"காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் " - காட்டமான அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த்!
''தவெகவின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா என்னை பற்றி கூறியது உண்மைக்கு மாறானது. காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்'' என்று நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் சமீபத்தில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி தமிழக அரசை கண்டித்து தவெகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தவெகவினர் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது. ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ''ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் விரட்டியது திமுக தான். திமுகவின் மிரட்டலுக்கு பயந்து அரசியலுக்கு வராமல் போன ரஜினி திமுக குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களிலே நடிக்கும் நிலைமைக்கு போய்விட்டார். விஜய்க்கு மன தைரியம் அதிகமாக இருப்பதால் தான் அவர் அரசியலில் இறங்கியிருக்கிறார்'' என்று கூறினார். ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சு ரஜினிகாந்த் ரசிகர்களை கோபப்படுத்தியது. இதனால் ரஜினி ரசிகர்களுக்கும், த...