தூத்துக்குடியில் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி கைது.!


தூத்துக்குடி மாவட்டம்  சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி மடத்தூர் ரோடு 3வது மைல் பகுதியில் 

சந்தேகத்திற்க்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்  தூத்துக்குடி 3வது மைல், தபால் தந்தி காலனி பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் ராஜபாண்டி (23) என்பதும், 

அவர் அப்பகுதியில் வந்துகொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

 உடனே போலீசார் ராஜபாண்டியை கைது செய்தனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட  ராஜபாண்டி மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் மற்றும் சிப்காட்  ஆகிய காவல் நிலையங்களில் 8 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!