடி நீர் மட்டம் உயர்வுக்கு வாய்ப்பின்றி போகின்றது. குடிநீர் தேவையை கருத்தில் கொண்டாவது உடனடியாக குளங்களில் நீர் நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார் 

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர்எல் வெங்கட்டராமன் பிறந்தநாள் விழா

Image
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர்எல் வெங்கட்டராமன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  கழகத்தின் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் புதுச்சேரி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேர்மன் ஆர்எல் வெங்கட்டராமன் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கழகத்தின் மாநில செயலாளர் சிவகுமாரன் ஏற்பாட்டின் பேரில் மணக்குள விநாயகர் கோயிலில் கழகத்தலைவர் மற்றும் சேர்மனுக்கு பரிவட்டம் கட்டி சிறப்பு பூஜை நடைப்பெற்றது. அதனை அடுத்து கழகத்தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். கழகத்தின் மாநில செயலாளர் சிவகுமாரன்,சேர்மன் ஆர்எல் வெங்கட்டராமனுக்கு ஆளுயர மாலை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து கழகத்தின் செயலாளர்கள் பரந்தாமன், ரவிகுமார் , மோகனசுந்தரம், உதவி செயலாளர் ஆண்டாள், எஸ்சிஎஸ்டி அணி தலைவர், மீனவர் அணி தலைவர் சந்திரன், துணைத்தலைவர் குமார் , ஆர்எல்வி பேரவையின் மாநில பொதுச்செயலாளர் அறம் நிஷா, மாஸ்கோ, பொருளாளர் கோமதி, மாநில செயலாளர் ராகவன், எஸ்சிஎஸ்டி அணி தலைவர் ரகோத்தமன், காமராஜ் நகர் தொகுதி ராஜாத்தி அம்மாள...

நம்பிக்கையான எதிர்காலத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் கொடுப்பார்... முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பேச்சு.

Image
 நமக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை அதிமுக பொதுச்செயலாளர் புரட்சி தமிழர்.எடப்பாடியார் கட்டாயம் கொடுப்பார் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பேசினார். திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தெற்கு தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கு கழக அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அம்மா மாளிகையில் நடைபெற்றது.   முன்னாள் துணை சபாநாயகரும் திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.  இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன், வி.பழனிச்சாமி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிர்வாகிகள் மத்தியில்  திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி.வி. ஜெயராமன் பேசும்போது கூறியதாவது: அனைத்து வார்டு செயலாளர்களும் வீடு வீடாகச் சென்று அடையாள அட்டையை உறுப்பினருக்கு நேரடியாக வழங்கிட வேண்டும், ஒருவேளை உறுப்பினர் வணங்கா விட்டாலும் எங்களிடம் பென்டிரைவ் உள்ளது நாங்கள் அவருக்கு கொடுக்கும் அளவிற்கு யாரும் வைத்துக் கொள்ள வேண்...

சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை

Image
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 57). இவர் கோவில் பூசாரி ஆவார். கடந்த 2021-ம் ஆண்டு 14 வயது சிறுமி கோவிலுக்கு சென்றபோது ஏற்பட்ட பழக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமியை ஏமாற்றி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், கர்ப்பமாக்கிய குற்றத்துக்கு 20 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை பிரிவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், கொலை மிரட்டல் பிரிவுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து...

அவிநாசி -அத்திக்கடவு திட்டம் தந்தது அதிமுக தான்... என்.எஸ்.பி., மணிமண்டப திறப்பு விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

Image
தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளுக்காவே அர்ப்பனித்து மறைந்த முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் என்.எஸ். பழனிசாமி  அவர்களின் 82வது பிறந்த நாளை முன்னிட்டு மணி மண்டப திறப்பு விழா  திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம்  நாதகவுண்டன்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது, இந்த மணிமண்டபத்தை முன்னாள் முதல்வரும், ஆதிமுக பொதுச்செயலாளருமான புரட்சித்தமிழர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்து மறைந்த விவசாயி என்.எஸ்.பழனிச்சாமி அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.  முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், பொள்ளாச்சி.வி.ஜெயராமன், செ.ம.வேலுசாமி, செ.தாமோதரன், கே.வி.ராமலிங்கம், எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், கே.என்.விஜயகுமார், சூலூர் கந்தசாமி, கழக செய்தித்தொடர்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் வாழ்த்திப்பேசினார்கள்.  இந்த நிகழ்ச்சிக்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல்தலைவர் என்.எஸ்.பி.வெற்றி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஏ.கே.சண்முகம், மாந...

சூலூர் கலங்கல் தென்றல் நகர் பகுதியில் நமது நாட்டின் 78 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

Image
சூலூர் கலங்கல் தென்றல் நகர் பகுதியில் நமது நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது பாரதிய ஜனதாக கட்சி சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றினார் விழாவில் நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு தலைவர்கள் செய்த தியாகங்கள் குறித்து விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது முடிவில் இனிப்புகள் வழங்கப்பட்டது விழாவில் ரத்தினசாமி, திருமதி.பூங்கொடி, மகேஸ்வரன், ரங்கநாதன் மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

சத்தியமங்கலம் பகுதியில் நாளை மின்தடை -

Image
தமிழ்நாடு மின்சார வாரியம், சத்தி மின் கோட்டத்தைச் சேர்ந்த செண்பக புதூர் துணை மின் நிலையத்தில்,  (17.08.2024) நாளை சனிக்கிழமை மின் பராமரிப்புபணிகள்நடைபெறுவதால், காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம்இருக்காதுஎனசத்தி மின் கோட்ட,கோட்ட பொறியாளர், டி. சண்முகசுந்தரராஜ் தெரிவித்து உள்ளார். மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் - சத்தி, காந்தி நகர், நேரு நகர், ரங்கசமுத்திரம், சத்தி பேருந்து நிலையம், கோணமூலை. VIP.நகர். செண்பக புதூர், உக்கரம், அரியப்பம் பாளையம், சுண்டக்காம்பாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம் பாளையம், கெஞ்சனூர், அய்யன் சாலை, தாண்டாம்பாளையம்.