சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 57). இவர் கோவில் பூசாரி ஆவார். கடந்த 2021-ம் ஆண்டு 14 வயது சிறுமி கோவிலுக்கு சென்றபோது ஏற்பட்ட பழக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 
இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமியை ஏமாற்றி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், கர்ப்பமாக்கிய குற்றத்துக்கு 20 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை பிரிவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், கொலை மிரட்டல் பிரிவுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து இதை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.


 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி