Posts

Showing posts from July, 2022

சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டம் குறித்து ஆலோசனை

Image
சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டம் குறித்து ஆலோசனை தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது டிஜிபி சைலேந்திர பாபு, சட்டத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்பு #OnlineRummy #OnlineRummyBan #BanRummy #Tamilnadu

உரங்கள் மற்றும் விதைகள் தட்டுப்பாடு இல்லமால் கிடைக்க நடவடிக்கை - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்

Image
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி ஊராட்சியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதல் கட்டமாக வீடுகள் கட்டப்படவுள்ளன. இந்த இடத்தினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையெடுத்து அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தி, மாப்பிள்ளையூரணி, குளத்துள்வாய்பட்டி ஆகிய 3 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன.  தமிழ்நாடு முதலமைச்சர் மறுவாழ்வு மையங்களில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் மொத்தம் 350 வீடுகள் உள்ளது.  இதில் முதல் கட்டமாக 150 வீடுகளும், மாப்பிள்ளையூரணி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 52 வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் தாப்பாத்தி முகாமில் உள்ள 52 வீடுகளுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் கட்டுமான பணிக...

திருச்செந்தூர் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஓய்வறை பூங்கா அமைக்கபடும் - மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு.!

Image
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணை மேயர் ஜெனீட்டா செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  கூட்டத்தில் சில பள்ளிக்கூடங்கள் பராமரிப்பு மற்றும் கடைகள் மறு ஏலம் உள்பட மாநகராட்சி வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு கடற்கரை பூங்காவில் நடைபெறவுள்ள பணிகள் தீhமானம் தவிர அனைத்து தீர்மானங்களும் மேயர் கொண்டு வந்த சிறப்பு தீர்மானங்களும் ஓரு மனதாக நிறைவேற்றப்பட்டது.  தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி கூட்டத்தில் பேசுகையில்  அனைத்து பகுதிகளும் முழுமையாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சில பணிகள் முடிவு பெறும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு தேவையான பகுதிகளில் கால்வாய் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.  அதே போல் தேவையற்ற செயல்களில் ஈடுபட்ட ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும். அதே போல் உப்பாத்து ஓடை பகுதிகளும் சுமார் 2 ஏக்கர் மாநக...

செஸ் ஒலிம்பியாட் - இந்திய அணிக்கு முதல் வெற்றி

Image
இந்தியா 2வது அணியில் விளையாடிய சத்வாணி ரவுனக், ஐக்கிய அரபு அமீரக வீரர் அப்துல் ரகுமானை வீழ்த்தி வெற்றி* சத்வாணி வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கி 36வது நகர்த்தலில் வெற்றி*

பாம்பன் விசைப்படகு மீனவர்களின் வலையில் சிக்கிய விலை உயர்ந்த கிளி, மணிசிங்கி இறால் மீன்கள்.!!

Image
  பாம்பன் விசைப்படகு மீனவர்களின் வலையில் சிக்கிய விலை உயர்ந்த கிளி, மணிசிங்கி இறால் மீன்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி மீனவர்கள் நாட்டுப்படகு, விசைப்படகு உள்ளிட்டவைகள் மூலம் சீலா, மாவுலா, இறால், பாறை, நண்டு, கிளி, முரல் உள்ளிட்ட மீன்களை பிடித்தாலும் அதில் அதிக விலை கொண்டது சிங்கி இறால் மீன்கள்தான். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இந்த மீன்கள் அதிகம் பிடிபடும். இந்நிலையில், ராமேசுவரம் பகுதி மீனவர் வலையில் அதிக கிராக்கி கொண்ட மணி சிங்கி இறால் பிடிபட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை வியாபாரிகள் மூலம் கேரளாவில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, விமானம் மூலம் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, தாய் லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பப் படுகிறது. இதுகுறித்து பாம்பன் மீனவர்கள் கூறியதாவது: மணி சிங்கி இறால் உயிருடன் இருந்தால் கிலோ ரூ.4000 முதல் ரூ. 5000 வரை விலை போகும். அதே மீன் இறந்து போனால் கிலோ ரூ.200-ல் இருந்து ரூ. 400-க்கு மட்டுமே விலை போகும். வெளிநாடுகளில் சிங்கி இறால்களை விரும்பி உட்கொள்வர். சிங்கி இறால்களில...

கோவில்பட்டியில் சிறிய பாலத்தில் லாரி மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு

Image
தூத்துக்குடியில் இருந்து ஆலங்குளத்திற்கு சாம்பல் ஏற்றிக்கொண்டு லாரி  கோவில்பட்டி வழியாக வந்து கொண்டிருந்தது.  லாரியை மதுரையைச் சேர்ந்த டிரைவர் கலைச்செல்வம் ஒட்டி வந்தார். லாரி கோவில்பட்டி மெயின் சாலையான  மாதாங்கோவில் தெரு,  மார்க்கெட் ரோடு, அண்ணா பஸ்  நிலையம் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய சாலையில்  வந்து கொண்டிருந்த போது சாலையின் ஓரத்தில் இருந்த சிறிய பாலத்தில் மோதியதால் லாரியின் டயர் வெடித்து, பட்டை உடைந்து, லாரி பாதி சாய்ந்த நிலையில் நின்றது. இது காலை நேரத்தில் நடந்த விபத்து என்பதால்  அப்பகுதியில் வந்த பள்ளி வாகனங்கள், வேலைக்கு செல்பவர்கள், மார்க்கட்டிற்கு காய்கறி வாங்க வந்தவர்கள் ஒரே இடத்தில் கூடியதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒரு வழி பாதையில் மாற்றி விட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்  ஏற்கனவே இந்த சிறிய பாலம் அமைக்கப்படும் போது இது மிகவும் நெரிசலாக, குறுகலாக அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டு எழுந்தது. விபத்துகள் ஏற்பட ...

மாமல்லபுரத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு செஸ் போட்டிகள் துவக்கம்.!

Image
மாமல்லபுரத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு செஸ் போட்டிகள் துவக்கம்.! 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அனைவரும் தேசிய கொடி ஏற்றுவது குறித்து ஆட்சியர் ஆலோசனை!

Image
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வருகின்ற ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அனைவரும் தேசிய கொடி ஏற்றுவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வருகின்ற ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை அனைத்து அரசு அலுவலகங்கள், நினைவகங்கள், மணிமண்டபங்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் அனைவரும் தேசிய கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு  ஏற்படுத்திட மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ,தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்ததாவது: இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு நிறைவடைவதையொட்டி ஆண்டு முழுவதும் பல்வேறு விதமான விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள அரசு அல...

செஸ் ஒலிம்பியாட்: விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர் படம் இடம்பெற ஹைகோர்ட் உத்தரவு..!

Image
மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் உத்தரவு.. அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பிரதமர், குடியரசுத் தலைவர் படம் பயன்படுத்தப்பட வேண்டும் - ஹைகோர்ட்

தூத்துக்குடியில் மாநகராட்சி கழிவு நீர் பைப் தோண்டும் போது மண் சரிந்து விழுந்து கூலி தொழிலாளி பலி.!

Image
தூத்துக்குடி மாவட்டம் தருவை குளத்தை சேர்ந்தவர் முத்துவேல் மகன் வெள்ளபாண்டி (46), கூலி தொழிலாளியான இவருக்கு, மனைவி மற்றும் 2 ஆண், 1 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர், இன்று தூத்துக்குடி- ராமேஸ்வரம் சாலையில் உள்ள தருவைகுளம் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், மாநகராட்சி, ஒப்பந்த அடிப்படையில், அங்கு உள்ள தொட்டிக்கு பைப் லைன் போடும் பணியில் 4 பேர் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது குழி தோண்டி கொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதமாக வெள்ளபாண்டியின் மேல் மண் சரிந்து விழுந்ததில் மூச்சு திணறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயூரிழந்தார். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தாளமுத்து நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸில் ஏற்ற முற்பட்டனர். இதனை கண்டித்து வெள்ள பாண்டி உறவினர்கள் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றகூடாது என மாநகராட்சியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பின்னர், தூத்துக்குடி DSP சத்யராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக சம்பந்...

தூத்துக்குடியில் நாளை மற்றும் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் பகுதி அறிவிப்பு.!

Image
தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், தூத்துக்குடி  நகர் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, விபத்து ஏற்படாமல் இருக்க வேண்டி கீழ்க்கண்ட உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல்,  சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்களை சரி செய்தல் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 29.07.2022      வெள்ளிக்கிழமை   அன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 02.00 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. நகர் வடக்கு உபகோட்டத்திற்குட்பட்ட பகுதிகள் ஆரோக்கியபுரம் ஹவுசிங் போர்டு சுற்றி உள்ள பகுதிகள் சென்மேரிஸ் காலனி மீனவர் காலனி அய்யர் விளை ,மேல அலங்கார தட்டு கலைஞர் நகர் கிருஷ்ணராஜபுரம் ஐந்தாவது தெரு பேட்ரிக் ஆலய பின்புறம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மரக்கொடி தெரு சுற்றியுள்ள பகுதிகள் பிரமுத்து சந்து ஒன்னாம் கேட் சுற்றியுள்ள பகுதிகள் காமாட்சி அம்மன் கோவில் தெரு 110கிவோ சிப்காட் உபமின் நிலையத்திலிருந்து மின்னோட்டம் பெறும்     பண்டாரம் பட்டி மற்றும் பாரத் பெட்ரோலியம் மின் தொடர் பகுதிகள் ராஜகோபால் நகர் ,மகிழ...

ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய தூத்துக்குடி கடற்கரையில் குவிந்த மக்கள்.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் கடற்கரை மற்றும் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்களுடைய ஆன்மா சாந்தியடைந்து அவர்களுடைய ஆசி எப்பொதும் அவரவர் குடும்பங்களுக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஆடி அமாவாசை தினத்தன்று ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை, மற்றும் துறைமுக கடற்கரையில் ஏராளமானோர் காலையிலே திரண்டு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.  இதைப்போல் தாமிரபரணி ஆற்றங்கரைகளான ஸ்ரீவைகுண்டம், ஏரல் ஆத்தூர் உட்பட பல இடங்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புகார் கொடுக்க வந்த பெண்ணுடன் உறவு.! - விளாத்திகுளம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் சஸ்பெண்ட்.!

Image
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த தாண்டவம்.  இவர் மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது அங்கு சொத்து பிரச்சனை தொடர்பாக 23.10.2019 தேதியில் கோமதி என்பவர்  புகார் அளித்துள்ளார்.  இது குறித்து விசாரணை நடத்திய ஆனந்த தாண்டவத்துக்கு கோமதி  உடன்  நெருக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் இணைந்து வாழ்ந்துள்ளனர். அப்போது கோமதியிடம்  6 லட்சம் பணம் பெற்றுள்ளார். இதனிடையே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.  இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான கோமதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் உறவினர்கள் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட கோமதி தனது வாழ்க்கையையும் பணத்தையும் பாதுகாத்து தருமாறு கடந்த ஏப்ரல் மாதம் டிஜிபி அலுவலகத்தில்  புகார் செய்தார்.  இது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் மீதான புகாரில் குற்றச்சாட்டு ஊர்ஜிதமானது. இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவத்தை புதன்கிழமை இரவு சஸ்பென்ட் செய...

நடிகர் தனுஷின் 39-வது பிறந்தநாள் - தூத்துக்குடி ரசிகர் மன்றத்தில் ஏற்பாட்டில் 500 பேருக்கு அன்னதானம்.!

Image
தூத்துக்குடியில் நடிகர் தனுஷின் 39-வது பிறந்தநாளினை முன்னிட்டு தூத்துக்குடி தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் மாவட்ட தலைவர் T.M. மணிகண்டன் தலைமையில் சிவன் கோயில் அருகில் உள்ள ராசி மஹாலில் 500 பேருக்கு அன்னதானம் நடைபெற்றது இதேபோல, தூத்துக்குடி மாநகரில் உள்ள 3 ஆதரவற்ற முதியோர் இல்லங்களிலும் மன்றத்தின் சார்பில்  மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு பறிமாறப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சூரியகாந்த் மாநகர தலைவர் கருப்பசாமி வழக்கறிஞர் தொல்காப்பியர் உள்பட தனுஷ் ரசிகர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்.!

Image
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, மதுரையில் கனமழைக்கு வாய்ப்பு கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட்.!

Image
எம்.பி.க்கள் சுசில் குமார், குப்தா சந்தீப் குமார் உள்ளிட்ட 3 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் அவை மையப்பகுதிக்கு சென்று பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பியதால் நடவடிக்கை என விளக்கம்*

தமிழ்நாடு அரசை பாராட்டிய சர்வதேச செஸ் கூட்டமைப்பு.!

Image
மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (28ம் தேதி) தொடங்கும் நிலையில்,  இதன் தொடக்க விழா குறித்த தமிழ்நாடு அரசின் விளம்பரம் இந்தியாவின் முன்னணி பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது.  இவற்றை பகிர்ந்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு,  செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பான பணிகளை செய்து வருகிறது என்று பாராட்டியுள்ளது

44வது செஸ் ஒலிம்பியாட் இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி.!

Image
44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் துவக்க விழாவில்  முதல்வர், ஆளுநர், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று மாலை தொடங்குகின்றன. பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைக்கிறார். இப்போட்டிகளில் மொத்தம் 187 நாடுகளின் 1400 வீரர்கள் பங்கேற்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா காலங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டன. தற்போது சர்வதேச அளவில் கவுரமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகிறது. ஆசிய நாடு ஒன்றில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிய நடத்தும் பெருமையை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.  சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியா...

குரூப் 1 தேர்வில் மாநிலத்தில் 9வது இடம் பிடித்து வெற்றி பெற்று துணை ஆட்சியராக பதவி பெற்ற காவல் ஆய்வாளர் மகளுக்கு எஸ்.பி பாராட்டு.!

Image
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2021 -2022ம் ஆண்டிற்கான குரூப் - 1 தேர்வில் தூத்துக்குடி தென்பாக காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் என்பவரது மகள் செல்வி. ஷீஜா மாநிலத்தில் 9வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். செல்வி. ஷீஜா வெள்ளிச்சந்தை அருணாச்சலம் மகளிர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து, தனது 24வது வயதில் குரூப் -1 தேர்வில் வெற்றி பெற்று, விரைவில் துணை ஆட்சியராக பதவியேற்க உள்ளார்.  இவரது தந்தை ராஜாராம் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகில் உள்ள குஞ்சன்விளை ஊரைச் சேர்ந்தவர் என்பதும், இவர் 1997ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று தற்போது தென்பாகம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி செல்வி. ஷீஜா அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் சால்வை அணிவித்து புத்தகம் பரிசாக வழங்கி பாராட்டினார்.  அப்போது காவல் ஆய்வாளரான அவரது தந்தை ராஜாராம்  உடனிருந்தார்.

ஏபிஜே அப்துல் கலாமின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் ஜீவ அனுக்கிரக மற்றும் பசுமை இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.!

Image
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜீவ அனுக்கிரக மற்றும் பசுமை இயக்கம் சார்பில் அப்துல் கலாம் திரு உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை பொது மக்களுக்கு மரக்கண் வழங்கினர். டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜீவா அனுக்கிரக மற்றும் பசுமை இயக்கம் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை நிறுவன தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் முன்னிலையில்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெருஞ்செழிய பாண்டியன் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து 100 பேருக்கு இலவச மரக்கண்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.  நிகழ்ச்சியில் பசுமை இயக்க நிர்வாகிகள் பாபு, ராமர், பாலசுப்பிரமணியன், செல்வகுமார், நல்லதம்பி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

குற்றாலம் வெள்ளப்பெருக்கில் 2 பேர் பலி

Image
குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 3 பேர் அடித்துச் செல்லப்பட்டனர் 3 பேரில் ஒரு பெண் மீட்கப்பட்ட நிலையில், இருவரை மீட்கும் பணி தீவிரம்

பிராட் பிட் நடித்துள்ள “புல்லட் டிரெய்ன்” திரைப்படம் இந்திய திரையரங்குகளில் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிறது !!!

Image
மூன்று வெற்றிகரமான திரைப்பட பிரீமியர்கள் மற்றும் ஸ்கர்ட்டுடன்  பிராட் பிட் தோன்றிய புகழ்பெற்ற சிவப்பு கம்பள தோற்றத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக,  இன்னும் ஒரு உற்சாகமான செய்தி வெளியாகியுள்ளது!  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி - நகைச்சுவை கலந்த திரைப்படமான “புல்லட் டிரெய்ன்” திரைப்படம் அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் 4, 2022 அன்று இந்தியாவில் வெளியாகவுள்ளது! டெட்பூல் 2 இயக்குனர் டேவிட் லீட்ச் இயக்கிய இந்த திரைப்படத்தில், ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான சில முன்னணி நட்சத்திர குழுவினர் இணைந்து நடித்துள்ளனர். முதன்மை பாத்திரத்தில் பிராட் பிட் நடிக்க, கிஸ்ஸிங் பூத் நடிகர், பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது வென்றவர் மற்றும் கோல்டன்  குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட, ஜோய் கிங் மற்றும் பலமுறை பிரைம் டைம் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரையன் டைரி ஹென்றி, அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் புகழ் ஆரோன் டெய்லர்-ஜான்சன், தி பாய்ஸ் புகழ் கரேன் ஃபுகுஹாரா, ப்யூரி புகழ் லோகன் லெர்மன் ஆகியோர்  நடிக்கின்றனர். பிராட் பிட் 2019...

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் காவிய காதலைச் சொல்லும் 'சீதா ராமம்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு.!

Image
போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய 'சீதா ராமம்' ‘சீதா ராமம்’ காதல் கடிதத்தை நினைவுப்படுத்தும் -  துல்கர் சல்மான். முதன்முதலாக குணசித்திர வேடத்தில் நடித்திருக்கிறேன் - சுமந்த் நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சீதா ராமம்' எனும் காதலை மையப்படுத்திய திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது- இதனை நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். சீதா ராமம் திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வைஜயந்தி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்கும் ‘சீதா ராமம்’ படத்தை ஸ்வப்னா சினிமா எனும் பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை லைகா நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.  'சீதா ராமம்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ப...

தூத்துக்குடியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் - அமைச்சர் கீதாஜீவன் துவங்கி வைத்தார்.!

Image
தமிழகம் முழுவதும் 11வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வந்தது இதுபோல் இந்த ஆண்டும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை  இரண்டு தினங்களுக்கு முன்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துவங்கி வைத்தார் இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பதினோராம் வகுப்பு படிக்கும் 16 ஆயிரத்து 498 மாணவ மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி  தூத்துக்குடியில் உள்ள திரு சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பள்ளியில் படிக்கும் 236 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி தொடங்கி வைத்தார்  தொடர்ந்து மாணவிகளின் மத்தியில் பேசிய அமைச்சர் கீதாஜீவன்  மாணவ மாணவிகளின் நலன்களை பாதுகாக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது எனவும் அந்த வகையில் தான் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவிகள் எதையும் தைரியமாக எதிர் கொள்ள வேண்டும்  மாணவிகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அந்த பிரச்சினைகளை ஆசிரியர்களிடமும் பெற்றோர்களி...

அமமுக சார்பில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி.!

Image
தூத்துக்குடி டூவிபுரம் பத்தாவது தெருவில் முப்பதாவது வட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வீரபுத்திரன், வட்டச் செயலாளர் காசிலிங்கம், வட்டச் செயலாளர் ஆறுமுகம், வட்ட பொருளாளர் சுப்பையா, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு புகார் பெட்டி குறித்து விழிப்புணர்வு.

Image
தேனி,27 தேனி மாவட்டத்தில் மாணவ மாணவியர்களுக்கு புகார் பெட்டி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி மாவட்டம் இந்து நாடார் உறவின் முறை நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதித்துறை, காவல்துறை, சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு புகார் பற்றி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.  மாவட்ட கலெக்டர் முரளிதரன், தலைமையில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோபிநாத், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையர் குழு செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டேங்ரே, முன்னணியில் நடைபெற்றது. தேனி மாவட்ட செய்தியாளர். ரா.சிவபாலன்..

More than 1,000 Lufthansa flights were cancelled Due To one-day strike by the airline's German ground staff, affecting tens of thousands of passengers.

Image
  More than 1,000 #Lufthansa flights were cancelled Due To one-day strike by the airline's #German ground staff, affecting tens of thousands of passengers. About 1,34,000 passengers had to change their travel plans or cancel A strike organized by a trade union of the staff of an air carrier to secure pay increases does not fall within the concept of an ‘extraordinary circumstance’. Airlines are obliged to pay compensation for cancellations or long delays for the flights concerned. #lufthansastreik

ஏபிஜே அப்துல் கலாமின் 7ம் ஆண்டு நினைவு நாள் 90 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை சென்று அஞ்சல் செலுத்திய பக்தர்.!

Image
முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 7வது நினைவு நாளை முன்னிட்டு 90 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை நடந்து வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் ராமேஸ்வரம்: ஜூலை29 ஆன்மீக கடவுளுக்கும் நம்முடன் வாழ்ந்து மறைந்த சித்தர்களுக்கும் விரதம் இருந்து பாதையாத்திரையாக செல்லும் பழக்கம் நம்மிடைய உள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு அஞ்சலி முன்னிட்டு அப்துல் கலாம் தீவிர பக்தனான தேவகோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் கலாம் நினைவு நாளன்று கடந்த 7 ஆண்டுகளாக தேவகோட்டையில் இருந்து நடைபயணமாக வந்து ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவருகிறார்  இவருடன்  சீனி இவரது ஐந்து வயது மகன் முகம்மது சமீர் இருவரும் சைக்கிளில் காரைக்குடியில் இருந்து சைக்கிள்பயணமாக வந்தனர் மேலும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் இளைஞர் பேரவை சேர்ந்த ஏகே அர்ஜுனன் துறை மற்றும் வினோத் குமார் சிவா அனு ராஜா என் வெங்கடேஷ் உடனிருந்தனர்.

நகைச்சுவையும், திகிலும் கலந்த 'காட்டேரி' நான் சின்ன வயதில் நடித்த படம் = 'காட்டேரி' படம் குறித்து வரலட்சுமி 'கலகல' பேச்சு

Image
தமிழ் திரை உலகில் பேயை வைத்து ' யாமிருக்க பயமே' எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'காட்டேரி'.  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஆத்மிகா பேசுகையில்,.'' திரைத்துறையில் அறிமுகமான பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். ஸ்டுடியோ கிரீன் எனும் பிரபலமான பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது அனைத்து நடிகைகளின் விருப்பமாக இருந்தது. பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.  இயக்...