தூத்துக்குடியில் 28வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் - ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட அரசு செவிலியர் கல்லூரியில் 28வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், இன்று தொடங்கி வைத்து, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 28வது கரோனா மெகா தடுப்பூசி முகாம் வரும் 30.04.2022 (சனிக்கிழமை) அன்று மொத்தம் 763 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் ஆகிய முக்கிய இடங்களில் 763 முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 50 சிறப்பு முகாம்கள் மற்றும் பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் 713 இடங்களிலும் தகுதியான அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை 18 வயதிற்கு மேற்படட நபர்களில் முதல்தவணை 1306447 (95சதவீதும்) நபர்களுக்கும், இரண்டாம் தவனை 980059(70.6%) நபர்களுக்கும் மற்றும் ஊக்க தடுப்பூசி 6883 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 15 முதல் 18...