உடுமலை கிளை நூலகம் எண் 2 சார்பில் 6 வது வாரமாக கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது


 

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில் 6 வது வாரமாக உடுமலை ருத்ரப்பா நகர் பகுதியில் பொது மக்களுக்கு முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்க வலியுறுத்தி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.   

 

இந் நிகழ்ச்சிக்கு நூலகர் வீ.கணேசன் தலைமை வகித்தார். நூலக வாசகர் வட்ட பொருளாளர் சிவக்குமார், துணைத்தலைவர் சிவக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர் சுப்பிரமணி ஸ்டாலின். வாசகர் வட்ட உறுப்பினர்கள்  ஆனந்தன், பாலகிருஷ்ணன், வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கபசுர குடிநீர் வழங்கினர்.சைக்கிள் மூலம் வீடு வீடாக  சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி