Posts

Showing posts from September, 2019

திருப்பூரில் திமுக 51-வது வட்ட கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்றி கல்வெட்டு திறப்பு விழா

Image
திமுக 51-வது வட்ட கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்றி கல் வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் திறந்து வைத்தார். திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக 51-வது வட்ட கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்றி கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூரில் தி.மு.க. வடக்கு மாவட்டம், கருவம்பாளையம் பகுதிகழகம் சார்பில் 51-வது வட்ட தி.மு.க செயலாளர் ஆதவன் முருகேசன், பகுதிகழக அவைத்தலைவர் தம்பி.குமாரசாமி ஆகியோர் தலைமையில் திருப்பூர், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம், ஈஸ்வர பேக்கரி நால்ரோடு அருகே புதிதாக கட்டப்பட்ட சிட்டிபாபு நினைவு மன்றம், 51-வது வட்ட தி.மு.க அலுவலகத்தை வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாநகர செயலாளர் டி.கே.டி.நாகராசன், முன்னாள் மாவட்ட பொருளாளர் மேங்கோ அ.பழனிசாமி, மாநகர நிர்வாகிகள் சிட்டி கணேசன், ஈஸ்வரமூர்த்தி, வேலுச்சாமி, செந்தூர் முத்து, சுகன்யா லோகநாதன், அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சன் டிவி "...

கோபி அரசு மருத்துவமனையில் நோயாளர் நலச்சங்க கூட்டம்

Image
கோபிசெட்டிபாளையம் அரசுமருத்துவமனையில் நோயாளர் நலச்சங்க கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் திரு.C.ஜெயராமன் அவர்கள் தலைமையில்,தலைமை மருத்துவர் நடைபெற்றது. Dr P.T.ஆனந்தன் MS முன்னிலை வகித்தார்கள். இந்தக்கூட்டத்தில் மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவது,புதிய படுக்கைவிரிப்புகள் கொள்முதல் செய்தல்,மருத்துவமனை வளாகத்தை வர்ணம் பூசுதல்,கழிவுநீர் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இக்கூட்டத்தி ல் வருவாய் வட்டாட்சியர்,நகராட்சி ஆணையாளர்,வட்டார வளர்ச்சி அலுவலர்,வட்டார மருத்துவ அலுவலர்,இளமின்பொறியாளர்,கோபி கலைக்கல்லூரி முதல்வர்,இந்திய மருத்துவசங்க தலைவர்,சங்ககிரிசெட்டியார் ஜவுளிக்கடை உரிமையாளர் உள்ளிட்ட நோயாளர் நலச்சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்  

திருப்பூர் ரோட்டரி கிளப் சார்பாக முப்பெரும் விழா  

Image
திருப்பூர் ரோட்டரி கிளப் சார்பாக முப்பெரும் விழா  நடைபெற்றது.     திருப்பூர் ரோட்டரி கிளப் சார்பாக முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ரோட்டரி கிளப் தலைவர் டாக்டர் கவிதா லட்சுமி வரவேற்புரை ஆற்றினார், ரோட்டரி சங்கச்செயலாளர் இராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.  இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்டத் தலைவர் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தினுடைய மேட்டுப்பாளையம் கிளையின் தலைவருமான டாக்டர். இஸ்மாயில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  இவ்விழாவில்  உறுப்பினர்கள் புதியதாக சங்கத்தில் இணைத்தனர். சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் பிறந்த நாள் விழா மற்றும் உறுப்பினர்களின் திருமணநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் சமீபத்தில் பெற்றோரை இழந்த இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பிற்காக தலா ரூ.10,000 கிளப் சார்பாக ரோட்டேரியன் சிவசுப்பிரமணியன் வழங்கினார். மேலும்  திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் சங்கப் பொருளாளர் சீனிவாசன் நன்றி கூற விழா இனிதே நிறைவுப் பெற்றது.

இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க நாங்கள் வலியுறுத்துவோம் - இலங்கை மீனவர்கள் 

Image
இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க நாங்கள் வலியுறுத்துவோம் என்று இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.     இலங்கையை சேர்ந்த  மீனவர்கள்  ராஜேஷ், வசீகரன், முகமது ரிகாஸ் ஆகியோர் எல்லைத்தாண்டி இந்திய பகுதிக்குள் மீன் பிடித்ததாக கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வேதாரண்யம் பகுதியில்  கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.    கைதான மீனவர்களின் தண்டனை காலம் முடிந்தும் உரிய ஆவணங்கள் இல்லாததால் இலங்கை திரும்ப முடியாமல் இருந்தனர். இந்நிலையில் , தகவலறிந்த  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் ஜெயந்தி   சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தின் உதவியுடன் ஆவணங்கள் தயார் செய்து 3 பேரும் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.    முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பேசிய இலங்கை மீனவர் ராஜேஷ், வழிதவறி இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்க வந்ததாகவும் மூன்று மாதகாலமாக எங்களை யாரும் தொடர்பு கொள்ளாத நிலையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் ஜெயந்தி  தங்களை சந்தித்து உதவியதாக கூறினார். தங்களது நாட்டிற்கு திரும்ப சட்ட...

தாராபுரம் வட்டத்தில் புதிதாக அமையவுள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள இரும்பு உருக்கு மற்றும் உருட்டு ஆலை தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது

Image
தாராபுரம் வட்டத்தில், புதிதாக அமையவுள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள இரும்பு உருக்கு மற்றும் உருட்டு ஆலை தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அழகு நாச்சியம்மன் திருமண மண்டபத்தில், தாராபுரம் வட்டம் வடுகபாளையம் கிராமத்தில் புதிதாக அமையவுள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள இரும்பு உருக்கு மற்றும் உருட்டு ஆலை தொடர்பான தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் பொதுமக்கள் உடனான கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் ஸ்ரீகௌரி ஸ்டீல் ரோலிங் மில் நிறுவனத்தின் சார்பில் அமையவுள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள இரும்பு உருக்கு மற்றும் உருட்டு ஆலை தொடர்பான, இந்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டம் 1986-ன் கீழ் வெளியிடப்பட்ட 2006-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் படி பொதுமக்கள் உடனான கருத்து கேட்புரைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிதாக அமையவுள்ள உத்தேச...

சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையின் 34-வது ஆண்டு விழா

Image
சேலம் ரயில்வே கோட்டத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையின் 34-வது ஆண்டு விழா ரயில்வே கோட்ட மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் தலைமை தாங்கி, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.   பின்னர் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: ரயில்வே பாதுகாப்புப் படையினர் எவ்வித சவால்களையும் எதிர்கொண்டு சிறப்பாக செயல்படுவர் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பயணிகளிடம் உள்ளது. நாடு முழுவதும் ரயில்வே துறைக்கு சொந்தமாக உள்ள சொத்துகளை பாதுகாப்பதுடன், ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பளிப்பது, ரயில்வே பாதுகாப்புப் படையின் முக்கிய பணியாக உள்ளது. ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பளிப்பது, ரயில்வே பாதுகாப்புப் படையின் முக்கிய கடமை என்று மத்திய ரயில்வே அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, ரயில்வே பாதுகாப்புப் படையின் 40 சதவீத வீரர்கள், தினமும் 51 ரயில்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ரயில்களில், பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக, சக்தி படை எனும் பெண் காவலர்கள் பணிபுரிகின்றனர்....

திட்டக்குடி தாலுக்கா கல்லூர் கிராமத்தில் புதிய  இந்தியன் வங்கி கிளை ஏடிஎம் திறப்பு

Image
திட்டக்குடி தாலுக்கா கல்லூர் கிராமத்தில் புதிய  இந்தியன் வங்கி கிளை ஏடிஎம் திறப்பு விழா     கடலூர் மாவட்டம்  திட்டக்குடி தாலுக்கா  கால்லூர் கிராமத்திலுள்ள தமிழ்நாடு கிராம வங்கியின் சார்பில் இந்தியன் வங்கி கிளை ஏடிஎம் மையம் திறப்பு விழா நடைபெற்றது.  விழாவிற்கு வட்டார மேலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கல்லூர் வங்கியின் மேலாளர் மகேஸ்வரி மற்றும் அடரி அருணஜடேசன் தலைமை தாங்கினார்.  கரூர் வைஸ்யா வங்கியின் மேலாளர் சுரேஷ் வேப்பூர் இந்தியன்  வங்கி மேலாளர் செல்வி கனிமொழி ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ் ஆர் சங்கர் அவர்கள் கலந்துகொண்டு ஏடிஎம் மையத்தை திறந்து வைத்து பின் குத்துவிளக்கு ஏற்றி பணம் எடுக்கும் வசதியும் தொடங்கிவைத்தார். பின் வங்கியில் குறைந்த சதவீதம் வட்டியில் விவசாயிகளுக்கு லோன் மற்றும் நகை கடன் வழங்கப் படுகிறது என்று பேசினார். இறுதியில் கிராமாலயா மைக்ரோ பைனான்ஸ் மேலாளர் ரமேஷ் மற்றும் மனோகரன் நன்றி கூறினார்கள். இதில் வங்கி ஊழியர்கள் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பழையபாளையம் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு

Image
பழையபாளையம் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையபாளையம் கிராமத்தில் ஊராட்சிக்குச் சொந்தமான பழத்தோட்டத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப் புத்திட்டத்தின் கீழ் பல வகையான மரக்கன்றுகள் நடும் பணியை கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் சரவணன், உதவிப்பொறியாளர் வேல்கண்ணன், ஊராட்சி செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மத்திய நீர் வளத்துறை ஆதாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் முறைகள் பற்றி தொழிலாளார்களிடம் ஆலோசனை வழங்கினார்.

விருத்தாசலத்தில் அனுமதி இன்றி அரசு மதுபானம் விற்ற 5 பேர் கைது

Image
விருத்தாசலத்தில் அனுமதி இன்றி அரசு மதுபானம் விற்ற 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.       கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பவர்களை 5 - பேர் மாவட்ட காவல்கூடுதல்  துணை கண்காணிப்பாளர் தீபா சத்யன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் சந்தேகத்திற்கிடமான நபர்களை அழைத்து விசாரணை செய்ததில்   விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தைச் சேர்ந்த துரை 31 த/பெ செல்வம், அரியலூர் மாவட்டம் கூவாகம் கிராமத்தை சேர்ந்த மேகநாதன் வயது 40 த/பெ கண்ணன், விருத்தாசலம் ஆயிர்மடம் தெருவை சேர்ந்த கொளஞ்சி வயது -42 க /பெ ராஜாங்கம், விருத்தாசலம் பாலக்கரை கலை வயது 42 த/பெ மாயவன், விருத்தாசலம் ஆயிரம் மட்டும் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் வயது 36 ராமலிங்கம் இவர்கள் 5 பேரும் ஜங்ஷன் பாலக்கரை ஆயிரம் பூத் ஆம்பூர் ஆகிய பகுதிகளில் அரசு மதுபானங்களை அனுமதி இன்றி கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்தது ரகசிய தகவலின் அடிப்படையில் விருத்தாசலம் மாவட்ட காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் தீபா சத்யன் தலைமையிலான   உடன் விருத்தாசலம் உதவி ஆய்வாளர்கள் புஷ்பராஜ் எழில் குமார...

லாபத்தில் இயங்கும் 15க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை தனியாருக்கு தர இருப்பதை எதிர்த்து போராட்டம்

Image
லாபத்தில் இயங்கும் விமான நிலையங்களை தனியாருக்கு விற்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் விமான நிலைய கூட்டு குழு போராட்டத்தை நடத்துகிறது.     அதைப்பற்றி விமான நிலைய கூட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-  இந்தியாவில் உள்ள 126 விமான நிலையங்களில் 3 நாள் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. லாபத்தில் இயங்கும் விமான நிலையங்களை தனியாருக்கு விற்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் விமான நிலைய கூட்டு குழு போராட்டத்தை நடத்துகிறது. 123 விமான நிலையங்களை விமான ஆணையகம் நிர்வகித்து வருகிறது. 90க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் நஷ்டத்தில் இயங்குகிறது. 20ல் இருந்து 25 விமான நிலையங்கள் லாபத்தில் இயங்குகிறது. லாபத்தில் இயங்கும் 15க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை தனியாருக்கு தர இருப்பதை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர் விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. அப்போது எந்தவொரு விமான நிலையத்தையும் தனியாருக்கு வழங்கப்பட மாட்டாது என்று ஒப்பந்தம் ...

கீழரடி ஆராய்ச்சி முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்

Image
கீழரடி ஆராய்ச்சி முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் பேட்டி :-     கீழரடி மட்டுமின்றி தமிழ் வளர்ச்சி துறை, கலை பண்பாட்டு துறை, தொழிலியல் துறை, அருங்காட்சியகம் ஆகிய 4 துறைகளுக்கும் பல திட்டங்களுக்கு அனுமதி பெறுவதற்கான மத்திய அமைச்சர்களை சந்தித்து விளக்கப்பட்டது. உள்துறையில் இருக்க கூடிய மொழி தொடர்பான அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் புறப்படும் மற்றும் தரையிறங்கும் எல்லா விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு செய்யவதற்கான கோரிக்கையை ஆணை பிற்பிக்க வலியுறுத்தியும் செல்கிறேன். இதற்கான ஆணை விரைவில் பிற்பிக்கப்படும்.  கீழரடியில் அருங்காட்சியகம் அமைக்க மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. மத்திய அரசின் நிதியாக ரூ.15 கோடி கேட்டு உள்ளோம்.    3 அருங்காட்சியகங்களுக்கு தரம் உயர்த்த நிதியை கேட்டு உள்ளோம். தமிழ் வளர்ச்சி துறை உலகம் முழுவதும் ஆயிரம் தமிழ் வள மையங்கள் அமைக்க ரூ.50 கோடி நிதியை கேட்டு உள்ளோம். இந்தியாவில் முக்கிய நகரங்களில் தமிழ் வள மையங்கள் அமைத்து வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழை படிக்க உதவியாக இருக்கும். இந்...

வேப்பூர் பகுதியில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் மக்காசோள பயிரில் ஆய்வு

Image
நல்லுார் வட்டார வேளாண்மை துறை, ஜே.எஸ்.ஏ., வேளாண் கல்லுாரி இணைந்து மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்     கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள பெரியநெசலூர்  ஊராட்சி பகுதியில் உள்ள  மக்கா சோள பயிர் சாகுபடியில் வேளாண்மை துணை இயக்குனர் வேல்விழி தலைமையில் நல்லுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கீதா, வேளாண்மை அலுவலர் திவ்யா, அட்மா  தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை ஆகியோர்  முன்னிலையில்  ஆய்வு மேற்கொண்டனர். ஜெ,எஸ், ஏ , வேளாண்மை கல்லுாரி இயக்குனர் ராஜன், முதல்வர் தானுநாதன் தலைமையில் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.     பெரியநெசலுார், நிராமணி, வலசை, வண்ணாத்துார் ஆகிய  கிராமங்களில்  மக்காச் சோளத்தில், படைப்புழு தாக்குதல் குறித்து ஆய்வு செய்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சிக்களை நல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் கீதா  ஏற்பாடு செய்தார்

திருப்பூர் மாவட்ட கலெக்டராக கே. விஜய கார்த்திகேயன் பொறுப் பேற்றார்

Image
திருப்பூர் மாவட்ட கலெக்டராக கே. விஜய கார்த்திகேயன் பொறுப் பேற்ற்றுக் கொண்டார்.     திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டாவது மாடியில் உள்ள கலெக்டரின் அருகில் விஜய கார்த்திகேயன் ஐஏஎஸ் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜான் ஜகத் பிரைட் உள்ளிட்ட அலுவலர்கள் வரவேற்றனர். திருப்பூரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மக்கள் குறைதீர்ப்பு பணிகளை செவ்வனே செய்யவும், முதல்வரின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன் என கூறினார்.   இவர் ஏற்கனவே கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆணையராகவும், நகர்ப்புற வளர்ச்சித் துறையின் இயக்குனராகவும் பணியாற்றியவர். முன்னதாக ஈரோடு, கோவில்பட்டி சப் கலெக்டராக பணியாற்றி உள்ளார். இவர் ஒரு மருத்துவர். மதுரையில் 1986 ஜனவரி 8 ல் பிறந்த இவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா கல்லூரியில் 2009 ஆம் ஆண்டு மருத்துவம் பயின்றுள்ளார். பின்னர் அரசியல் சார் நிர்வாகவியல் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.  கலெக்டர் விஜய கார்த்திகேயன் தந்தை, கண்ணன் ஐ.எப்.எஸ்., அதிகாரியாக இருந்தவ...

திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக திருமுருகன் பூண்டி பேரூராட்சி செயல் வீரார்கள் ஆலோசனைக்கூட்டம்

Image
திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக திருமுருகன் பூண்டி பேரூராட்சி செயல் வீரார்கள் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகர மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. அவைத்தலைவர் பழனிசாமி, அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் லதா சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் மு.சுப்பிரமணியன், பூண்டி பழனிசாமி, விஸ்வநாதன்,  ஆனந்தகுமார், ஜெகதீஸ், நீதிராஜன், ஷாஜகான், எம்.கே.எம்.கணேஷ், ஏ.ஆர்.கே.கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர் கொங்கு பள்ளி மாணவன் வில்வித்தை போட்டியில் தங்க பதக்கம்

Image
திருப்பூர் கொங்கு பள்ளி மாணவன் வில்வித்தை போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.     தமிழ்நாடு இன்டோர் ஃபீல்ட் 14 வயதுக்குட்பட்டோருக்கான வில்வித்தை போட்டிகள் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சாம் அகாடமியில் நடைபெற்றது  இதில் 40 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இதில் திருப்பூர் கே எஸ் ஏ மல்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சேர்ந்த சைலேஷ்.தங்கப் பதக்கத்தையும். சஞ்சய் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர். இதில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர் சைலேஷ் கூறும்போது பயிற்சியாளர் வெங்கடேஷ் அவர்களின் சிறப்பான பயிற்சியால் மாநில அளவில் முதலிடம் பெற்று திருப்பூருக்கு பெருமை சேர்த்துள்ளேன் வருங்காலத்தில் இந்திய அளவில் வெற்றி பெறுவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளேன் நான் வெற்றி பெறுவதற்காக உதவி புரிந்த பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

