மயிலாடுதுறை பெரிய கோவில் அருகில் ஐயன்குளம் காவிரி நீரால் நிரப்புவது எப்போது? சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கேள்வி

*மயிலாடுதுறை பெரிய கோவில் அருகில் ஐயன்குளம் காவிரி நீர் நிரப்புவது எப்போது? சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கேள்வி!.* 
காவிரியில் தண்ணீர் வந்து பதினைந்து நாட்களுக்கு மேலாகியும் மயிலாடுதுறை பெரியகோவில் அருகில் உள்ள நகராட்சியின் 23 வது வார்டுக்கு உட்பட்ட ஐயன்குளம் இதுவரை தண்ணீரால் நிரப்பப்படாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கின்றது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குளம் சிறப்பாக மேம்படுத்தப்பட்ட பிறகு நடை பாதைகள் அமைக்கப்பட்டு சிறப்புடன் மக்கள் பயன்படுத்தும் நிலையில் தற்போது வரை குளத்தில் தண்ணீர் நிரப்பாமல் இருப்பது மக்களிடம் மிகவும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மயிலாடுதுறை நகரத்தில் உள்ள பல குளங்கள் தண்ணீர் நிரப்பப்படாமல் இருப்பதும் அப்பகுதி மக்களின் தேவைக்கு உரிய நிலத்தடி நீர் மட்டம் உயர்வுக்கு வாய்ப்பின்றி போகின்றது. குடிநீர் தேவையை கருத்தில் கொண்டாவது உடனடியாக குளங்களில் நீர் நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார் 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி