மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். 

தூத்துக்குடி அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் நகர்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள 849 சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் ரூ.54.93 கோடியும், 8 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.4.74 கோடி வங்கி பெருங்கடனும், 27 சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.40.50 இலட்சமும் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 33 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.63 இலட்சமும் உள்பட மொத்தம் 917 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.70 கோடி கடன் உதவிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார். 

விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, திட்ட அலுவலர் மகளிர் திட்டம் வீரபத்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி