Posts

Showing posts from December, 2022

சனாதன சக்திகளை தனிமைப்படுத்த புத்தாண்டு நாளில் உறுதியேற்போம் - திருமாவளவன் புத்தாண்டு வாழ்த்து.!

Image
  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை பாதுகாக்க சனநாயக சக்திகளை ஒருங்கிணைப்போம். சனாதனத்தை வீழ்த்தி சகோதரத்துவம் மலரும் ஆண்டாக 2023ம் ஆண்டு மலரட்டும்.  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புத்தாண்டு வாழ்த்து

சத்தியமங்கலம் நகராட்சி பகுதி யில், ஆக்கிரமிப்புகள் அகற்ற உரிய நடவடிக்கை-

Image
  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சி நகர்மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் ஆர் ஜானகி ராமசாமி தலை மையில்,நகராட்சி ஆணையாளர்(பொ) பொறியாளர் ரவி மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் நடராஜ் முன்னிலை யில் நடைபெற்றது. கூட்டத்தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 22வது வார்டு நகர் மன்ற உறுப் பினர் லட்சுமணன் தனது வார்டு க்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் நகராட்சி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப் படுமா? என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த, நகர் மன்ற தலை வர், நகராட்சி பகுதியிலுள்ள, ஆக் கிரமிப்பு பகுதிகளை அலுவலர் கள் ஆய்வு செய்து உரிய நடவடி க்கை மேற்கொள்வார்கள் என தெரிவித்தார். 23வது வார்டு கவுன் சிலர் அரவிந்த் சாகர்,நகராட்சி சமுதாயக் கூடம் திருமண உபயோகத்திற்கு பயன்படுத்துவதில்லை எனவும்,, அதை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண் டு வர வேண்டும் எனகோரிக்கை விடுத் தார்.இதற்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர் மற்றும் பொறியாளர் நகரப் பகுதி பொது மக்கள்,திருமண பயன்பாட்டுக்கு யாரும் கேட்கவில்லை என்றும், ஏற்கனவே அது தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டு, நகராட்சிக்கு வருவாய் ஈட்டி தரும் நிலையில்,தங்கள...

கேரளா: சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை.!

Image
  சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவெலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செருவேலி எஸ்டேட்டில் உள்ள நிலம் உட்பட 2,570 ஏக்கரில் சபரிமலை விமான நிலையம் அமைகிறது.

Kerala govt order to acquire land for construction of new airport at Sabarimala

Image
The order from the Revenue Department states that 2,570 acres of land will be taken between Erumeli South and Manimala. The Cheruvally rubber estate has been selected as the place for the proposed airport. The airport will be located 48 kms from the Sabarimala airport and will have a runway of 3,500 metres.

கோவில்பட்டியில் புத்தாண்டை முன்னிட்டு - 37 வது தேசிய புத்தக கண்காட்சி துவக்கம் - 5000 தலைப்புகளில் ஒரு லட்சம் புத்தகங்கள்.!

Image
  நேஷனல் புக் டிரஸ்ட் புதுடெல்லி.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகியவை சார்பில் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் 37 வது தேசிய புத்தக கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது. கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தேசிய புத்தக கண்காட்சி ஜனவரி 12 வரை நடைபெற உள்ளது.புத்தக கண்காட்சியில் வரலாற்று புதினங்கள்,வாழ்க்கை வரலாறு, இலக்கியம்,நாவல்,சிறுகதைகள்,கட்டுரைகள்,ஆங்கில நாவல்கள்,போட்டித் தேர்வு நூல்கள்,உள்பட5000 தலைப்புகளில்1 லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. தேசியபுத்தக கண்காட்சியினை புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமண பெருமாள் தலைமை வகித்து துவக்கி வைத்தார். அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் முனியசாமி,கோவில்பட்டி ஜேசிஐ தலைவர் தீபன் ராஜ். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் அனைவரையும் வரவேற்றார். புத்தக கண்காட்சியில் முதல் விற்பனையை புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப் பெருமாள் துவக்கி வைக்க ஜீவிஎன் கல்லூரி முதல்வர் சாந்தி மகே...

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி தலைமையில் அவசர கூட்டம்.!

Image
  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊராட்சி மன்ற அவசர கூட்டம் தலைவர் பிரம்மசக்தி தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் மற்றும் வளர்;ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  மாவட்டம் முழுவதும் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் 2022-23ம் ஆண்டு மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து சாலை வசதி, கால்வாய் வசதி, பேவர் பிளாக் சாலை அமைத்தல், பழுதடைந்த பள்ளிக் கட்டிடம் சீரமைத்தல், அங்கன்வாடி புரனமைப்புப் பணிகள் என பல்வேறு வளர்ச்சிப் பணித் திட்டங்கள் நிறைவேற்றுவதற்கு ரூ.3 கோடியே 56 இலட்சத்து 80 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.  கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி செயலர் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலெட்சுமி சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அருண் குமார், சத்யா, செல்வகுமார், ஞானகுருசாமி, அழகேசன், தங்கக்கனி, தங்க மாரியம்மாள், தேவராஜ், தேவவின்னரசி, நடராஜன், பாலசரஸ்வதி, பிரியா, பேச்சியம்மாள், மிக்கேல்...

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடவாமல் தடுக்க இந்த ஆண்டு காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து எஸ்பி பாலாஜி சரவணன் பேட்டி.!

Image
தூத்துக்குடி  மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடவாமல் தடுப்பதற்கு இந்த ஆண்டு காவல்துறையினர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். இது குறித்து இன்று அவர் அளித்த பேட்டியில்.. குண்டர் தடுப்புச் சட்டம்  தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் 43 பேர், போக்சோ வழக்குகளில் ஈடுபட்டவர்கள் 14 பேர் உட்பட 270 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள்  இந்த ஆண்டு இதுவரை கூட்டுக்கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகளில் பதிவான 593 வழக்குளில் 417 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 700 எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 5,38,89,654/- ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்குகள்  இந்த ஆண்டில் போதை பொருள் தடுப்பு குற்றத்தில் 182 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 74,16,740/- மதிப்புள்ள 5 கிலோ கஞ்சா ஆயில் உட்பட 696 கில...

எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன்.!

Image
  2023ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறப்பை இந்தியா உட்பட பல வெளிநாடுகளிலும் வாழும் இந்தியர்கள், தமிழர்கள் கொண்டாடுவது வழக்கமான நடைமுறையில் இருந்து வருகின்றனர். ஒருவருக்கொருவர் சந்தித்து அன்பை பரிமாறிக்கொண்டு பழைய நட்பையும், புத்தாண்டில் புதுப்பித்துக் கொண்டு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூங்கொத்து  கொடுத்து, வாழ்த்து தெரிவித்தார்.

போக்குவரத்து துறை சார்பில் வாகனங்களை ஆய்வு செய்ய, பராமரிக்க 7 நடமாடும் பணிமனைகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Image
  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (31.12.2022) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும், பராமரிப்பதற்காகவும்  மதுரை, திண்டுக்கல், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 7 இடங்களில் ஒரு கோடியே 2 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் பணிமனைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். போக்குவரத்துத் துறையின் 2022 - 23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் 20 பணிமனைகள் மட்டுமே பல்வேறு மாவட்ட தலைமையிடங்களில் செயல்பட்டு வருகின்றன. அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத பிற மாவட்டங்களில் இயங்கி வரும் அரசுத் துறை வாகனங்களை பழுது நீக்கும் பொருட்டு அருகிலுள்ள அரசு தானியங்கி பணிமனைகளுக்கு அவை கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக அவ்வாகனங்கள் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளதால் கூடுதல் எரிபொருள் செலவு மற்றும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் நடமாடு...

கொரோனா கால ஒப்பந்த நர்ஸ்களுக்கு பணி நீடிப்பு இல்லை.!: தமிழக சுகாதாரத்துறை அரசாணையால் அதிர்ச்சியில் நர்ஸ்கள்.!

Image
  கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் நர்ஸ்கள் பணி அமர்த்தப்பட்ட நிலையில் அந்த நர்சுகளின் பணி இன்றுடன் முடிவடையும் நிலையில் அந்த நர்சுகளுக்கு பணி நீடிப்பு இல்லை என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது நர்சுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்த நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அதற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நர்சுகள் நியமனம் செய்யப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் சுமார் 2300 நர்சுகள் பணியில் அமர்த்தப்பட்ட நிலையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை அவர்கள் பணியில் இருப்பார்கள் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் இந்த நர்சுகள் நியமனம் செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நர்சுகளின் பணி முடிவடைந்ததை அடுத்து பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என நர்ஸ்களின் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் ஒப்பந்த நர்ஸ்களுக்கு பணி நீடிப்பு இல்லை என தமிழக சுகாதாரத் துறை சற்றுமுன் அரசாணை வ...

நாமக்கல் அருகே, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 4 பேர் பலி.! -11-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!

Image
  நாமக்கல் அருகே, வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பலியாகினர். மோகனூர் மேட்டுத்தெருவை சேர்ந்த பட்டாசு கடை உரிமையாளரான தில்லைக்குமார், புத்தாண்டு விற்பனைக்காக சிவகாசியில் இருந்து ஆர்டர் செய்த நாட்டு வெடிகளை, கடையில் இடம் இல்லாததால், வீட்டில் உள்ள ஒரு அறையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டிலிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியதில், வீட்டிலிருந்த 3 சிலிண்டர்களும் அடுத்தடுத்து வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தில்லைக்குமாரின் வீடு இடிந்து தரைமட்டமானதோடு, அருகிலிருந்த 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தில்லைக்குமார், மனைவி பிரியா, தாய் செல்வி மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெரியாக்காள் என்ற மூதாட்டி ஆகிய 4 பேர் தூக்கத்திலேயே பலியாகினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுப்படுத்தி, இடுபாடுகளில் சிக்கியிருந்த 4 பேரின் சடலங்களையும் மீட்டனர். காயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு ந...

அம்மாடியோவ்...ஆண்டுக்கு ரூ.1770 கோடி சம்பளம்.! - சவுதி அரேபியாவின் அல்-நசீர் அணிக்காக விளையாட ரொனால்டோ ஒப்பந்தம்.!

Image
சவுதி அரேபியாவின் அல்-நசீர் அணிக்காக ஒப்பந்தமானார் கிறிஸ்டியானோ ரொனால்டோ; 2025 வரை ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.1770 கோடிக்கு ஒப்பந்தம்! உலகிலேயே கால்பந்து வீரருக்கு கொடுக்கப்பட்ட அதிக சம்பளம் இதுவாகும்!

Attention, GST Taxpayers, whose Aggregate Annual Turnover for the F.Y. 2021-22 is more than ₹ 2 Crore!

Image
Attention, GST Taxpayers, whose Aggregate Annual Turnover for the F.Y. 2021-22 is more than ₹ 2 Crore!

மின்னல் வேகத்தில் ஆட்டோவில் மோதிய பைக்...கல்லூரி மாணவர் பலி... சிசிடிவி காட்சி

Image
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் ஆட்டோ மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு.மின்னல் வேகத்தில் சென்ற பைக் ஆட்டோ மீது மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சௌடாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி. இவரது மகன் அமிர்தவாசன்(19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று அமிர்தவாசன்  காங்கேயம் - திருப்பூர் சாலையில் சென்ற போது நீலக்காட்டுப் புதூர் பிரிவு அருகே சென்றபோது, சாலையில் திரும்பிய ஆட்டோ மீது வாலிபர் ஒட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அமிர்தவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது காண்போரை அதிர்ச்சியடைய வைக்கும் விதமாக, ஆட்டோ சாலை பிரிவில் மெதுவாக திரும்புவதும், அப்போது மின்னல் வேகத்தில் பைக் மோதும் காட்சிகள் அங்குள்ள கடை ஒன்றில் பொருத்தப் பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

பஸ் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு - எஸ்யூவி கார் மீது மோதியதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்.!

Image
  குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை பேருந்தும் SUV காரும் மோதிய பயங்கர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 28 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து பிரமுக் சுவாமி மஹராஜ் சதாப்தி மஹோத்சவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய தனியார் பேருந்து நவ்சாரி தேசிய நெடுஞ்சாலை எண் 48ல், வந்து கொண்டிருந்த போது, டிரைவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மீது மோதியதில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் பயணம் செய்த அனைவரும் (9பேர்) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். 11 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எதிர் திசையில் இருந்து எஸ்யூவி வந்து கொண்டிருந்த போது, ​​வெஸ்மா கிராமத்திற்கு அருகே விபத்து நேர்ந்ததாக நவ்சாரி காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ருஷிகேஷ் உபாத்யாய் தெரிவித்தார். எஸ்யூவியில் பயணித்தவர்கள் குஜராத்தில் உள்ள அங்கலேஷ்வரில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் வல்சாத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் என்றும், பேருந்தில் ப...

அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி தொகுப்பாளர் பார்பரா வால்டர்ஸ் (93) காலமானார்!

Image
  அமெரிக்காவில் மாலை செய்திகளை தொகுத்து வழங்கிய முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் பார்பரா வால்டர்ஸ்; 50 ஆண்டுகால செய்தித்துறை பயணத்தில் 12 எம்மி விருதுகளை வென்றுள்ளார் பார்பரா

கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு - ஒருவர் கைது, ரூபாய் 3,700/- மீட்பு.!

Image
  தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்த தங்கராஜ் மகன் ரவிசேகர் (58) என்பவருக்கு சொந்தமான மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ.உ.சி மார்க்கெட் பகுதியில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் கடையில் கடந்த 28.12.2022 அன்று இரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடையில் இருந்த ரூபாய் 2,500/- பணத்தை திருடி சென்றுள்ளனர். அதேபோன்று அன்றைய தினமே தூத்துக்குடி தெற்கு காட்டன்ரோடு எஸ்.எஸ். மூர்த்தி தெருவில் உள்ள ஒரு மருந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு இருந்த ரூபாய் 16,000/- பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் தலைமையில் உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் மற்றும் வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்  மகால...

"தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும்" - மத்திய அமைச்சரிடம் வர்த்தக சங்க நிர்வாகிகள் மனு.!

Image
தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வர்த்தக தொழிற்சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.  தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.கே சிங்கை தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் தமிழரசு மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் :-  "தூத்துக்குடி விமான நிலையத்தை ஒரு சர்வதேச பரிமாற்றம் மற்றும் தெற்காசியாவின் விமான சரக்கு மையமாக மேம்படுத்த வேண்டும். மதுரையைத் தாண்டி தென்னிந்தியா முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஒரே விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையம் உள்ளது.  தென்னிந்திய விமான நிலையம் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும். தென்னிந்தியாவில் உள்ள ஒரே விமான நிலையம், தேவையான நிலத்தை உடனடியாகக் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தும் திறன் கொண்ட விமான நிலையமாகும். கார்கோ ஏர் ஹப் மற்றும் சர்வதேச பயணிகள் பரிமாற்றம் தென்னிந்தியாவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு விமானப் பயணம் மற்றும் சரக்கு பரிமாற்றத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அடுத்த முப்பதாண...

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகில் தப்ப முயன்ற போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன்.! - 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

Image
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற வழக்கில் கைதான  இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.  தூத்துக்குடி கடற்கரை பகுதியில் சுற்றித் திரிந்த  வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி க்யூ பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் அந்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள லிட்டில் ஹாம்டன்நகர் பகுதியைச் சேர்ந்த ஜோனாதன் தோர்ன் என தெரியவந்தது.  மேலும், அவரிடம் எந்தவித ஆவணங்களுக்கும் முறையாக இல்லாமல் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவர் போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவன் என்றும் அவர் மீது மும்பையில் போதை மருந்து தொழிற்சாலை நடத்தியதும் தெரியவந்தது. மேலும், மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் 40 கோடி ரூபாய் மதிப்பிலான கேட்டமைன் உள்ளிட்ட போதை மருந்து பொருட்களுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜோனாதன் தோர்னை கைது செய்து சிறையில...

தூத்துக்குடி பிரஸ் கிளப்பின் 2023ம் ஆண்டிற்கான காலண்டர் மற்றும் டைரி - மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டார்.!

Image
  தூத்துக்குடி பிரஸ் கிளப்பின் 2023ம் ஆண்டிற்கான காலண்டர் மற்றும் டைரிகள் வழங்கும் நிகழ்ச்சி பிரஸ் கிளப் மன்ற அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்பித்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, காலண்டர் மற்றும் டைரிகளை மன்ற உறுப்பினர்களுக்கு  வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் காதர்முகைதீன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் மாரிமுத்துராஜ், இணைச்செயலாளர் கார்த்திகேயன்,  செயற்குழு உறுப்பினர்கள் இசக்கிராஜா, முரளிகணேஷ், அகமதுஜான், சிதம்பரம், மாரிராஜா, மோகன்ராஜ், முத்துராமன், ராஜன்,  ரவி, பேச்சிமுத்து மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ரயில் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டி.டி.ஆர். சேரன் சூப்பர் பாஸ்ட் ரயிலில் பரபரப்பு

Image
ரயில் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டி.டி.ஆர். சேரன் சூப்பர் பாஸ்ட் ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து கோவை வரை செல்லக்கூடிய சேரன் சூப்பர் பாஸ்ட் ரயிலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு வயது குழந்தை உட்பட ஒன்பது நபர்கள் 29.12.2023 சென்னையில் இருந்து பயணித்து வந்தனர். இதில் மூன்று நபர்களுக்கு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியும் (B6), மீதம் உள்ள நான்கு நபர்களுக்கு முன் படுக்கை வசதி கொண்ட(S1) பெட்டியில் பயணித்தனர். 6 வயது சிறுவனுக்கு டிக்கெட் கிடைக்காததால் ஏசி வகுப்பில் சிறுவன் அவனது தாயாருடன் பயணித்து வந்தான். இதையடுத்து டிடிஆரிடம் இருந்து சிறுவனுக்கு டிக்கெட் பெறப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 நபர்கள் பயணித்து வந்த நிலையில் மருத்துவர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஏசி பெட்டியில் பயணிக்க இயலாததால் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது பெண் குழந்தையை ஏசி பெட்டியில் பயணித்து வந்தார். ஆரம்பம் முதலில் டி.டி.ஆர். அந்த குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வந்த நிலையில் நள்ளிரவு 12:30 மணியளவில் மீண்டும் அந்த குடும்பத்தினரிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார...

திருப்பூர் ஜம்மனை ஓடை கரையில் ரூ.30 கோடி கட்டிடங்கள் இடிப்பு... வருவாய் துறை, மாநகராட்சி அதிரடி

Image
 திருப்பூரில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 30 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வருவாய் துறையினர் முன்னிலையில் இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் இன்று தொடங்கியது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நீர் நிலை ஆக்கிரமிப்பு இடங்கள் கணக்கெடுக்கப்பட்ட அவற்றை அப்புறப்படுத்த மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தனர். அதன் அடிப்படையில் வருவாய்த் துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள்  கணக்கெடுக்கப்பட்டது.  திருப்பூர் ஜம்முனை பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டு ஏற்கனவே இரண்டு முறை சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படாமல் இருந்துள்ளது.  இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறையினர் முன்னிலையில் இன்று அதிரடியாக ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.  ஜம்மனை ஓடையை ஒட்டியுள்ள பகுதிகளில் 25 உரிமையாளர்களுக்கு சொந்தமான மூன்று மற்றும் நான்கு மாடி கட்டிடங்கள் என சுமார் 30 கோடிக்கும் அதிக மதிப...

தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு - மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி எச்சரிக்கை.!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 2023 புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி நாளை (31.12.2022) இரவு மற்றும் 2023ம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் தினமான ஞாயிற்றுகிழமை அன்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, 1) தூத்துக்குடியில் உள்ள பீச் ரோடு, அங்குள்ள பூங்காக்கள், புதிய துறைமுகம், தெர்மல்நகர் பீச் உட்பட கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கடல்நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட அனுமதி இல்லை. 2) நாளை 31.12.2022 அன்று இரவு பொதுமக்கள் பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். 3) புத்தாண்டு அன்று நள்ளிரவு 1 மணிக்குமேல் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. 4) புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்” செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்களை கைது செய்து, பைக்க...

சுரங்கச் சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய நிலக்கரித் துறை 8 சுற்றுச்சூழல் பூங்காக்களை உருவாக்கத் திட்டம்.!

Image
  மத்திய நிலக்கரி அமைச்சகம் சுரங்க நிலத்தை மறுபயன்பாட்டின் மூலம் சுற்றுச்சூழல் பூங்காக்களை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் 8 பூங்காக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் மேலும் 2 பூங்காக்களின் பணிகள் முழுமை பெறும். மத்திய நிலக்கரி, சுரங்கம், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் திரு.பிரலாத் ஜோஷி, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெஸ்ட்டன் கோல்பீல்டுஸ் லிமிடெட்டின் ஜூரே/ பால கங்காதர திலக் சுற்றுச்சூழல் பூங்காவை திறந்து வைத்தார். நெய்வேலி லிக்னெட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம், புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்துடன் சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சுரங்கம்-1,சுரங்கம்-2 ஆகியவற்றில் சுற்றுச்சூழல் பூங்காக்களை உருவாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பற்றியது ஆகும். நார்தன் கோல்பீல்டுஸ் லிமிடெட் மற்றும் மத்தியப் பிரதேச சுற்றுலா வாரியம் சிங்குருலியில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரைய...

நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இனி கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.! - அமைச்சர் பொன்முடி

Image
நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இனி கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.! - அமைச்சர் பொன்முடி  பரிந்துரையின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட மாட்டாது என அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

ஆங் சான் சூகி ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தீர்ப்பளித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவு.!

Image
  இராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் உள்ள நீதிமன்றம், பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தீர்ப்பளித்து மேலும் ஏழு ஆண்டுகள் சிறையில் அடைத்தது;  ஏற்கனவே 26 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சூகி இதன்மூலம் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

NIA has arrested a practicing Kerala High Court Advocate!

Image
  National Investigation Agency has arrested a practicing Kerala High Court advocate and Popular Front of India (PFI) Martial Arts and Hit Squad Trainer as 14th accused in a case linked to the banned outfit, the agency said on Friday. The accused identified as Mohammed Mubarak Al, a resident of Ernakulam district in Kerala, was arrested on Thursday subsequent to the searches conducted at 56 locations in Kerala.

கேரள PFI வழக்கு: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் 14வது குற்றவாளியாக கைது.!

Image
புது தில்லி கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) தற்காப்புக்கலைகள் மற்றும் ஹிட் ஸ்குவாட் பயிற்சியாளரும் தடை செய்யப்பட்ட அணியுடன் தொடர்புடைய வழக்கில் 14-வது குற்றவாளியாக கைது செய்து உள்ளதாக NIA நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது முபாரக் ஏஐ என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, கேரளாவில் 56 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார் .

திருப்பூரில் வைகுண்ட ஏகாதசிக்கு தயாராகும் ஒரு 1.20 லட்சம் லட்டுகள்... தயாரிப்பு பணிகளில் 520 பேர் சுறுசுறுப்பு

Image
 வைகுண்ட ஏகாதசியன்று பக்தர்களுக்கு வழங்குவதற்காக திருப்பூரில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணியில் 520 பேர் ஈடுபட்டு வருகிறார்கள். ஜனவரி 2 ஆம் தேதி வரவுள்ள வைகுண்ட ஏகாதசி நாளில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்காக பெருமாள் கோவில்களில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகாலை 5 மணியளவில் நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக திருப்பூர் ஶ்ரீ வாரி டிரஸ்ட் சார்பில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் லட்டுகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக திருப்பூர் காமாட்சி அம்மன் கல்யாண மண்டபத்தில் 5 அடுப்புகள் மூலம் 1 டன் கடலை மாவு, 2 டன் சர்க்கரை 1000 லிட்டர் ரீபைண்ட் ஆயில், 105 லிட்டர் நெய் மற்றும் முந்திரி, திராட்சை உள்ளிட்ட மூலப் பொருட்கள் கொண்டு லட்டு தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் 20 சமையல் கலைஞ...

ஜன.13 ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் - தமிழக அரசு

Image
  பொங்கல் பரிசினை வழங்குவதற்காக ஜன. 13ம் தேதி ரேஷன் கடைகளுக்கு பணிநாளாக அறிவிப்பு. நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் பணம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு.! பொங்கல் பரிசுப் பொருட்கள், ரொக்கப் பணம் விநியோகம் 9ம் தேதிக்கு பின் தொடங்கப்பட வேண்டும்; பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்க வசதியாக வரும் 13ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும்; பொங்கல் பரிசுப் பொருட்கள் மக்களை சேர்வதற்கான பொறுப்பு மாவட்ட ஆட்சியர்கள் உடையது என உத்தரவு

கார் விபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி.!

Image
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரூர்க்கி பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயம் அடைந்துள்ளார்.  உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு காரில் திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரேசில் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால் காலமானார்.!

Image
  பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் பீலே (82). பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஓராண்டாக அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் பீலேவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படாத நிலையே நீடித்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பீலே காலமானதை அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 3 முறை உலகக் கோப்பை கால்பந்து (1958, 1962, 1970) வென்ற அணியில் இடம் பெற்றவர் பீலே. 16 வயதில் பிரேசில் அணியில் அறிமுகமான பீலே, தனது நாட்டு அணியில் 1971ஆம் ஆண்டு வரை இடம்பெற்றிருந்தார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். ஃபிஃபா உலகக் கோப்பைகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் என்ற கின்னஸ் புத்தகத்தில் பீலே இடம்பெற்றிருந்தார். கால்பந்திலிருந்த...

"ரிமோட் EVM இந்திய தேர்தல் ஜனநாயகத்தையே சீர்குலைத்து விடும்”- திருமாவளவன், எம்.பி.

Image
  66 மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்து வாழ்வோர், தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே வாக்களிக்கும் விதமாக 'ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்' அறிமுகம் செய்யப்படும் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்தியாவில் சுமார் 30 கோடி பேர் இப்படி புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அவர்களின் வாக்குகளை குறிவைத்தே இந்த எந்திரம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே EVMகளில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், | ரிமோட் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் | அறிமுகம் செய்தால் இந்திய தேர்தல் ஜனநாயகத்தையே அது சீர்குலைத்து விடும். எனவே, இந்த முயற்சியைக் கைவிட வேண்டும்! திருமாவளவன், எம்.பி. வி.சி.க. தலைவர்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மோடி காலமானார்.

Image
  உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்(வயது 100) மோடி காலமானார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் கடந்த 28ந் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரதமர் மோடி மருத்துவமனைக்கு சென்று தனது தாயார் ஹீராபெனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.  அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமது தாயார் காலமானதாக பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

முதியவரை மிரட்டி பணம் பறித்த இந்து மக்கள் கட்சியின் மாநகர துணைத்தலைவர் கைது.!

Image
  சென்னை திருவல்லிக்கேணியில் முதியவரை மிரட்டி பணம் பறித்த இந்து மக்கள் கட்சியின் மாநகர துணைத்தலைவர் மகேஷ் (32) கைது செய்யப்பட்டார்.  கோயில் இடங்களில் வாடகைக்கு குடியிருப்போரை மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டவர் மகேஷ் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இவர் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு வசிக்கும் முதியவர் சங்கருக்கு மிரட்டல் விடுத்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைதானது உள்பட மகேஷ் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆபரணக் கற்கள் மற்றும் நகைகள் முதல் ஏற்றுமதி கொடியசைத்து துவக்கி வைப்பு.!

Image
  இந்தியா – ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வணிக ஒப்பந்தத்தின் கீழ் நாட்டின் பல்வேறு துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வாயிலாக முதல் ஏற்றுமதி இன்று கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து நகைகள் மற்றும் ஆபரணக் கற்கள் ஆஸ்திரேலியாவிற்கு முதன் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த நிகழ்வை அயல் வர்த்தக பொது இயக்குனரக மண்டல கூடுதல் இயக்குனர் ராஜலட்சுமி தேவராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பொருளாதார தடைகளை நீக்குவதற்காக இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. சுங்கத்தீர்வை அல்லாத உடனடி நடவடிக்கைகள் மூலம் இந்தியர்களின் ஏற்றுமதிக்கான போட்டித்திறன் மற்றும் அதிகளவிலான பங்குச்சந்தை அதிகரிக்கும் என அவர் கூறினார். இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் அதிகரிப்புடன் இந்திய உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு உழைப்பு மிகுந்த துறைகளுக்கு அதிக பலன் தருகிறது என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், விமான சரக்கு சுங்கவரி கூடுதல் ஆணையர் மகேந்திர வர்மா, துணை ஆணையர் ஏ.வி.நரசிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்...

உள்நாட்டு புலம்பெயர்ந்தோர் இனி இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க வசதி.! - திட்டத்தை செயல்படுத்த தயார் நிலையில் தேர்தல் ஆணையம்.!

Image
  உள்நாட்டு புலம்பெயர்ந்தோர் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க வகைசெய்யும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த தயார் நிலையில் தேர்தல் ஆணையம்: புலம் பெயர்ந்த வாக்காளர் வாக்களிக்க சொந்த மாநிலத்துக்கு பயணம் செய்ய வேண்டியதில்லை நவீன தொழில்நுட்ப யுகத்தில் புலம்பெயர்ந்தோர் இருந்த இடத்தில் இருந்தவாறு வாக்களிக்கும் நடைமுறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.  30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யாதது கவலை அளிக்கும் விஷயம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. வாக்களிக்கும் உரிமையை சரிவர பயன்படுத்துவதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது. நாட்டுக்குள் புலம் பெயர்ந்தவர்கள் குறித்த தரவுகள் இல்லாத நிலையில், இருக்கின்ற தரவுகளை வைத்து ஆய்வு செய்ததில், 85 சதவீத புலம் பெயர்ந்தோர் உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு பணி மற்றும் இதர காரணங்களுக்காக சென்றிருப்பது தெரியவந்துள்ளது.   உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வசித...

தொழிலதிபர் மகள் ராதிகா மெர்ச்சண்டை கரம் பிடிக்கும் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி.!

