Posts

மூதாட்டியை தாக்கி நகை பறித்த தூத்துக்குடி கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் கைது!- சாயல்குடி அருகே துணிகரம்.!!

Image
  ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூரில், மூதாட்டி ஒருவரைத் தாக்கி தங்க நகைகளைக் கொள்ளையடித்த விவகாரத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் அவர்களது நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நரிப்பையூர் வடக்கு மறவர் தெருவைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (86). இவரது கணவர் மறைந்துவிட்ட நிலையில், மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால் மாரியம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து அவர் வீட்டிற்கு வந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். மதியம் சுமார் 2:00 மணி அளவில் மாரியம்மாளின் வீட்டிற்கு வந்த இரண்டு இளம்பெண்கள் உள்ளிட்ட மூவர், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். அவர்களை நம்பி வீட்டிற்குள் தண்ணீர் எடுக்கச் சென்ற மூதாட்டியைப் பின்தொடர்ந்த கும்பல், திடீரென அவர் கண்கள் மற்றும் முகத்தில் மிளகாய்ப்பொடி ஸ்பிரே அடித்துள்ளனர். கண் எரிச்சலில் நிலைகுலைந்த மூதாட்டியைத் துணியால் கட்டிப்போட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் மாரியம்மாள் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, அவர் அணிந்திருந்த ...

"தமிழகத்தில் திராவிட மாடல் நாயகன் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பாா்" - தூத்துக்குடியில் வாக்களித்த பின் மாநகராட்சி மேயா் ஜெகன்பொியசாமி பேட்டி.

Image
தூத்துக்குடி தமிழகத்தில் 17வது சட்டமன்ற தோ்தல் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து ஆண்கள் 6,77,004, பெண்கள் 7,10,981, மூன்றாம் பாலினத்தவர் 201 என மொத்தம் 13,88,186 வாக்காளர்கள் உள்ளனர். வாக்களிப்பிற்காக 1868 வாக்குபதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து  வாக்குப்பதிவு மையங்களிலும் காலை சரியாக ஏழு மணிக்கு வாக்கு பதிவு அலுவலா்களால் தொடங்கியது.   தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் போட்டியிடுகிறாா். புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள போல்பேட்டை தங்கம்மாள் பள்ளியில் உள்ள வாக்குபதிவு மையத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி வாக்களித்தாா்.  பின்னா் அளித்த பேட்டியில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் 5 ஆண்டுகாலம் எல்ேலாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை நடத்தியுள்ளாா். மீண்டும் திராவிட மாடல் நாயகன் ஸ்டாலின் தலைமையில...

"தமிழகத்தில் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்பாா், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது"- தூத்துக்குடியில் வாக்களித்த பின் அமைச்சர் கீதாஜீவன் பேட்டி

Image
தூத்துக்குடி தமிழகத்தில் 17வது சட்டமன்ற தோ்தல் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து ஆண்கள் 6,77,004, பெண்கள் 7,10,981, மூன்றாம் பாலினத்தவர் 201 என மொத்தம் 13,88,186 வாக்காளர்கள் உள்ளனர். வாக்களிப்பிற்காக 1868 வாக்குபதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து  வாக்குப்பதிவு மையங்களிலும் காலை சரியாக ஏழு மணிக்கு வாக்கு பதிவு ஆலுவலா்களால் தொடங்கியது.  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள போல்பேட்டை கீதாமெட்ரிக் பள்ளியில் உள்ள வாக்குபதிவு மையத்தில் தனது குடும்பத்துடன் வரிசையில் நின்று தனது முதல் வாக்காளராக தனது வாக்கினை பதிவு செய்தார். அதிகாலையிலே வாக்கு சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதாக இணைந்து வரிசையில் காத்து நின்று வாக்களித்து வருகின்றனர்.  வாக்களித்த பின்னா் அமைச்சர் கீதாஜீவன் அளித்த பேட்டியில் கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தமி...

தூத்துக்குடி : ரூ.25 கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதம் -குடோன் இடிந்து விழுந்து தரைமட்டம்

Image
  தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு எரிந்து சேதமானதுடன் குடோனும் தரைமட்டமானது. தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ஏற் பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான பஞ்சு எரிந்து சேதமான துடன் குடோனும் தரை மட்டமானது. தூத்துக்குடி 3ம்மைல் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி அமல்ராஜ்(46). இவர் வெளிநாடுகளில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்து அவற்றை இந்தியா முழுமைக்கும் விநியோகம் செய்து வரு கிறார். இதற்காக அவர் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் பெரிய குடோனை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து அதில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகளை இருப்பு வைத்துள்ளார். தற் போது பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 8ஆயிரத்து 500 பஞ்சு பேல்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று மதியம் அந்த குடோனில் திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்த செக்யூரிட்டிகள் தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் காற்றின் வேகத்தில் தீ மளமள மளவென கட்டுக்கடங்காமல் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு சிப...

தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்க இருந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி - தூத்துக்குடியில் அமைச்சா் கீதாஜீவன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Image
  தூத்துக்குடி தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்க இருந்த தொகுதி மறு சீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதோடு இணைந்த மகளிா் இடஓதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்களுக்கும் மக்களவையில் தோற்கடிக்கப்பட்டன. இதனை வரவேற்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரவேற்றிருந்தாா். முன்னதாக தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு கடுமையான எதிா்ப்பை தொிவித்து கருப்பு சட்டை அணிவித்து மசோதா நகலை எாித்தாா். இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் வேட்பாளருமான கீதாஜீவன் தலைமையில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் முன்பு வெற்றி முழக்கமிட்டனா். தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி மு.க.ஸ்டாலின் பெற்று தந்த வெற்றி என்டிஏ சதியை முறியடித்து பெற்ற வெற்றி அதிமுகவின் கூட்டாளியை தோற்கடித்துப் பெற்ற வெற்றி போராடினோம் ஓன்றாக வென்றோம். முறியடித்தோம் ஓன்றிய பாஜக அரசின் சூழ்ச்சியை முறியடித்தோம் காப்பாற்றினோம் தமிழ்நாட்டின் உாிமையை காப்பாற்றினோம். தொடரட்டும் தமிழ்நாட்டின் வெற்றி தொடரட்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக தொடரட...

ராகுல் காந்தி ஏப்.20-ம் தேதி தூத்துக்குடி வருகை- ஒரே நாளில் 3 மாவட்டங்களில் பிரச்சாரம்!

Image
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வரும் ஏப்ரல் 20 (திங்கட்கிழமை) அன்று தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.  கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் ஒரே நாளில் மூன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றுகிறார். பயணத் திட்டம். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10:45 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தனது பயணத்தைத் தொடங்குகிறார்: குளச்சல் (கன்னியாகுமரி): முற்பகல் 11:30 மணிக்குக் குளச்சலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். நாங்குநேரி (திருநெல்வேலி): பிற்பகல் 01:00 மணிக்கு நாங்குநேரி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார். ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி): பிற்பகல் 02:25 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறும் இறுதிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். மாலை 03:50 மணிக்குத் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் அவர் மீண்டும் டெல்லிக்குத் திரும்புவார் ...

"இன்றைய தலைமுறையினா் மட்டுமின்றி அடுத்த தலைமுறையையும் பற்றி சிந்தித்து பணியாற்றுகிறாா் முதல்வா் ஸ்டாலின்" பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.

Image
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் போட்டியிடுகிறாா்.        5 35 36 44 51 ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பொியசாமி, வட்டச்செயலாளர்கள் செல்வராஜ், சிங்கராஜ், சுப்பையா, கவுன்சிலா் விஜயலட்சுமி, அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.  திருவிக நகாில் பிரச்சாத்தை துவங்கி இந்திராநகா், கணேஷ்நகா், ேபால்டன்புரம், சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம், பிரையண்ட்நகா், கிருஷ்ணராஜபுரம், அன்னை வேளாங்கன்னிநகா், உள்ளிட்ட பல பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்  தமிழகத்தில் வருகின்ற 23ம் தேதி நடைபெறவுள்ள தோ்தல் நமக்கான தோ்தலாகும் அதில்உங்களுக்காக பணியாற்றும் மக்கள் பிரதிநிதியை தோ்ந்தெடுக்கும் தோ்தலாகும், தமிழகத்தில் 5 ஆண்டுகாலம் முதலமைச்சா் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடைபெற்றுள்ளது. கீழடி அகல்வாராய்சி அறிக்கையை கூட ஏற்பதற்கு ஓன்றி...