Posts

Showing posts from June, 2022

தூத்துக்குடி: வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டம்.!

Image
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் ஒவ்வொரு காலாண்டிலும் நடைபெறும் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம்,   ஆதிதிராவிடர் நலக்குழுக்கூட்டம், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் துப்புரவு தொழிலுக்கான தடை மற்றும் அவர்தம் மறுவாழ்விற்கான சட்டம் 2013 குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மற்றும் பற்றாளர் கூட்டம்  ஆகியவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்  மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் குழு சார்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வன்கொடுமைத்தடுப்பு சட்டத்தின் பாதுகாப்பு மற்றம் செயல்பாடு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விளக்கி கூறினார்.  ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவ மாணவியர்  விடுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் அரசு திட்டங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்றும...

அட நம்ம தமிழ் நாட்டுலதான்.... தமிழ் பணியாளர்களுக்கு வேலை வழங்க வட மாநிலத்தவர் எதிர்ப்பு - வடமாநிலத்தவர்கள் போராட்டத்தால் கோபிச்செட்டிபாளையத்தில் பரபரப்பு.!

Image
  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நூற்பாலையில், உள்ளூர் மக்களுக்கு பணி வழங்கியதை எதிர்த்து வடமாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியில் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. உள்ளூர் தொழிலாளர்களுக்கு பணி வழங்கியதை எதிர்த்து, அங்கு பணிபுரியும் வடமாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நூற்பாலை நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன், இங்கு பணிபுரிந்து வந்த ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி கசரப் என்பவர் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து ஆலை நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி வடமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் கோபி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதனைத்தொடந்து புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து காணாமல் போன தொழிலாளி கசரப்பை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே நூற்பாலை நிர்வாகம் காணாமல் போன வடமாநில தொழிவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டித...

சர்ச்சையான நெய்தல் கலைவிழா - மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் கனிமொழி MPக்கு கண்டனம்.!

Image
  நெய்தல் நில மக்களைப் புறக்கணித்து கனிமொழி எம்பி நெய்தல் கலைவிழா நடத்துகிறாரா? எனத் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது, நெய்தல் விழா குறித்த திடீர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, நெய்தல் சமூகத்தில் அனைத்து கலைகளுக்கும் பஞ்சமில்லை. தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல சங்க இலக்கியங்களில் நெய்தல் நில மக்களின் வாழ்க்கை, கலைத்திறனை வெளிப்படுத்துகிறது. தற்போதும் நெய்தல் நில மீனவச் சமூகத்தில் கலைஞர்களும், எழுத்தாளர்களும், படைப்பாளிகளும் ஏராளமாக உள்ளனர். ஆனால் கனிமொழி MP நெய்தல் நிலக்கடலோடி மீனவ மக்களைப் புறக்கணித்து சமவெளியில் இருந்து கலைஞர்களைக் கொண்டு வந்து 'நெய்தல் கலைவிழா' என்று,  வரும் ஜூலை 7ந்தேதி முதல் 10 வரை தூத்துக்குடியில் நடத்த திட்மிட்டுள்ளதாக அறிகிறோம்.  நெய்தல் நில மீனவச் சமுதாய மக்களிடம் இது குறித்து எந்தவித ஆலோசனையும் செய்யவில்லை.   ஏற்கனவே தி.மு.க.  தலைமை மீனவர்களின் அரசியல் அங்கீகாரமாகப்...

தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி கொள்ளையடித்த சம்பவம் - 3 பேர் கைது.!

Image
தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர்களான முத்துராஜ் மகன் மூர்த்தி (21),  லெனின் மகன் சரவணன் (22) மற்றும் தூத்துக்குடி லோகியா நகர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் பிரபாகரன் (28) ஆகிய 3 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது மது போதையில் அவர்கள் அங்கிருந்த மதுபாட்டில்களை உடைத்துள்ளனர். இதனையடுத்து டாஸ்மாக் கடையின் விற்பனையாளரான தூத்துக்குடி பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் சங்கர் (48) சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து  டாஸ்மாக் கடை விற்பனையாளரான சங்கரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன் டாஸ்மாக் கடையில் இருந்த ரூபாய் 80,000/-  பணத்தையும் மது பாட்டில்களையும் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மூக்கன் வழக்குபதிவு செய்து மேற்படி எதிரிகளான மூர்த்தி, பிரபாகரன் மற்றும் சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்டவர்களில் மூர்த்தி மீது ஏற்கனவே தென்பாகம், சிப்காட், தெர்மல்நகர் மற்...

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம் - ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக முன்னிறுத்தியது பாஜக

Image
உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக முன்னிறுத்தியது பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமை கோரிய பாஜக அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது #Maharashtra

நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கியது அமீரகம்*

Image
10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் கோல்டன் விசா நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.*

தூத்துக்குடி ; வெளிநாட்டில் செவிலியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 10,65,000/- பணம் மோசடி செய்தவர் கைது.

Image
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் முகநூல் (Facebook) பக்கத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியர் வேலை வாய்ப்பு உள்ளதாக வந்த விளம்பரத்தை பார்த்து  அவர்களை தொடர்பு கொண்டதில் அவர்கள் செவிலியர் வேலைக்கான பதிவு கட்டணம், விசா செயல்பாடு மற்றும் கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் என பல்வேறு காரணங்களை கூறி மேற்படி பெண்ணிடம் ரூபாய் 10,65,000/- மோசடி செய்து ஏமாற்றியுள்ளதாக பாதிக்கபட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார். மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன்  மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை அமைத்து வெளிநாட்டில் செவிலியர் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கர்நாடகா, பெங்களூர் வடக்கு, கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த குமார் ராஜன்...

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Image
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.! நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி,  திண்டுக்கல், ஈரோடு கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. - வானிலை ஆய்வு மையம்.

டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்.!

Image
தூத்துக்குடி சிவந்தாகுளம் 5வது தெருவில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி சிவந்தாகுளம் 5வது தெருவில் அரசு டாஸ்மாக் கடை எண் 10147 செயல்பட்டு வருகிறது. இக்கடையில் ஊழியர்களான பொன்னகரத்தை சேர்ந்த சங்கர் (47), ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த ரமேஷ்(47), ஆகியோர் விற்பனையில் ஈடுபட்டு இருந்தனர்.  அப்போது இருசக்கர வாகனத்தில் மது வாங்க வந்த நான்கு பேர் ஊழியர்களான சங்கர், ரமேஷ் ஆகியோரிடம் மது பாட்டில் கேட்டு வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வாக்கு வாதம் முற்றி அந்த மர்ப நபர்கள் ஊழியர் சங்கரை மது பாட்டிலால் தலையில் கடுமையாக தாக்கி விட்டு விற்பனைத் தொகை  சுமார் 80ஆயிரம் பணத்தை எடுத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். தலையில் பலத்த படுகாயம் அடைந்த சங்கர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு விற்பனையாளர் ரமேஷ்க்கு சிறு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், கடையின் மேற்பார்வையாளர் முத்துக்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மேலாளர் முருகனுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. ...

தூத்துக்குடியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி - மேனாள் இஸ்ரோ தலைவர் சிவன், கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு.!

Image
தமிழ்நாடு அரசு புதிதாக துவங்கியுள்ள, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், 12ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில், 'கல்லூரி கனவு' என்ற நிகழ்ச்சி சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவ  மாணவியர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சி தூத்துக்குடியில்  மாணிக்கம் மஹாலில் வைத்து  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமூக மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி எம்.பி மற்றும் முன்னாள் இ...

அடுத்தடுத்து வரலாற்று படங்களில் நடிக்கும் கோமல் சர்மா*

Image
நீ இன்டர்நேஷனல் நடிகை கோமல் சர்மாவை பாராட்டிய மோகன்லால் மோகன்லால் இயக்கும் படத்தில் நடிக்கும் ஒரே இந்திய நடிகை கோமல் சர்மா மோகன்லாலுடன் தொடர்ந்து நான்கு படங்களில் பணியாற்றிய கோமல் சர்மா மோகன்லால் என்னை தேர்வு செய்ததே எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது கோமல் சர்மா பெருமிதம் மாநாடு பட வாய்ப்பை நழுவ விட்டேன் கோமல் சர்மா வருத்தம் பான் இந்திய நடிகையாக மாறிய கோமல் சர்மா அழகும் நடிப்புத்திறமையும் நன்றாக அமையப்பெற்ற சில நட்சத்திரங்கள்  இங்கே தமிழில் தங்களது திறமையை காட்ட மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலும் கிடைத்த வாய்ப்புகள் மூலம் தங்களது திறமையை நிரூபிக்க முயற்சிப்பார்கள். இதற்கான பலன் இங்கே தமிழ் சினிமாவில் கிடைக்காவிட்டாலும்  மற்ற மொழிகளில் உள்ள படைப்பாளிகளின் கண்களில் இவர்களது திறமை பளிச்சிட்டு மிகப்பெரிய வாய்ப்புகள் தேடி வந்து பெரிய நட்சத்திரங்களாக மாறியவர்கள் பலர் உண்டு. அப்படிப்பட்ட அந்த சிலரில் ஒருவர் தான் நடிகை கோமல் சர்மா . தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டப்படி குற்றம் என்கிற படத்தில் அறிமுகமான கோமல் சர்மா, அதன்பிறகு ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே நடித்த வைகை எக...

மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத், ஒஸ்மானாபாத் நகரின் பெயர் மாற்றுவதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல்

Image
 JUSTIN  மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் நகரின் பெயரை சம்பாஜி நகர் எனவும், ஒஸ்மானாபாத் நகரின் பெயரை தாராஷிவ் எனவும் பெயர் மாற்றுவதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல்

ஜி.எஸ்.டி வரி உயர்வு அறிவிப்பு - கிரைண்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்வு

Image
எல்.இ.டி. விளக்குகளுக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக அதிகரிப்பு பேனாமை, பிளேடுகள், கத்தி, கரண்டிகளுக்கான வரி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்வு சூரிய ஒளி மூலம் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக அதிகரிப்பு வரி உயர்வு ஜூலை மாதம் 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென அறிவிப்பு சண்டிகரில் நடைபெற்ற ஜி.எஸ்.டி வரி கவுன்சில் கூட்டத்தில் வரிகளை உயர்த்த முடிவு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் 19 தீர்மானம் நிறைவேற்றம் - மாநகராட்சி வளர்ச்சிக்கு கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என மேயர் பேச்சு.!*

Image
தூத்துக்குடி மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் கொண்டு வந்த 19 தீர்மானம் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையானது குறித்து பேசினார்கள்.  கூட்டத்தில் மேயர் பேசுகையில் அனைத்து பகுதிகளும் முழுமையாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரைவில் பணிகள் முடிவு பெறவுள்ளன.  அதே போல் மாநகரில் பள்ளி செல்லும் குழந்தைகள் பகுதிகளில் புதிய தார்சாலைகள் அமைக்கப்படவுள்ளது. அனைவருடைய பகுதிகளிலும் அனைத்து பணிகளும் முழுமையாக நடைபெறுவதற்கு ஓத்துழைக்க வேண்டும். பொதுமக்களுக்கு கவுன்சிலர் மூலம் குடிதண்ணீர் வரும் நேரம் தெரிவிக்கப்படுகிறது.  வரும் 1ம் தேதி முதல் அதே போல் குப்பை எடுப்பதற்கான வாகனம் எந்த பகுதிக்கு எப்போது வரும் என்ற தகவல் கவுன்சிலர்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதற்கு பொதுமக்களிடம் கவுன்சிலர்கள் சொல்லவேண்டும். புறநகர் பகுதியின் வளர்ச்சிக்கும் முழுமையான பல ...

உடன்குடியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து - அதிர்ஷ்டவசமாக தப்பிய 38 பயணிகள்.!

Image
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரம்  டோல்கேட் பகுதியில் உடன்குடியில் இருந்து  கோயம்புத்தூர் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ பிடித்ததில் 38 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து நேற்று இரவு 8மணிக்கு  கோயம்புத்தூரூக்கு 38 பயணிகள் புறப்பட்டனர். தனியார் ஆம்னி பேருந்து தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது அப்போது 38 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். புதியம்புத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விக்ரம் படம் இந்திய சினிமாக்களில் இதுவரை இல்லாத அளவு ரூ.404 கோடி வசூல் செய்து சாதனை.! - புள்ளிவிவரங்கள் வெளியீடு

Image
  ஜுன் 3ந் தேதி வெளியானது முதல், ஒட்டுமொத்தமாக இதுவரை இந்திய சினிமாக்களில் இல்லாத அளவு 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியீடு பிரிட்டன், அமீரகம், சிங்கப்பூர் நாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது நடிகர் கமலின் விக்ரம் தற்போது உலகம் முழுவதும் படம் ரூ. 400 கோடியை தாண்டி படம் ரூ. 404 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய படங்கள் சரியான வரவேற்பு பெறாத நிலையில் தற்போது வரை விக்ரம் படம் தான் அதிகம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Vikram   | #Movie | #KamalHaasan | #LokeshKanagaraj

தூத்துக்குடி நகர் பகுதிகளில் நாளை மின் தடை.!

Image
தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் வருகிற 30ம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள நகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 30ம் (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.. இதனால் போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, பீச் ரோடு, இனிகோநகர், வி.இ.ரோடு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதரநகர், எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம், சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, சந்தை ரோடு, வடக்கு காட்டன் ரோடு, தெற்கு காட்டன் ரோடு, ஜார்ஜ் ரோடு, சண்முகபுரம், ஸ்டேட் வங்கி காலனி,    இஞ்ஞாசியார்புரம், எழில்நகர், அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர், முத்தம்மாள்காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்  என அறிவிக்கப்பட்டு உள்ளன..

திருச்செந்தூர் வனச்சரகத்தில் பணிபுரியும் வனவர் சுப்புராஜ் அகில இந்திய IFS பணி தேர்வில் 57- வது இடம் பிடித்து சாதனை.!

Image
  தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள திருச்செந்தூர் ரேஞ்சில் வனவராக  பணிபுரியும் சுப்புராஜ் IFS தேர்வில் அகில இந்திய ரேங்க் 57-வது இடத்தைப் பெற்றுள்ளார்.  வனவராக பணிபுரிந்து கொண்டே அகில இந்திய தேர்வில் 57 -வது இடம் பிடித்து தேர்வான அவரை மாவட்ட வன அதிகாரிகள், வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது : "சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி, அறிவிக்கப்படாத எமர்ஜென்சி" - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கருத்து

Image
  பெங்களூரு: “பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி; அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை எதிர்த்துப் போராட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்” என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ட்விட்டரில் கருத்து.

படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே படத்திற்கு வெற்றிவிழாவினை படக்குழு கொண்டாடியுள்ளது.

Image
ரிலீஸுக்கு முன்பாக வெற்றி விழா கொண்டாடிய " பேய காணோம்" படக்குழு !  “பேய காணோம்” டிரெய்லர் வெளியீட்டு விழா  மீரா மிதுன் முதல்வர் கனவை நான் கெடுப்பதாக புகார் சொன்னார் - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு.  குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில்  தேனி பாரத் R. சுருளிவேல் தயாரிப்பில்  இயக்குநர் செல்வ அன்பரசன் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம்  " பேய காணோம் ".  தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே படத்திற்கு வெற்றிவிழாவினை படக்குழு கொண்டாடியுள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில்  இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.  கொரோனா நோய் தொற்றுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட இப்படம்,  பல இன்னல்கள் தடைகளை கடந்த நிலையில் தற்போது படப்பிடிப் முடித்துள்ளது. பல சிக்கல்களை கடந்து படப்பணிகள் முடிக்கப்பட்டதை படக்குழு வெற்றி விழாவாக கொண்டாடியது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் R. சுருளிவேல்  கூறியதாவது… இயக்குநரை பல காலமாக தெரியும் அவரின் திறமையை...

தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் - கனிமொழி கருணாநிதி எம்பி தலைமையில் நடைபெற்றது.!*

Image
தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவர்/  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவரும், தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக்குழு நிர்வாக அலுவலர் செந்தில்ராஜ்,  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக்குழு இணை தலைவரும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  செய்தியாளர்களிடம் பேசுகையில்: தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. விமான நிலையத்தில் ஓடுதளம் நீளத்தை அதிகமாக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும்.  விரைவிலேயே தூத்துக்குடி விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் இறங்கக்கூடிய வசதி உருவாக்கப்படும். ஒரே நேரத்தில் 300 பயணிகள் வ...

மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் கலந்து கொள்கிறார் - கனிமொழி கருணாநிதி எம்.பி தகவல்.!*

Image
தமிழ்நாடு பள்ளி மாணவ – மாணவிகளுக்கான உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியாக “நான் முதல்வன்”  எனும் திட்டத்தின் கீழ் “கல்லூரிக் கனவு” என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி தமிழக முதல்வர் அவர்களால் 25.06.2022 அன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டத்தில் மாணிக்கம் மஹாலில் 29.06.2022 புதன்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.  இந்நிகழ்வின் ஆயத்தப்பணிகள் குறித்து இன்று மாணிக்கம் மஹாலில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஷண்முகையா  மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் பார்வையிட்டனர்.  இந்நிகழ்ச்சியில், 2021-2022ஆம் கல்வி ஆண்டில்  பயின்ற  +2 மாணவ / மாணவியர்களின் உயர்கல்வி தேர்வு செய்தல் குறித்தும், உயர்கல்விக்கான  வங்கிக்கடன் பெறுதல் / கல்வி உதவித் தொகை பெறுதல் தொடர்பு மற்றும் பல்வேறு போட்டித் தேர்வினை எதிர் கொள்ளுதல் குறித்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது.   நிகழ்ச்சிக்கு ...

100 மைக்ரான் கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவும், இறக்குமதி செய்யவும் ஜூலை 1 முதல் மத்திய அரசு தடை.!

Image
ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவும், இறக்குமதி செய்யவும் ஜூலை 1 முதல் மத்திய அரசு தடை  #Plastic #PlasticBan #centralgovt

விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் தொடர்பான அரசாணை வெளியீடு

Image
அரசு ஊழியர்கள் 57 வயதில் ஓய்வு பெற்றால் மூன்று ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்படும் 59 வயதில் விருப்ப ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்படும் மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும் என தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது

பொதுக்குழுவுக்கு தடை கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாட பன்னீர்செல்வம் தரப்பு முடிவு.!

Image
ஜூலை 11ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாட பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளது. கட்சி பதவிகளில் மாற்றம் கொண்டுவர தற்காலிக தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிடவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.  அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு கட்சி பதவிகளில் மாறுதல் செய்ய தடை கோர தேர்தல் ஆணையத்தை நாடவும் பன்னீர் தரப்பு திட்டமிட்டுள்ளது.

தூத்துக்குடியில் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி கைது.!

Image
தூத்துக்குடி மாவட்டம்  சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி மடத்தூர் ரோடு 3வது மைல் பகுதியில்  சந்தேகத்திற்க்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்  தூத்துக்குடி 3வது மைல், தபால் தந்தி காலனி பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் ராஜபாண்டி (23) என்பதும்,  அவர் அப்பகுதியில் வந்துகொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.  உடனே போலீசார் ராஜபாண்டியை கைது செய்தனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட  ராஜபாண்டி மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் மற்றும் சிப்காட்  ஆகிய காவல் நிலையங்களில் 8 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறான உறவுக்கு அழைத்த மாமனார்; மாமனாருக்கு ஆதரவாகப் பேசிய மாமியார்.. கண்டு கொள்ளாத கணவன்!

Image
சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா, வேப்பிலைப்பட்டி காமராஜர் காலனியைச் சேர்ந்தவர்  வெங்கடேஷ்வரன். லாரி டிரைவராக உள்ளார்.  இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு  சர்வேஸ் என்ற ஆண் குழந்தையும், பிரதிக்ஷா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.  கடந்த  2 நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ்வரனின் மனைவி ரம்யா, மதியம் 2 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த போது அவரது மாமனார் பச்சமுத்து,  அவரை தகாத உறவுக்கு அழைத்தாராம்.   அதற்கு அவர் மறுத்ததால், தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்‌.  இதைத் தன் கணவரிடம் கூறியதற்கு அவரும் அவரது அப்பாவிற்கு சாதகமாகவே பேசுகிறாராம். மாமியார் தனலட்சுமியும், "என் கணவர் சொல்லும்படி இல்லை என்றால் வீட்டை விட்டு போ" என, அடித்துத் துன்புறுத்துகிறாராம். இதனையடுத்து கணவர், மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நாற்கரப்போர் படம் தமிழ் சினிமாவில் யாரும் சொல்ல துணியாத கதை தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும்- நடிகர் லிங்கேஷ் .

Image
நடிகர் லிங்கேஷ் மெட்ராஸ் படம் மூலம் அறிமுகமானவர் , தொடர்ந்து பரியேறும்பெருமாள், குண்டு, கபாலி , படங்களின் கவனம் பெற்றவர்   . இதனை தொடர்ந்து தற்பொழுது கதாநாயகனாக காயல், காலேஜ் ரோடு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தடுத்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது இப்படங்கள் . தற்பொழுது ஹெச் வினோத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீவெற்றி இயக்கும் 'நாற்கரப்போர்' எனும் படத்தில் அபர்நதி கதையின் நாயகியாக நடிக்க , கதையின் நாயகனாக லிங்கேஷ் நடித்துவருகிறார். நாற்கரப்போர் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும்,  தமிழ் சினிமா  எப்போதும்  நல்ல கதைகளை கைவிட்டதில்லை.  தரமான இயக்குனர்களை  தமிழ் சினிமா உருவாக்கிக்கொண்டேதான் இருக்கும் அந்த வரிசையில் ஶ்ரீ வெற்றி இணைவார் என எதிர் பார்க்கலாம்  நாற்கரப்போர்  படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றுவருகிறது ஶ்ரீ வெற்றி இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் திருவின் உதவியாளர் அர்ஜுன் ரவி ஒளிப்பதிவில்  முதல் கட்ட படப்பிடிப்பு  நிறைவுபெற்றிருக்கிறது. இந்தப்படம் தனக்கு மிக முக்கியமான ப...