Posts

Showing posts from March, 2020

கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனையில் கொரோனா தடுப்பு பணி

Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலிங்கியம், குருமந்தூர், அயலூர், அளுக்குளி ஆகிய   ஊராட்சியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்களின் ஆலோசனையின்படி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக  அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள  மருத்துவர், செவிலியருக்கு முக கவசம், உடல் கவசம், கிருமி நாசினி  வழங்கப்பட்டது.பின்னர் லாரிகள் மூலம் கிருமி நாசினி சாலைகளில் தெளிக்க பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் அனுராதா, கோபி யூனியன் சேர்மன் கே. பி. மௌதீஸ்வரன், மாவட்ட மாணவரணி செயலாளர் அருள் ராமசந்திரன், அயலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஓம் பிரகாஷ்,  அளுக்குளி  ஊராட்சி மன்ற தலைவர் பி.இந்துமதிபாண்டு,கோட்டுபுள்ளம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், அயலூர் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கன், துணை தலைவர் வேதநாயகி காந்திவேல், கலிங்கியம் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா அருள் ராமசந்திரன், ஊராட்சி கழக செயலாளர்கள் கே. பாண்டுரங்கசாமி, எம். பி. கோபால்,  ஒன்றிய அவை தலைவர் எம்.கே. குருசாமி  மற்றும் வார்டு உறுப்பினர்கள் பழனிசாமி,...

சமூக இடைவெளியெல்லாம் காற்றில் பறந்தது: மளிகை, காய்கறி விலை உயர்வு

Image
கொரோனா தற்காப்புக்காக நடப்பில் இருக்கும் ஊரடங்கின் ஏழாம் நாள் (திங்கள்) திருப்பூர் பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு மட்டும் செல்லவில்லையே தவிர மிக இயல்பாகவே உலா வந்தனர். திருப்பூர் ரோடுகளில் வழக்கம் போல காலை 7 மணிக்கெல்லாம் பரபரப்பாக வாகனங்கள் சென்று வந்தன. போலீசாருக்கு இதை கண்டுகொள்ளாமல் இருக்க சொன்னார்களோ என்னவோ,  பொதுமக்கள் வீதியுலா வருவதை கட்டுப்படுத்தவில்லை. மாநகரம் முழுவதும் தெருக்களில் வழக்கம் போலான ஒரு நடமாட்டம் இருந்தது. பனியன் கம்பெனி உள்ளிட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்ததே தவிர, பொதுமக்கள் ஊரடங்கின் அவசியத்தை உணர்ந்ததாக தெரியவில்லை. நிறைய இடங்களில், மளிகை கடைகளிலும், காய்கறி கடைகளிலும் கூட்டம் கூட்டமாக சென்று பொருட்களை பொதுமக்கள் வாங்குவதை காண முடிந்தது. சிலர் கடைக்காரர்கள் இடைவெளி விட்டு நிற்க வைத்திருந்தனர். பல பேர் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. திருப்பூர் தினசரி மார்க்கெட்டில் காய்கறி வாங்க கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதல் கே.எஸ்.சி., ஸ்கூல் ரோட்டில் உள்ள சிறு வியாபாரிகள் மற்றும் மார்க்கெட்டில் கடை விரித்துள்ள வியாபாரிகளிடத்தில் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்க...

ஆமத்தூர் ஊராட்சியில் நோய்த்தடுப்பு பணிகளில் அதிரடி: ஊராட்சித்தலைவருக்கு பொதுமககள் பாராட்டு

Image
விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் ஊராட்சி தலைவர் குறிஞ்சி மலர் அழகர்சாமி, கொரோனா நோய்த்தடுப்புக்காக தீவிரமாக பணி செய்து வருகிறார்கள்.  ஊராட்சிப் பகுதியில் பல இடங்களில் விழிப்புணர்வு தட்டிபோர்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. ஆமத்தூரில் உள்ள குடிநீர் தொட்டி உள்ளிட்ட இடங்களில் ஊராட்சி தலைவர் குறிஞ்சிமலர் அழகர்சாமி ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளது.  மேலும் ஊராட்சிப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வீடில்லாதோர், ஏழைகள் என அனைவருக்கும் ஊராட்சி தலைவர் குறிஞ்சிமலர் அழகர்சாமி உணவு வழங்கி வருகிறார். இத்துடன் ஊராட்சி பகுதியில் உடனுக்குடன் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளவும், கிருமிநாசினி தெளிக்கவும் உத்தரவிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.  ஊராட்சி தலைவர் குறிஞ்சிமலர் மற்றும் அவரது கணவர் அழகர்சாமியின் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைவரும் பாராட்டினார்கள். 

100 குடும்பங்களுக்கு அரிசி வழங்கிய இன்பதுரை எம்.எல்.ஏ.,

Image
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும்  விதமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக வள்ளியூர் பூங்கா நகரில் உள்ள நரிக்குறவர் காலனியில் உணவின்றி    தவித்த 100  குடும்பங்களுக்கு  ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளருமான இன்பதுரை  அரிசி பைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து இன்பதுரை எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில்  கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எதிர்க்கட்சிகளிடம்  கருத்து கேட்பு கூட்டமோ ஆலோசனை கூட்டமோ அல்லது அனைத்துக் கட்சி கூட்டமோ நடத்த வேண்டும் என கூறுகிறார்கள்.அது தேவையற்றது.  ஏனென்றால் சட்டமன்றம் நடக்கும் பொழுது கொரோனா குறித்த விவாதங்கள் அங்கு நடைபெற்றது. அப்பொழுது ஆரம்பம் முதலே சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வந்தன. ஆனால் இப்பொழுது அவர்கள் எங்களை அழைத்து ஆலோசனை கேட்க வேண்டும் என கூறுகிறார்கள்.  அப்படி சிறப்பான ஒரு ஆலோசனை எதிர்க்கட்சிகளிடம் இருக்கிறது என்றால் அதை அவர்கள் இமெயில் மூலமாகவோ கடிதம் மூலமாகவோ முதல்வருக்கு தெரிவிக்கலாம்.  தங்களுக்கு  புகழ் க...

குமாரபாளையத்தில் எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஆய்வு: நோய்த்தடுப்பு பணிகளை துரிதப்படுத்தினார்

Image
ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குமாரபாளையம் ஊராட்சியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஈஸ்வரன் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் ஆய்வு செய்தார். கிருமி நாசினி தெளிப்பது குறித்தும் கேட்டறிந்து அலோசனை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் மற்றும் அரியப்பம்பாளையம் பேரூராட்சி அம்மா பேரவை செயலாளர் கே.சரவணன் ஆகியோர் உள்ளனர்.

திருப்பூரில் வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

Image
திருப்பூரில் வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி. கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், மாவட்ட சுகாதார அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்ட கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்  மாவட்ட எல்லையில் 41 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பின்னரே அத்தியாவசிய தேவைக்கு மட்டும் அனுமதிக்கப் படுகின்றனர். கேரளாவில் இருந்து வருபவர்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளனர். 60 வார்டுகளில் 47 வண்டிகள் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. 22 மாநிலங்களை சேர்ந்த 41273 பேர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை தன்னார்வலர்கள் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல...

பனைத்தொழிலை முடக்கி இருப்பது பேராபத்து: கள் இயக்க தலைவர் நல்லசாமி

Image
தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பது : கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பனை தென்னை ஈச்ச மரங்களில் இருந்து, பதநீர், கள், நீரா இறக்குவது முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இது பேராபத்து என்பதை ஆளும் அரசும், வாழும் மக்களும் உணர வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள தீவு நோரோ. அந்தத் தீவில், "கள்" முக்கியமான உணவாக இருந்து வந்தது. மதுவிலக்கைக் காரணம் காட்டி அங்கே கள் இறக்க தடை விதிக்கப்பட்டது. ஆறுமாத அளவில் அத்தீவில் குழந்தைகள் இறப்பு வெகுவாகக் கூடியது. மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. கள் தடை காரணமாக தாய்ப்பாலுக்கு நிகரான "கள்", இளம் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் கிடைக்காமல் போனதே காரணம் என்று கண்டறியப்பட்டது. அதற்குப் பிறகு அத்தீவில் கள் தடை உடனடியாக நீக்கப்பட்டது. இதைப்பற்றி ஜே.பி.எஸ்.ஹால்டேன், "Tragedy of Nauru” என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் குழந்தைகளையும், முதியவர்களையும் எளிதில் தாக்கக்கூடிய நோய் என்பது கண்டறியப்ப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்...

அம்மா உணவகத்தில் எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஆய்வு

Image
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காக ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அம்மா உணவகத்தை பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆய்வு செய்தார்.

விலைவாசி உயர்வு: அமைச்சர் ராஜலட்சுமி அதிரடி பேட்டி

Image
விலைவாசி உயர்வு அமைச்சர் ராஜலட்சுமி அதிரடி பேட்டி கொரோனா வைரஸ் கட்டுபடுத்துதல் தொடர்பாக பணிகள் மேம்பாடு குறித்து  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் ராஜலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில்  தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததன் காரணமாக கொரோனா நோய் தொற்று  வெகுவாக குறைந்துவிட்டது.  ஒவ்வொரு நாளும் முதல்வர் சென்னையில் மருத்துவமனைகளுக்குச் சென்று பார்வையிடுகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை கூறி வருகிறார். நெல்லை மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரும் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். வேறு யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. அரசு கூறும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அரசு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  மார்க்கெட்டுகளில் அதிக பொதுமக்கள் கூட்டம் வருகிறது என்ற தகவல் வருகிறது. என...

வெள்ளாளபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனையில் நோய்த்தடுப்பு பணி

Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளாளபாளையம்  ஊராட்சியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்களின் ஆலோசனையின்படி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக லாரிகளின் மூலம் ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது, பிறகு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர், செவிலியருக்கு முக கவசம்,முமுஉடல் கவசம் வழங்கப்பட்டது. இந்தநிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியபாமா வேலுமணி, யூனியன் கவுன்சிலர் வெள்ளாளபாளையம் கணேஸ் (எ) கல்யாணசுந்தரம்,திலகவதி வாசுதேவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, நஞ்சை கோபி ஊராட்சி மன்ற தலைவர் கோபால், மாணவரணி செந்தில், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

கொரோனா தடுப்பு பணியில் சளைக்காமல் பணியாற்றும் சத்தியமங்கலம் போலீசார்

Image
ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் உத்தரவின்பேரில் சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையிலான  ஆய்வாளர்கள்,துணை ஆய்வாளர்கள், சிறப்பு துணை ஆய்வாளர்கள், காவலர்கள், தனிப்பிரிவு ஆகியோர் அடங்கிய குழுவினர்  சத்தியமங்கலம் உட் கோட்ட பகுதிகளான ஆசனூர்,கடம்பூர், தாளவாடி,பங்களாபுதூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகர் உள்ளிட்ட காவல் நிலைய பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆலோசனைபடி,நகராட்சி நிர்வாகம், தினசரி மார்கெட் சங்கத்தினர் இணைந்து தினசரி மார்க்கெட்டை மூன்றாகப் பிரித்து அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்கள் எளிதாக வாங்கி செல்ல, அதிக கூட்டம் கூடாமல் இருக்க வடக்குபேட்டை சந்தை பகுதியிலும்,பழைய கடைவீதி பழைய மார்க்கெட் பகுதியிலும், சத்தியமங்கலம் பஸ் நிலையத்திலும் அமைத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் பஸ் நிலையத்தை தற்காலிக மார்கெட்டாக மாற்றியுள்ளனர். இ பொதுமக்கள் பேருந்து நிலையம் வந்து மூன்றடி இடைவெளியில் வ...

சித்த மருத்துவமனையில் கபசுரக் குடிநீர் இல்லை: மாஸ்க் அணிந்து திருமணம் செய்து கொண்ட ஜோடி

Image
ஊரடங்கின் ஆறாம் நாளான இன்று திருப்பூரில் பொதுமக்கள் முடங்கி கிடந்தாலும், சாலைகளில் வாகனங்கள் செல்வதை காணமுடிந்தது. போலீசார் சில இடங்களில் மட்டும் வாகன ஓட்டிகளை திரும்ப செல்லக்கூறி எச்சரித்தனர். மற்றபடி வாகனங்கள் சென்று கொண்டு தான் இருந்தன. திருப்பூர் தெற்கு போலீசார் தாராபுரம் ரோட்டில் சென்ற வாகனங்களை எச்சரித்து அனுப்பினர்.  அவிநாசியில் இருந்து சேவூர் வரை உள்ள மெயின் ரோட்டில்  அவிநாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையில் போலீசார் ஒரு ஜீப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோட்டில் இருந்த காய்கறி கடைகளில் மக்கள் விதிகளை பின்பற்றாமல் இருந்ததை கண்டித்து எச்சரித்தனர். அதேபோல் வரிசையில் இடைவெளி  இல்லாமல் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்களை அழைத்து எச்சரித்தனர்.  திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரி சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி பிரிவில், பொதுமக்கள் ஏராளமாக வந்து கபசுர குடிநீர் கேட்டு செல்வதை காணமுடிந்தது. ஆனால் அதற்கு இல்லை என்றே பதிலளித்தனர். பொதுமக்கள் குடிப்பதற்காக நிலவேம்பு கஷாயம் வைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்களுக்க...

ஊரடங்கில் திருமணம்..மாஸ்க் அணிந்து தாலிகட்டிய மணமகன்

Image
கொரோனா  வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள  நிலையில் திருப்பூர் அருகே சேவூர் அளகாத்திரி  பாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் எளிமையாக நடைபெற்ற திருமணம். 15க்கும் குறைவான உறவினர்களை கலந்துகொண்டு வாழ்த்து திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் செந்தமிழ்ச்செல்வி ஆகியோரது மகன் ஸ்ரீகாந்துக்கும் சேவூர் அருகே  அளகாத்திரி பாளையம்  பகுதியை சேர்ந்த கருப்பசாமி லதாமணி ஆகியோரது மகள் தேன்மொழி ஆகியோரது திருமணம் பெரியோர்களால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பேசி நிச்சயிக்க பட்டது இவர்களது திருமணம் அவிநாசியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.   நாடு முழுவதும் கொரோனா  வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் திருமணத்தை எளிய முறையில் கோவிலில் நடத்த முடிவு செய்தனர். உடனடியாக அழைப்பிதழ் கொடுத்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்துவிட்டு சுய ஊரடங்கு ஒத்துழைப்பு கொடுத்து திருமணத்...

ரூ.2 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள்: சேவூர் ஊராட்சி தலைவர் சேவூர் ஜி.வேலுசாமி வழங்கினார்

Image
  திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம்,சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பாலிக்காடு, சந்தையம்பாளையம் உள்பட 12 வார்டுகளில் கரோனா பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சேவூர் ஊராட்சித் தலைவர் சேவூர் ஜி.வேலுசாமி தனது சொந்த செலவில் ரூ.2 இலட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.                இதில் தொடர்ந்து உபயோகிக்கக்கூடிய முகக்கவசம், கிருமி நாசினி, சோப்பு, கைக்குட்டை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் துவக்கிவைத்தார்.     நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி லட்சுமி, ஒன்றியக் குழுத் தலைவர் ஜெகதீசன், துணைத் தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் பழனிசாமி, சுகாதார ஆய்வாளர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் கண்ணன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.    

கிருமிநாசினி தெளிக்கும் திமுக எம்.எல்.ஏ., கணேசன்

Image
திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினர்  திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான  சி.வெ கணேசன் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக தொடர்ந்து கிருமி நாசினி மருந்து தெளித்து வருகிறார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிகுட்பட்ட அனைத்து கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக சட்டமன்ற உறுப்பினர் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான சி.வெ கணேசன் தொடர்ச்சியாக கிருமி நாசினி மருந்து தெளித்து வருகிறார். இந்நிலையில் பொடையூர், ஆலம்பாடி மற்றும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக ஊராட்சிகளில் உள்ள கடை பகுதி, பேருந்து நிலையம், மருத்துவமனை, தேவாலயங்கள், கல்வி மையம், அரசு அலுவலகங்கள்,   தெரு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான  சி.வெ கணேசன் தொடர்ச்சியாக டாடா ஏசி வாகனம் உதவியுடன் ஸ்பிரேயர் மூலம் கிருமிநாசினி மருந்து தெளித்து வருகிறார். பின்னர் கொரோனா வைரஸ்  நோய்  பற்றிய விழிப்புணர்வும் அனைவரும் மா...

200 பேருக்கு 25 கிலோ அரிசி: பனப்பாக்கம் எச்.ரவி வழங்கினார்

Image
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர இயலாத நிலை நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு அம்மா மக்கள் முன்னேற்றம் கழக பொது செயலாளர் டிடிவி,தினகரன் தொண்டர்கள் அனைவரும்  பொது மக்களுக்கு தங்களால் இயன்ற உதவி செய்திட ஆணையிட்டார் அதற்கிணங்க காஞ்சிபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குன்னத்தூர் ஒன்றிய கழகம் சார்பில்  பனப்பாக்கம் மற்றும் வட்டம்பாக்கம் பகுதிகளில் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பனப்பாக்கம் எச், ரவி அவர்கள் தலைமையில் கழகத்தினர் ஏழை எளிய மக்கள் 200 பேருக்கு 25 கிலோ அரிசி உப்பு ,சோப்பு, உள்ளிட்ட பொருட்களை ஏழை எளிய. மக்களுக்கு  வழங்கினர்       Attachments area      

ஜெர்மன் நாட்டை சேர்ந்த 4 பேர் சென்னைக்கு அனுப்பிவைக்க  தி.மலை ஆட்சியரிடம் கோரிக்கை மனு

Image
திருவண்ணாமலை மார்ச்,29 - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று காலை ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒரு பெண் உள்பட 4 பேர் வந்தனர் பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியை நேரில் சந்தித்து தாங்கள் கடந்த நவம்பர் மாதம் திருவண்ணாமலைக்கு வந்ததாகவும் தங்களுக்கு புராண வைரஸ்களுக்கு எதுவும் இல்லை என்றும் ஜெர்மனிக்கு செல்லவேண்டும் அதனால் எங்களை சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அப்போது ஆட்சியர் தற்போது உள்ள சூழ்நிலையில் இதுகுறித்து தங்களால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது தலைமைச் செயலகத்திற்கு தகவல் தெரிவித்து அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தங்களுக்காக ஒரு அதிகாரியை தனியாக நியமித்து இதுகுறித்து தகவல் இருந்தால் உடனடியாக உங்களுக்கு தெரிவித்து உங்களை சென்னைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்

கொரோனா நோய் தடுப்ப: தீயணைப்பு வாகனம் மூலம் மருந்து தெளிப்பு பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

Image
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மாண்புமிகு சுற¦றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி  திரு. என¦. நடராஜன¦அவர்கள் தீயணைப்பு துறை வாகனம் மூலம் வீடுகளில் கிருமி நாசினி தெளித்து  இன்று 29.03.2020  துவக்கிவைத்தார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொன்மலை கோட்டம்  கே.கே.நகர் காவலர் குடியிறுப்பு பகுதி , மன்னார்புரம் , எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய பகுதிகயில் மாண்புமிகு சுற¦றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி திரு. என¦. நடராஜன¦அவர்கள் தீயணைப்பு துறை வாகனம் மூலம் வீடுகளில் கிருமி நாசினி தெளித்து இன்று 29.03.2020  துவக்கிவைத்தார். இந்நிகழ்வில் மாநகர காவல் துணைஆணையர் திருமதி.என்.எஸ்.நிஷா ஐ.பி.எஸ் அவர்கள்,  மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள், நகர் நல அலுவலர் திரு.அ.ஜெகநாதன், உதவி ஆணையர் திரு.எம்.தயாநிதி மற்றும் பலர் கலந்துகொண்டார்கள். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் கொரோன நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சியின் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி நான்கு வாகனங்கள்...

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்: அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் ஆய்வு

Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கொளப்பலூர் பேரூராட்சி, சிறுவலூர் மற்றும் வெள்ளாங்கோவில் ஊராட்சி  ஆகிய பகுதிகளில் சிறுவலூர் வட்டார  அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பேரூராட்சி அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்களில்  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் ஆய்வுகள் மேற்கொண்டார். ஆய்வின் போது பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு முக கவசம், கிருமி நாசினி மற்றும் முழு உடல் கவசம் ஆகியவற்றை வழங்கினார்.பின்னர் லாரிகள் மூலம் மஞ்சள் கலந்த கிருமி நாசினி அனைத்து இடங்களிலும் தெளிக்கபட்டது.இதில் கோட்டாட்சியர் ஜெயராமன்,  கொளப்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார்,  இளநிலை உதவியாளர் காசிலிங்கம்,  ஊராட்சி மன்ற தலைவர்,  சிறுவலூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார்,  ஊராட்சி கழகச் செயலாளர் அண்ணாதுரை,  யூனியன் கவுன்சிலர்கள் வேல்முருகன், ஆப்பிள் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்  செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழக முதலமைச்சர் அவர்களின...

ஆதரவற்றோருக்கும், முதியோருக்கும் உணவு, உடை: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் வேங்கம்மையார் உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட  ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்குதமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  உணவுகள் மற்றும் பெட்சீட் , டி ஷர்ட், சேலை ஆகிய உடமைகளை  வழங்கினார்.அருகில் கோட்டாட்சியர் ஜெயராமன்,கோபி காவல் துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேலு ஆகியோர் உள்ளனர்.

400 வடமாநில தொழிலாளர்களுக்கு திமுக மாவட்ட செயலாளர் உணவுப்பொருட்கள் வழங்கல்

Image
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருப்பூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் க.செல்வராஜ் அவர்களிடம் அலை பேசியில் தொடர்பு கொண்டு அங்கேரிபாளையம் பகுதியில் வசிக்கும் பீகார் மக்கள் உணவில்லாமல் தவிப்பதாகவும் அவர்களுக்கு உதவி செய்யுமாறு அறிவுறுத்தினார். கழகத் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் படி திருப்பூர் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தங்கியிருக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளிகளுக்கு வீடு ஒன்றுக்கு 15 கிலோ அரிசி சிப்பமும், ரொக்கப்பணம் ரூபாய் 500 வழங்கினார். இதில் திருப்பூர் khefu கழகப் பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன், அவைத்தலைவர் க.ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஈ.தங்கராஜ், வேலம்பாளையம் பகுதி கழகப் பொறுப்பாளர் கொ.இராமதாஸ், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பெரியார் காலனி எம்.எஸ்.மணி, துணை அமைப்பாளர் வி.வி.ஜி.காந்தி, வட்டக் கழகப் பொறுப்பாளர்கள் அய்யம்பெருமாள், ரத்தினசாமி, மகேந்திரன், குட்டி குமார், ஸ்ரீதர் உள்பட கழக இன்னாள், முன்னாள் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள் பலர் கலந்து கொண்டனர். கழகத் தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களிட...

காய்கறி, மீன்கடைகளில் முண்டியடித்த கூட்டம்: கொரோனாவுக்கு சிவப்புக்கம்பளம் விரிக்கிறார்களா திருப்பூர் மக்கள்

Image
ஊரடங்கின் ஐந்தாம் நாளான இன்று (ஞாயிறு) திருப்பூர் மக்கள் துளிகூட பொறுப்புணர்ச்சி இல்லாமல் மீன்கடைகளிலும், காய்கறி கடைகளிலும் கூட்டம் கூட்டமாக திரண்டனர். சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை.  கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களான காய்கரி, இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்காக திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டையில் நுழைவு பகுதியில் மாநகராட்சி சார்பில் கை கழுவ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.    பொதுமக்கள் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள சந்தைப்பேட்டை மார்க்கெட்டில் அதிகாலை முதல் கூட்டம் கூட்டமாக திரண்டு காய்கறிகள், மீன் மற்றும் இறைச்சி வாங்கி சென்றனர். அங்கு வந்திருந்த கூட்டத்தையும், அவர்கள் முட்டி மோதிக்கொண்டு காய்கறிகள் வாங்கியதும், இறைச்சி வாங்கியதையும் பார்க்கும் போது பொதுமக்களிடம் துளிகூட கொரோனா பற்றிய விழிப்புணர்வோ, அச்சமோ இருந்ததாக தெரியவில்லை. உலகமே கொரோனா பரவலின் வீரியத்தில் உறைந்து கிடக்க, திருப்பூர் மாநகர மக்களோ இந்த ஞாயிற்றுக்கிழமையை கொண்டாட்டத்துக்கான ஞாயிற்றுக்கிழமையாகவே கருதி ...