வேப்பூர் கூட்ரோட்டில் சாக்கடை தேங்கி நிற்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில் திருச்சி சென்னை, சேலம் கடலூர் செல்லும் முக்கிய இணைப்பு சாலை உள்ளது தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.   தற்போது பருவ மழை பெய்து வருவதால் மழைநீர் சாக்கடையில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது அதில் உற்பத்தியாகும் கொசுக்களால் பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறைக்கும் நல்லூர் ஊராட்சி ஒன்றியத் திற்கும் தகவல் தெரிவித்தோம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இன்று காலை சாக்கடையை அகற்றி வடிகால் வாய்க்கால் அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குவட்ட குழு உறுப்பினர் நல்லூர் சாமிதுரை தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் அசோகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.   ஆர்ப்பாட்டத்தில் வட்டக்குழு சிவஞானம், கிளைச் செயலாளர்கள் முத்துசாமி, சம்பத், தூண்டிக்காரன், வீரமணி, பாண்டியன், நகர் சோமு, சேப்பாக்கம் கணேசன்,  பெரியசாமி, டை பி வட்டத் தலைவர் இளையராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் வேப்பூர் வருவாய் ஆய்வாளர் வேப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தனிப்பிரிவு ஏற்றி...

சிறுபாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்

Image
  கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுப்பாக்கம் பகுதியில் கடந்த ஆண்டு மக்காச்சோளம் பயிரிட்டு படைப்புழு வால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக நிவாரணம் வழங்காததை கண்டித்தும் நிவாரணம் வழங்காமல் விடுபட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் சிறுபாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.   தகவல் அறிந்து அங்கு வந்த வேப்பூர் வட்டாட்சியர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் காவல்துறையினர் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தனர் இதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.      

சீர்காழியில் காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

Image
சீர்காழியில் காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் சட்டமன்ற தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் வசந்த மாளிகை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்சியின் நாகை வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.ராஜகுமார் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்ரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவப்பிரகாசம், சரத்சந்திரன், ஏ.பி.எஸ்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் வழக்கறிஞர் கே.பி.எஸ்.எம்.கணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். நகர தலைவர் லெட்சுமணன் வரவேற்றார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், மாநில பொது செயலாளர் கீரனூர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கே.அறிவுடைநம்பி, வி.ஆர்.ஏ.அன்பு, பானுசேகர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரணவன், மாவட்ட காங்கிரஸ் இணைபொதுசெயலாளர் ராமு, சீர்காழி நகர பொது செயலாளர் எஸ்.கலியபெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சுப்பராயன், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் எம்.சிவராமன், உசேன், தீனதயாளன் மற்றும் பவர் கலந்து கொண்டார்கள்...

சத்தியமங்கலம் நகராட்சி கடைவீதியில் திடீர் மறியலால்

Image
சத்தியமங்கலம் நகராட்சி, கடைவீதியில்  தானாக ஏற்பட்ட பாதாள குழிகளால் பொதுமக்கள் பாதிப்பு ! செப்பனிட கோரி திடீர் மறியலால் போக்குவரத்து பாதிப்பு.    சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் கடந்த  2016ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில், 52 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது. ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டத்தால், பொதுமக்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகி வருகின்றனர். நகரின் முக்கிய வீதிகளில் தோண்டப்பட்ட குழிகளில், பைப் லைன் பதிக்கப்பட்டது. அதன் பிறகு முழுவதுமாக குழிகளை மூடாமல், பெயரளவுக்கு மீண்டும் மண்ணை கொட்டிவிட்டு அப்படியே விட்டு விட்டு சென்று விடுவதால், ஆங்காங்கே சரக்கு லாரிகள் குழிகளில் இறங்கியும், குடிநீர் குழாய்கள் துண்டிப்பு ஏற்படுவதும், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்திற்குள்ளாகி வருவதும் வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் கடைவீதியில் நேற்று காலை திடீரென 40 அடி நீளத்தில் ஐந்து அடி ஆழத்தில் தானாக சாலையில் பிளவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாலை பிளந்ததால், எந்த வாகனமும் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டது. இருசக்கர வாகனத்தில் ச...

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு

Image
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் திமுக தலைவர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது     பல போராட்டங்களுக்கு இடையே, அதில் வெற்றி கண்டு, அதன் நீட்டியாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது. கருணாநிதி மறைவிற்குப் பின்னால், முதன்முதலில் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கருணாநிதியின் குருகுலமாக விளங்கிய ஈரோட்டில் 2019 ஜனவரி மாதம் முனிசிபல் காலனி பகுதியில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டது. அதன் பின் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்திலும், திருச்சியிலும் கருணாநிதி சிலை திறக்கப்பட்டது. கருணாநிதியின் மூத்த பிள்ளையாக விளங்கும் முரசொலி வளாகத்தில் கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். அதன் பின் தற்போது ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் திறக்கப்பட்டுள்ளது.    திராவிட இயக்கத்தில் இருந்து, தியாகங்கள் செய்து, இயக்கத்திற்காக பாடுபட்டு, திராவிடக் கொள்கைகளை பரப்பிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஏ.டி. பன்னீர்செல்வம் பெயரில் அமைந்த பன்னீர்செல்வம் பூங்காவில், தமிழகத்திற்கு பல தியாகங்கள் செய்த கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டுள...

அத்திக்கடவு அவினாசி திட்டம் பணிகளில் ஐந்தாவது நீரேற்று நிலைய துவக்கப் பணிகள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

Image
நம்பியூர் அருகே உள்ள வரப்பாளையம் தில் அத்திக்கடவு அவினாசி திட்டம் பணிகளில் ஐந்தாவது நீரேற்று நிலைய துவக்கப் பணிகள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.     நம்பியூர் அருகே உள்ள வர பாளையத்தில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் ஐந்தாவது நீரேற்று நிலைய பணிகள் துவக்க விழா மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். அந்தியூர் தொகுதி எம்எல்ஏ ராஜா சம்பத், பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரன், நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ,மாவட்ட எஸ்.பி சக்தி கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே .ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசினார் அப்போது பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்பினர் பொதுமக்கள் என பலர் பல்வேறு தியாகங்களை செய்து இந்தத் திட்டமானது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டு தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சுமார் 1652 க...

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட  வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார் தலைமையில் நடைபெற்றது

Image
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட  வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார்  தலைமையில் நடைபெற்றது.                திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட  வருவாய் அலுவலர் டாக்டர்.ஆர்.சுகுமார்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைபட்டா மற்றும்  முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலைவசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 248 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு  மாவட்ட வருவாய் அலுவலர்  அவர்கள் அறிவுறுத்தினார். தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.25,000 மதிப்பில் செயற்கை அவயங்களையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ்; திருப்பூர் வடக்கு வட்டத்தைச் சார்ந்த 1 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000 மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான  உதவித் தொகையினையும் என 3 பயனாள...

சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

Image
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் முக்கிய கடை வீதி பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தனியார் பள்ளியில் சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.       இந்நிகழ்விற்கு  சிறு குறு விவசாய சங்கத் தலைவர் இதயத்துல்லா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் இளைய அன்பழகன் சிறு குறு விவசாயிகள் சங்கம் விளக்க உரையாற்றினார் செந்தில்குமார்.     சிறு குறு விவசாயிகள் சங்கம் துணைத்தலைவர் வரவேற்புரையாற்றினார். அருள், கணேசன், கலைவேந்தன், ரவிக்குமார், பாலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஜாகிர் உசேன் கார்த்திகேயன் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்ட துணை அமைப்பாளர் விமல் ராஜ் உள்ளிட்டோர் கருத்துரை செய்தனர். இறுதியாக ஜாஹிர் உசேன் நன்றி கூறினார்.      

வேப்பூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து 2 லட்சம் பணம் ஒரு லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு

Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள சிறுப்பாக்கம் ஊராட்சியில் மாரியம்மன் கோயில் உள்ளது.   கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  அது முதல் தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மர்மநபர்கள் யாரோ கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் பிரார்த்தனைக்காக அம்மனுக்கு அளிக்கப்பட்ட தங்கம், வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.   உண்டியலில் இரண்டு லட்சம் ரூபாய் பணமும் ஒரு லட்சம் மதிப்புள்ள நகைகளும் இருந்திருக்கலாம் என கூறுகின்றனர். இதுகுறித்து சிறுப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்து அதன் பேரில் கோயில் உண்டியலை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் சார்பில் பொதுக் குழு கூட்டம்

Image
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் ஒன்றிய தலைவர் தேசிகன்தலைமை தாங்கினார்.  வேல்முருகன் அன்பு ராணி எழிலரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிச்சை பிள்ளை ஒன்றிய செயலாளர் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் 2019 ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை முடித்தல் சமையலறை மற்றும் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு தர வேண்டும் ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு சிறப்பு சேமநல நிதி வழங்க வேண்டும் சத்துணவு பணியாளர்களுக்கு முழுநேர பணியும் நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும் காலியாக உள்ள பொறுப்பாளர்களை சமையலர் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.   கல்வித்தகுதி உள்ள சமையல் உதவியாளர்களுக்கு பொருளாதார பதவி உயர்வை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட ...

அரசின் நல திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்ல முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேண்டுகோள்

Image
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக., சார்பில், அவினாசி வடக்கு ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், சேவூர் சிவசக்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.இந்த கூட்டத்துக்கு, அவைத்தலைவர் பழனிசாமி , அவினாசி வடக்கு ஒன்றிய  செயலாளர் சேவூர் வேலுசாமி, முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது கூறியதாவது: என்னை பொருத்த மட்டிலும் மாண்புமிகு இதயதெய்வம் நம்மை விட்டு மறைந்தாலும் நம் இதயங்களில் குடிகொண்டு இருக்கக்கூடிய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமக்கு உள்ளங்களில் வசித்து வருகிறார்.   தமிழகத்திலே   அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்  ஒரு முன்னோடி இயக்கம் என்ற அளவில் இந்தியாவின் மூன்றாவது பெரிய இயக்கமாக உருவாகி உள்ளது.இன்றைக்கு வேலை இல்லாத , ஏழை எளிய மக்களுக்கு  வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகள் தமிழ்நாடு முழுக்க பசுமை வீடுகள் கட்டித்தந்தவர் புரட்சித்தலைவி அம்மா அ...

சேலம் கோட்டம் சரக்கு பார்சல் மூலம் 5 மாதங்களில் ரூ.6.95 கோடி வருவாய் -முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன்

Image
சேலம் ரயில்வே கோட்டம் சரக்கு பார்சல் மூலம் கடந்த 5 மாதங்களில் ரூ.6.95 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார். ஈரோட்டில் தொழில் நிறுவன கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் 850 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில் சேலம் ரயில்வே சார்பில் ஒரு அரங்கும் நிறுவப்பட்டுள்ளது. இந்த தொழில் நிறுவன கண்காட்சியை சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் கூறியது: சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 32 ரயில் நிலையங்களில் பார்சல் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கரூர், மேட்டுப்பாளையம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களாகும். ரயில்களில் பார்சல்களை முன்பதிவு செய்து எடுத்து செல்ல நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த பார்சல் குறுகிய தூரம், நீண்ட தொலைவு செல்லும் ரயில்களில் எடுத்து செல்லப்படுகிறது. அதேபோல வாடிக்கையாளர்கள் சுமார் 23 டன்களுக்கு அதிகமாக உள்ள சரக்குகளை எடுத்து செல்ல ரயில் நிலைய பார்சல் அலுவலகங்களை அணுகலாம். இதுதவ...

மாணவ -மாணவிகளின் பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்யும் முகாமினை துவக்கி வைத்தார் திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார்

Image
திருப்பூர் பெருமாநல்லூர் அரசு மகளிர் பள்ளி, விக்னேசுவரா பள்ளி பசுமை இயக்கம் சார்பில், மாணவ -மாணவிகளின் பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்யும் முகாம் நடைபெற்றது.     திருப்பூர் பெருமாநல்லூர் அரசு மகளிர் பள்ளி, விக்னேசுவரா பள்ளி பசுமை இயக்கம் சார்பில், மாணவ -மாணவிகளின் பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்யும் முகாமினை திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் துவக்கி வைத்து, மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு உபகாரணங்களை வழங்கினார்.       இந்த நிகழ்ச்சியில் பள்ளி வளர்ச்சிக்குழு டாக்டர் கோவிந்தராஜ், கிராமிய மக்கள் இயக்கம் சம்பத்குமார், மாஸ்டர் பிரகாஷ், விக்னேசுவரா பள்ளி தாளாளர் முருகசாமி, பாசறை சந்திரசேகர், சுப்பிரமணியம், முத்து ரத்தினம், வேல்முருகன் சாமிநாதன், உத்தம பாண்டியன் பாலசுப்பிரமணியம், ஐஸ்வர்யா மகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.           

பழனி தாலுகா சின்ன கலையமுத்தூரில் உள்ள குளத்தை காவல்துறையினருடன் பொதுமக்களும் இணைந்து  தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்  

Image
பழனி தாலுகா சின்ன கலையமுத்தூரில் உள்ள குளத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உத்தரவின்படி பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் மற்றும் ஆண் காவலர்கள் குளத்தை தூர்வாரும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஈடுபட்டனர். காவல்துறையினருடன் இணைந்து சுற்றுவட்டார பொதுமக்களும் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். குளத்தை தூர்வாருவதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் தேவைகளும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால் காவல்துறை மக்களுடன் இணைந்து சமூக பணிகளை செய்து வருகிறனர். மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த காவல்துறையின் இச்செயலை சுற்றுவட்டார பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.  

 தமிழ்நாடு அரசின் சிறப்பு மருத்துவ முகாம் - பல்லடம் எம்.எல்.ஏ கரைப்புதூர் A.நடராஜன் துவக்கி துவக்கி வைத்தார்

Image
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொங்கலூர் ஒன்றியம் காட்டூர் ஊராட்சி காட்டூரில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தமிழ்நாடு அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் A.நடராஜன் துவக்கி துவக்கி வைத்தார். உடன் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் Ex, சேர்மன் சிவாசலம், காட்டூர் பிரகாஷ், முருகராஜ், தங்கவேல், லோகநாதன், தாமோதரசாமி, மற்றும் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.    

வேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்புமருத்துவ முகாம் - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ துவக்கி வைத்தார்

Image
வேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமினை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டம், வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, சிறப்பு மருத்துவ முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மேலும், மருத்துவ முகாம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட சத்துணவு உணவு பொருட்களின் விழிப்புணர்வு கண்காட்சியினை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில்  அமைச்சர்  பேசியதாவது:- இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் அரசு மக்களைத்தேடி கிராமப்புறங்களுக்கு சென்று மருத்துவ முகாம் உள்ளிட்ட பொது மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.  புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011ம் ஆண்டு முதலமை...

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான்

Image
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் - ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் போஷன் அபியான் ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டம், தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி வளாகத்தில் இன்று  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்து கொண்டு, மினி மாரத்தான் ஓட்டம் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் துணைவியார் அத்தியாஷா நந்தூரி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) கீதாராணி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். மினி மாரத்தான் போட்டியானது வ.உ.சி கல்லூரி வளாகத்தில் துவங்கி, தருவை விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது:...

கோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கானஇலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம்

Image
கோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கான இலவச  அக்குபஞ்சர் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சரஸ்வதி மஹால் மேன்சனில் இருக்கும் ஸ்ரீரத்னா மாற்றுமுறை மருத்துவமனையில் காலை 10 மணிக்கு பயிற்சி முகாம் தொடங்கியது. இந்திய இயற்கை மருத்துவக் கவுன்சில் (INTC) சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான இலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம் வகுப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) மாநிலக் குழு உறுப்பினர் மல்லிகா அவர்கள் தொடங்கி வைத்தார். "மருந்தில்லா மருத்துவமாய்" இருக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை முறை குறித்து சிறப்புரை ஆற்றினார். இந்த பயிற்சி வகுப்பில் இந்திய இயற்கை மருத்துவ கவுன்சில் (IRTC) அக்குபஞ்சர் மருத்துவர்கள் பாம்பலம்மாள், ரமா, சங்கரநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு அக்குபஞ்சர் மருத்துவம் முறை குறித்தும், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் விரிவான வகுப்பு எடுத்தனர். பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். நிறைவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மாவட்டக்குழு உறுப்பினர் தினேஷ் குமார் அவர்கள் நிறைவுரை ஆற்ற...

கோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாட குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு

Image
கோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாட குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி, கோவில்பட்டி ரோட்டரி  சங்கம்,கோவில்பட்டி குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கோவில்பட்டி நகராட்சி கூட்டரங்கில் வைத்து தூய்மையே சேவை இயக்க விழா நடைப் பெற்றது. சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய நூற்றாண்டு தினமான செப்டம்பர் 11 முதல் தீபாவளி தினம் அக்டோபர் 27 வரை தூய்மையே சேவை இயக்கம் மூலம் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்பணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகராட்சியில் நடந்த விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறைத்தல், மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடு என்ற கோட்பாட்டின் திட, திரவ கழிவு மேலாண்மை திட்டத்தினை பாதுகாப்பான முறையில் செயல்படுத்தவும், முழு சுகாதார கோவில்பட்டி முன்னோடி தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிடவும், பிளாஸ்டிக் இல்லா தீபாவளியை கொண்டாடவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர...

தூய்மை இந்தியா  திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய கல்லூரி மாணவர்கள்

Image
தூய்மை இந்தியா  திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன் பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் அகற்றினர். தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் சுமார் 12டன் அளவிலான பிளாஸ்டிக், தெர்மாக்கோல் உள்ளிட்ட கழிவுகளை மாநகராட்சி ஆணையர் தலைமையில் பல்வேறு அமைப்பினர் அகற்றினர். தூய்மை இந்தியா திட்டம் - தூய்மைமிகு நகரங்கள் கணக்கெடுப்பு 2020 –தேச தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு பிளாஸ்டிக் நெகிழியில்லா இந்தியாவை உருவாக்கும் பொருட்டு செப்.11 முதல் அக்.27 வரை தூய்மை இந்தியா திட்டம் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள், சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தல் அதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு படுதலை தவிர்க்கவும். நம் நாட்டை  தூய்மை மிகு நாடாக முன்னேற்றவும், நீர்நிலைகள் மாசுபடுதலை தவிர்க்கவும், ஏதுவாக திட்டமிட்டு செயல்பட அறிவிக்கப்படதன் பேரில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்க...