புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர்எல் வெங்கட்டராமன் பிறந்தநாள் விழா

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர்எல் வெங்கட்டராமன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 
கழகத்தின் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் புதுச்சேரி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேர்மன் ஆர்எல் வெங்கட்டராமன் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கழகத்தின் மாநில செயலாளர் சிவகுமாரன் ஏற்பாட்டின் பேரில் மணக்குள விநாயகர் கோயிலில் கழகத்தலைவர் மற்றும் சேர்மனுக்கு பரிவட்டம் கட்டி சிறப்பு பூஜை நடைப்பெற்றது. அதனை அடுத்து கழகத்தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். கழகத்தின் மாநில செயலாளர் சிவகுமாரன்,சேர்மன் ஆர்எல் வெங்கட்டராமனுக்கு ஆளுயர மாலை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து கழகத்தின் செயலாளர்கள் பரந்தாமன், ரவிகுமார் , மோகனசுந்தரம், உதவி செயலாளர் ஆண்டாள், எஸ்சிஎஸ்டி அணி தலைவர், மீனவர் அணி தலைவர் சந்திரன், துணைத்தலைவர் குமார் , ஆர்எல்வி பேரவையின் மாநில பொதுச்செயலாளர் அறம் நிஷா, மாஸ்கோ, பொருளாளர் கோமதி, மாநில செயலாளர் ராகவன், எஸ்சிஎஸ்டி அணி தலைவர் ரகோத்தமன், காமராஜ் நகர் தொகுதி ராஜாத்தி அம்மாள் ,கவிதா, அருணா , கௌரி, இளைஞரணி பொதுச்செயலாளர் பிரகாஷ், செயலாளர், மற்றும் மாநில நிர்வாகிகள், தொகுதி தலைவர்கள் சுப்ரமணியன், கோகுல்,அருண், புருஷோத்தமன், மணவெளி சுலோச்சனா , கலாம் விதைகளின் விருட்சம் ராஜா மற்றும் அவரது மனைவி ரேகா, சமூக கூட்டமைப்பு குமார், மாஸ்டர் மணிகண்டன், பட்சையப்பன் , சோபியா, முரளி, வெங்கடேசன் மற்றும் நண்பர்கள் , வியாபாரிகள் கட்சி தொண்டர்கள் கலந்துக்கொண்டு மக்கள் முன்னேற்ற கழக சேர்மன் ஆர்எல் வெங்கட்டராமனை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்