Image
  இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளதாக குடும்பத்தினர் இன்று (வியாழக்கிழமை) அறிவித்தனர். நிச்சயதார்த்த விழா (வியாழன்) இன்றுன்று ராஜஸ்தானில் உள்ள நாததுவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு இளம் தம்பதியினர் தங்களது வரவிருக்கும் இணைவுக்காக ஸ்ரீநாத்ஜியின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக கோவிலில் நாளை கழித்ததாக குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருமணம் எப்போது நடைபெறும் என்று தெரிவிக்கவில்லை.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.  தூத்துக்குடி அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் நகர்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள 849 சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் ரூ.54.93 கோடியும், 8 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.4.74 கோடி வங்கி பெருங்கடனும், 27 சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.40.50 இலட்சமும் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 33 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.63 இலட்சமும் உள்பட மொத்தம் 917 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.70 கோடி கடன் உதவிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார்.  விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, திட்ட அலுவலர் மகளிர் திட்டம் வீரபத்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

"தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளிலும் ஜனவரியில் சாலை பணிகள் முழுமையாக தொடங்கும் " மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. அதிமுக எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி பேசுகையில்: கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதாக தகவல் வருகிறது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் என்ன நிலையில் இருக்கிறது. மக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேட்டார்.  அதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி ,மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தயார் நிலையில் உள்ளன. சுகாதார அதிகாரிகளும், மக்கள் நலன் கருதி விழிப்புணர்வோடு பணியாற்றி வருகின்றனர் என்றார். பின்னர் மன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மேயர் அளித்த பதில்... மகேஸ்வரி, திமுக: எங்களது பகுதியில் கால்வாய், சாலைகள் உள்ளிட்டவைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.  மேயர்: வார்டு எண் 22, 23, 24, 25 உள்ளிட்ட 5 வார்டுகளில் உங்களது கோரிக்கை பணிகள் விரைவில் நடைபெற உள்ளது என்று கூறியதோடு, உதவி செயற்பொறியாளர் பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவித்தார் திமுக கவுன்சிலர்கள்: பொண்ணப்பன்...

தாயை பார்க்க படக்குழுவுடன் சென்ற பிரதமர் மோடி.! - இனையத்தில் வைரலான வீடியோ.!

Image
  பிரதமர் நரேந்திர மோடியின் தாய் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை பார்க்கச் சென்ற பிரதமர் மோடி படக் குழுவையும் கையோடு அழைத்துச் சென்றது இணையத்தில் கடும் விமர்சனங்களை உண்டாக்தியுள்ளது. படக்குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. https://twitter.com/NAR_Handle/status/1608110105782005760?t=_VWQy6X_JLjvNpV1Xkep7w&s=19 பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் குஜராத்தில் வசித்து வருகிறார். 100 வயதாகும் இவரை, குஜராத் செல்லும்போது பிரதமர் மோடி சந்தித்து புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில், புதன்கிழமை காலை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஹீராபென், குஜராத்தில் உள்ள  யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில், தாயை பார்க்கச் சென்ற மோடியுடன் படக்குழுவினரும் மருத்துவமனைக்கு சென்ற விடியோ தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது. உலகிலேயே மருத்துவமனையில் இருக்கும் தாயை பார்க்க படக்குழுவினருடன் மோடியைத் தவிர வேறு யாரும் சென்றிருக்க மாட்டார்கள் என டிவிட்டரில் வ...

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குடித்த 18 உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் உயிரிழப்பு.! - உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் குற்றசாட்டு.!

Image
  உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இறந்த 18 குழந்தைகளும் நொய்டாவை தளமாகக் கொண்ட மரியன் பயோடெக் தயாரித்த Doc-1 Max என்ற இருமல் மருந்தை உட்கொண்டதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து இந்தியா விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும் மாதிரிகள் பரிசோதிக்கப்படும் வரை மருந்து நிறுவனத்தின் நொய்டா பிரிவில் இருமல் சிரப்பின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் ஒரு தொகுதி சிரப்களின் ஆய்வக சோதனைகளில் "எத்திலீன் கிளைகோலின் ", என்னும் நச்சுப் பொருள் கண்டறியப்பட்டது.  மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலேயே குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது மருந்தாளுனர்களின் ஆலோசனையின் பேரில், குழந்தைகளுக்கான வழக்கமான அளவைத் தாண்டிய டோஸ்களுடன் இந்த சிரப் வழங்கப்பட்டதாகவும் அது கூறியது.