Posts

"காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் " - காட்டமான அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த்!

Image
  ''தவெகவின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா என்னை பற்றி கூறியது உண்மைக்கு மாறானது. காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்'' என்று நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.  தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் சமீபத்தில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி தமிழக அரசை கண்டித்து தவெகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தவெகவினர் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது. ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ''ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் விரட்டியது திமுக தான். திமுகவின் மிரட்டலுக்கு பயந்து அரசியலுக்கு வராமல் போன ரஜினி திமுக குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களிலே நடிக்கும் நிலைமைக்கு போய்விட்டார். விஜய்க்கு மன தைரியம் அதிகமாக இருப்பதால் தான் அவர் அரசியலில் இறங்கியிருக்கிறார்'' என்று கூறினார். ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சு ரஜினிகாந்த் ரசிகர்களை கோபப்படுத்தியது. இதனால் ரஜினி ரசிகர்களுக்கும், த...

இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காத திமுகவால் த.வெ.க, நா. த.க, நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள் - நேர்காணல் கண்துடைப்பு என்று திமுகவினர் குற்றச்சாட்டு.!

Image
  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு மார்ச் 18-ஆம் தேதி (புதன்கிழமை) நேர்காணல் நடைபெறும் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில், தூத்துக்குடி தெற்கு மற்றும் தூத்துக்குடி வடக்கு ஆகிய இரு மாவட்டப் பிரிவுகளுக்கான நேர்காணலும் ஒரே நேரத்தில் தொடங்குகிறது. தூத்துக்குடியுடன் இணைந்து அன்றைய காலை அமர்வில் திருநெல்வேலி (கிழக்கு, மத்திய, மேற்கு), தென்காசி (வடக்கு, தெற்கு) மற்றும் கன்னியாகுமரி (கிழக்கு, மேற்கு) ஆகிய மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடத்தப்பட உள்ளது. முன்னதாக, நேர்காணலின் முதல் நாளான மார்ச் 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான நேர்காணல் நடைபெறும். மார்ச் 18-ஆம் தேதி மாலை 4.00 மணி அமர்வில் மதுரை, தேனி, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் கண்துடைப்பு என்று திமுகவினர் குற்றச்சாட்டு. நேர்காணல் பற்றிய எதிர்பார்ப்பு  திமுகவினர் இடையே மகி...

தூத்துக்குடி : சாலை விதிகளை மதிக்காமல் ராங் ரூட்டில் நுழைந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு.! - அமைச்சரின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்.!

Image
  தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தவறியதாக திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும்  அதிமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு வருகை தந்தார். அவர் 3ம் மைல் பகுதியில் இருந்து நேராக வந்து, சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே வலது பக்கம் திரும்ப வேண்டும். இது தான் நடைமுறை., ஆனால் அவர் வந்த வாகனம் அவ்வாறு திரும்பாமல் இசக்கி அம்மன் கோவில் அருகிலுள்ள சிக்னலில் ஒரு வழிப்பாதையில் நேராக நுழைந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த கார், அவரது வாகனத்தை கண்டு திடீரென பிரேக் அடித்த நிலையில், அந்த காரின் பின்னால் வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாகன ஓட்டிகளைக் சமாதானப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனைத் ...

தேர்தல் பறக்கும் படை சோதனையால் மாற்றமும் இல்லை, மாற்றியமைக்க ஆளும் இல்லை.!

Image
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே  சோதனை என்ற பெயரிலான ஆய்வு ஆங்காங்கே நடத்தப்படுகிறது. இந்த ஆய்வில் சிறு குறு தொழில் செய்பவர்கள் முதல் தினமும் ஆயிரக்கணக்கில் ரொட்டேசன் செய்துவரும் கம்பெனி முதலாளி வரையில் சிக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் சில நேரங்களில் தன்னுடைய பணத்தை இழக்கவும் செய்கிறார்கள். தேர்தல் முடியும் வரை பறக்கும் படை ரவுண்ட்சும் தீவிரமாக தான் செயல்பாட்டில் இருக்கிறது. ஆனால் இதுவரையிலும், இவர்களது சோதனையில் ஒரு கார்ப்பரேட் கம்பெனி முதலாளியும் சிக்கியதாக தெரியவில்லை, எந்த அரசியவாதியும் அதாவது எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர், மேயர், நகரசபை தலைவர், பஞ்சாயத்து தலைவர் உள்ப்பட ஒரு வார்டு கவுன்சிலர்கள் கூட தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியதாக அறியமுடியவில்லை.  அதைப்போலவே இவ்வளவு நேர்மையாக நமது தேர்தல் அதிகாரிகள் நடந்து கொண்ட பின்னரும் தேர்தல் நாளில் வேட்பாளர்களுக்கு ஓட்டு போடச் சொல்லி அவரவர் தகுதிக்கேற்ப வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கத்தான் செய்கிறார்கள்.‌ அதுவும் வெளிப்படையாகவே நடக்கிறது, மக்களும் கொடுப்பவரிடம்  பயமின்றி  நேரடியாகவே கேட்டும் பெறுகின்றனர்.  அப்படினா?......

லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு - தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார் சஸ்பெண்ட். .!

Image
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரு வருட காலமாக துணை ஆணையராக பணியாற்றி வருபவர் சரவணகுமார். இதற்கு முன்பு சரவணகுமார் நாகர்கோவில். தஞ்சாவூர் அதன் பிறகு ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். பணியாற்றி வந்த காலத்தில் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது அதன் அடிப்படையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றி வரும் சரவணக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் அதற்கான உத்தரவை இன்று துணையானையர் சரவணக்குமாரிடம் வழங்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு - அலட்சியமாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.!

Image
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆரம்பகட்ட விசாரணையில் அலட்சியமாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று (மார்ச் 16) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த மார்ச் 10-ஆம் தேதி மாயமான நிலையில், மறுநாள் காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிபிஐ விசாரணை கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி மாயமான அன்றே பெற்றோர் புகார் அளித்தும், போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கை இனி விளாத்திகுளம் டிஎஸ்பி (DSP) நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடம் பெறப்படும் வாக்குமூலங்களை வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளாகச் சேமிக்க வேண்டும் என்றும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் முன்னேற்றம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை வழங்க மாற்று ஏற்பாடு!

Image
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளைச் செலுத்த மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் நேரடி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் புகார்களைப் பரிசீலிக்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இரண்டு எளிதான வழிமுறைகளை அறிவித்துள்ளது. மனுக்களை அஞ்சல் வழியாக அனுப்பலாம். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களைத் தபாலில் எழுதி, "மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இவை உரிய முறையில் பரிசீலிக்கப்படும். ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வரக்கூடிய பொதுமக்கள், அலுவலக வளாகத்தில் இதற்கெனத் பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ள "மனுக்கள் பெட்டியில்" தங்களது கோரிக்கை மனுக்களை நேரடியாகச் செலுத்தலாம். மறு உத்தரவு வரும் வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நேரில் நடைபெறாது என்பதால், பொதுமக்கள...