ரூ.2 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள்: சேவூர் ஊராட்சி தலைவர் சேவூர் ஜி.வேலுசாமி வழங்கினார்


  திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம்,சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பாலிக்காடு, சந்தையம்பாளையம் உள்பட 12 வார்டுகளில் கரோனா பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சேவூர் ஊராட்சித் தலைவர் சேவூர் ஜி.வேலுசாமி தனது சொந்த செலவில் ரூ.2 இலட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.


               இதில் தொடர்ந்து உபயோகிக்கக்கூடிய முகக்கவசம், கிருமி நாசினி, சோப்பு, கைக்குட்டை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் துவக்கிவைத்தார். 

   நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி லட்சுமி, ஒன்றியக் குழுத் தலைவர் ஜெகதீசன், துணைத் தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் பழனிசாமி, சுகாதார ஆய்வாளர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் கண்ணன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.



 

 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி